அழகியல் எனில் அது உன் இயல்

வித்யாசாகர்

ன் காதல் கதைசொல்ல
உன் காதல் தந்தாய்;
உன் கனவோடு எனைமட்டும்
உயிராகக் கொண்டாய்
,

நதி என்றால் நீர் போல
நானென்றால் நீ யானாய்
,
நீ மட்டும் நீ மட்டுமே – என்
பிறக்காத மகளானாய்;

நிறமோ அழகோ
அதலாம் வேண்டாத இடமானாய்;
மனதை அன்பால் வென்ற
அழகான அவளானாய்;

அலைபேசும் கடல்போல
இனி தீராது உன் பேச்சு
,
அழகியல் பொருளியல் போல
மனைவியியல் நீ யாச்சு;

உடல்கூசும் நொடிகூட
உனக்கென்னைத் தெரியும்
,
எனக்குள்ளே வலித்தாலும்
உனக்கே அது முதலில் புரியும்;

சிறகேதும் இல்லாது
நெடுவானம் போவேன்
,
என்
வானத்தின் வரைகூட
உன்மட்டும் பெண்ணே;

உயிர்மூச்சு சுட்டாலும்
உயிர்விட்டுப் போவாய்;
அனல்காற்று தீண்டாது
அமுதூட்டும் தாய் நீ!!


 

vidhyasagar1976@gmail.com