சேராத நம்முறவ நெனச்சி..

த.ராஜ்சுகா


பொங்கிவார அன்ப
பொத்திவைக்க தெரியல
பொசுக்குனு வரும் அழுகையை
அடக்கிவைக்க முடியல...

கண்களைக் கட்டி காட்சிய
ஒளிச்சு வைக்க தெரியல
கனவுக்குள்ள உன்ன
தள்ளிவைக்க முடியல....

வரமுறைக்குள்ள உன்ன
காதலிக்க தெரியல
வரவர நானும்
நானாக இருக்க முடியல....

நெஞ்சுக்குழி நேசத்த
புதைச்சுவக்க தெரியல
நிறைஞ்சுபோன உன்நினைவ
தூக்கிவீச முடியல...

காலநேரம் பார்த்து
கண்ணடிக்க தெரியல
சாஸ்திரத்தில நின்னுகிட்டு
சட்டம்பேச முடியல....

ஊர் உலகத்த நெனச்சி
உன்ன வெறுக்க தெரியல
உறவுக பகைக்குமோன்னு
உயிர வெறுக்க முடியல...

சேர்த்து வையு சாமின்னு
விரதமிருக்க தெரியல
சேராத நம்முறவ நெனச்சி
அழாம இருக்கமுடியல....raj.suga89@yahoo.com