ஹைக்கூ கவிதைகள்

தக்ஷன், தஞ்சை


இலையுதிர்க்கால மழை
நின்றதும் பூக்கிறது கிளைகளெங்கும்
நீர்பூக்கள்!
________

புத்தகத் திருவிழாவில்
திருடுபோகிறது
மனம்!
_______

ரோஜாவைப் பறித்தேன்
கைநிறைய கிடைத்தது
குருதிப்பூக்கள்!
______

கிளையில் அமர்ந்தபின்
பறக்கத் தொடங்கியது
குயிலின் பாட்டு!
______

பிரிந்தபின்பும்
நீங்கவேயில்லை
மண்ணில் வேர் வாசம்!
______

வயிறு பெருக்கிறது
வறுமையால்...
வாடகைத் தாய்!
_____

சோகப் பாடலா
தவளைகளே...
பாவம் கொத்தனார்கள்!
____

சினத்துடன் அய்யனார்
அதனாலொன்றும் பயமில்லை
அரிவாளில் எச்சமிடும் பறவைக்கு!
_____

உடைந்த கதவு
ஓட்டைவழி நுழைகிறது
காலைப்பனி!
_______

கடற்கரை சுண்டல்
லேசாய் சுடுகிறது
சிறுவனை நினைத்த மனசு!



dhakshanhaiku@gmail.com