காத்திருப்ப

நோர்வே நக்கீரா
பிந்திய அந்தியில்
முந்தி விளக்கேற்றும் பெண்மை.
ஊரில் எல்லையில்
காரிருள் கொல்லையில்
அணைப்புக்காய் அணையும் விளக்குகள்.

இருபாலும் ஒருபாலாக
சோசலிசம் சமத்துவப்பாலாகும்
அடிமைப்பட்ட பெண்மைக்குள்
ஆண்மை உயிர்க்கும்.

இராமன் இராவணன் இருவரின்
சமவகிபாகத்தில்
தியாகத்தின் யாகம் ஆகும்!

கட்டில் பிணமாக
ஒரு தற்கொலை நிறைவேறும்!

பசியால் புசிக்கப்படும் மாமிசம்
காசுக்கடவுளால் மீண்டும் உயிர்க்கும்

ம் ம் காசு வேசியாகும்

பேசும் பிணம் ஒன்று
இன்னொரு இராமனுக்காய் காத்திருக்கும்
விடியலைத் தேடி.......!nackeera@gmail.com