உலக புகையிலை தினம் (மே-31)

கவிஞர் ப.கண்ணன்சேகர்
தெரிந்தே மரணத்தை தேடுதல் சரியோ
                     
தீங்கான புகையிலை தீண்டுதல் முறையோ
மரித்திட இளமையில் மாறுவது நன்றோ
                     
மயக்கிடும் போதையே மரணமே அன்றோ
திரியென கருகிட தீயினில் விழுவதோ
                     
திருந்திட முடியாமல் தினந்தோறும் அழுவதோ
செரிவான நலனில் சேர்ந்திடும் வாழ்வே
                     
சென்றிடும் பாதைக்கு செழுமையின் சூழ்வே

புகையிலை பயன்பாடு புற்றுநோய் தந்திடும்
                     
புகைப்பது தொடர்ந்திட பொன்னேழில் சென்றிடும்
வகையென நோய்களும் வரிசையில் நின்றிடும்
                       
வாழ்விலே நிம்மதி வராமல் போய்விடும்
பகையாகும் நலத்தினால் பலியாகும் உடல்நிலை
                       
பயனற்ற பழக்கத்தால் பாழாகும் மனநிலை
நகைத்திடும் உலகிலே நல்வழி சென்றிடு
                       
நைந்துநீ போகாமல் நலம்காத்து வென்றிடு

ஆண்டுக்கு மானிடர் ஆயிரமாய் உயிரிழப்பு
                     
அழிவுகள் தொடர்ந்திட அகிலத்தில் யார்பொறுப்பு
வேண்டியே கேட்கிறேன் வேண்டாமே புகையிலை
                     
வீழ்ந்துநீ துடிப்பதால் வந்திடுமோ நல்நிலை
மீண்டுநீ வந்திட மேதினியில் இடமுண்டு
                       
மெத்தனம் காட்டினால் மோசமாக வழியுண்டு
தூண்டிடும் அன்பாலே தூய்மையாய் மாறலாம்
                     
தொலைத்திட்ட ஆரோக்கியம் தொட்டுநீ வாழலாம்..கண்ணன்சேகர, திமிரி. பேச : 9894976159.