ஏழைகட்கு உதவுவோம்

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

பூனைகண் மூடிய போதிலி ருட்டெனப் போம்ஆமோ?
யானைதன் வாலினால் நுண்ணுளம்(பு) போட்டிடஎண்ணாதே!
தேனது கட்டிய கூட்டினில் உள்ளவை தீனாமோ?
ஆன, வற்றெலாம் ஆக்கலின் தன்மைகள் ஆகாதே?

ஏடுஇ னத்தொடும் ஏற்றவர் வாழ்ந்திட இல்லாதே
கூடுக லைந்திடக் கூற்றவன் மாற்றிய கூத்தாமே
நாடுக டந்திட நாடிய திப்புலம் நல்லோராய்
ஊடும லிந்திட எம்துயர் ஆனதும் ஓண்ணாதே!

செல்வமி ருக்கலாம் சித்தமி ருக்கலாம் சிக்காடாச்
சொல்மனப் பொற்கலம் சிந்துப டிக்கையில் திக்காகும்
நல்மனத் தோடவர் நாதியற் றோரென நத்தாகும்
உள்ளமு ருக்கிடச் சொல்லும டைக்கலம் ஒவ்வாதே!

வாழவ ழிப்படு வண்ணமி லாதுயிர் வந்தாரே
கேழ்வர கின்றிய கஞ்சியும் இல்லையென் றாமாடிச்
சூழவும் நம்மவர் சிக்கிய ழிந்திடுஞ் சொல்லாமோர்
வீழர வென்றிட வித்துய(ர்) ரானதும் வீழ்வேயாம்!

காடும ழிந்திடக் கட்டையெ ரிந்திடக் காட்டாறுங்
கேடுநி னைத்திடக் கொள்ளியைச் சிந்திடுங் கூட்டாமோ?
பாடுசு தந்திரம் பஞ்சப ரம்பரை பற்றோராய்
நாடுசி றக்கவே நல்லவ யிற்றுண வாக்கீரோ?

ஆடலும் பாடலும் அன்னமிட் டோமென ஆப்போடிச்
தேடலுஞ் சூடலும் சொல்லிய வாறெலாஞ் செய்யாராய்
மாடநி னைந்தவர் ஊற்றிய செய்கையின் மன்னாடல்
கூடவே நின்றிடுங் கூறுபொய் யாம்வெறுங் கூத்தாமே!

பாடுபெ ரும்பணம் பற்றிய தாற்குடில் பட்டாகிக்
கோடுகி ழித்திடக் கொண்டவ ராய்ப்பலர் கொண்டாடும்
மூடுகின் றார்மனம் மொய்யரும் பாகிட மூத்தோராய்
வாடுகின் றார்பலர் வாழ்ந்திடத் தம்பணி வாக்கீரோ?


வாய்ப்பாடு: நான்கு சந்த மாத்திரை கொண்ட நான்கு கூவிளமும் சக ஆறு சந்த மாத்திரை கொண்ட தேமாங்காய்ச் சீரும் உடைத்தான சந்தக் கலித்துறை இதுவாம்.

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்