கர்ப்பக்கிரகத்தில் கடவுள்

கமலினிகதிரகோயில் தரையில் உருண்டும்
விழுந்து விழுந்து வணங்கியும்
கற்புரத்தை ஏற்று தொட்டு வணங்கியும்
நந்தியின் காதில் ஏதோ ஓதியும்
உண்டியலின் வாயினிலே
பணத்தாள்களைத் திணித்தும்
இலிங்கத்தின் மீதிருந்த மலரைக்
கண்ணில் ஒற்றித் தலைக்கு வைத்தும்
பக்தி செய்கிறோம் உன்னிடம்
நாம் கேட்டதைத் தருவாய் நீயென
பேரம் பேசும் மனிதனின் ‘பக்தி‘யில்
கரைந்து போக முடியாமல்
மிரண்டுபோய் செய்வதறியாது நிற்கிறார்
கர்ப்பகக்கிரகத்தில் கடவுள்.