நீ என்பதும் நான் என்பதும்....

ஆனந்தி
நீ என்பதில் நிறைந்தே
இருக்கிறது நான் என்பதும்....

வான்தொட்டு நிற்க்கிறது
நீ கடந்து விட்ட பூங்காக்கள்....

நாம் என்பதில்
வர்ணம் பூசிக்கொள்கிறது
காதல்....

செதுங்கிய தடங்களில் எல்லாம்
உன் செய்கைகள் ஞாபங்களாகவே....

நீ நிறைந்த
பரிசுப்பொருட்களும்,
வெட்கத்தையே பரிசளிக்கிறது....

நான் என்பதும்,
நீ என்பதும்
நாம் என்பதற்க்குள் புலம்
பெயர்ந்துவிடுகிறது
மொத்தமாய்....
ananthi.ramyaa@gmail.com