பழமை போற்றுதும்

பா வானதி வேதா. இலங்காதிலகம் - டென்மார்க்


மூத்தோரை மதிக்கும் பண்பு
மூடத்தனம் இல்லா மாண்பு
மூடமதியான பாராமுகம் அகங்காரம்.
மூக்கறுத்தலான முகக்கடுப்பு நரகம்.
வயதிற்கு மரியாதை அளிக்கும்
வழிநடத்தும் பெற்றோர் அறிவுரை
வறுமையற்று வாரிசுகளிற்கு அவசியம்
வயதெல்லை இங்கு தேவையில்லை

ஆசிய கலாச்சாரம் கௌரவ
ஆசீர்வாதப் படிகப் பாதை!
கூசிடத் தெவையற்ற குணமிதை
வீசிடும் மனதைப் புதை!
மேற்குலகில் கலந்து சிறந்த
மேன்மைக் குணங்கள் மறந்த
தலைமுறைக்கு உரைக்க நிறைந்த
மலையாம் மனம் வளர்க!