அற்புதம் சமைக்கும் கல்வி

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
 

ருகின்ற நேரமே வருகின்ற வண்ணமே
           
வைகறை வெளுக்கு மென்பேன்
மானாடும்
விந்தையில் மதியோடு நின்றவர்
           
மன்பதை சிறக்கு மென்பேன்
தருகின்ற
வாறது தந்தாளுங் காலமே
           
தடங்கடந் தாடி வருமே
தடையேதும்
ஊரினும் தடுத்தாள நிற்பினும்
           
சண்பகத் தூறும் அறிவே
பெருமன்றங்
கனிந்திடப் புகழோடுஞ் சீவியாய்
           
பிடித்துவந் திருத்து மேதான்
பேராசார்க்
குண்டெனும் பொதியோடுந் தத்துவம்
           
பொங்கியே வருவ தேதான்
கருவாகுங்
கல்வியின் கலைஞானப் பெட்டகம்
           
கணக்கென எழுதி வைக்கும்
கடிவாள
மொய்ப்பிலுங் கடுங்கால மாயினும்
           
கருவறை பூத்தி ருக்கும்!

கலைவாழுஞ் செந்தமிழ்க் கல்லூரிப் பொதிகையிற்
           
கல்வியும் இன்ன பிறவும்
கட்டாகி
மொழிந்திடும் கனிப்பாறை முத்தமிழ்
           
கவினொடுந் திரளு மாப்போல்
அலையாகு
மெண்ணமாய் அப்பாலுக் குரைத்திடும்
           
அறிவாகுஞ் சுரங்க மாகும்
அரனேறித்
தமிழொடும் அறைகூவ லாக்கிடும்
           
அரங்கேறுஞ் சந்த மாகும்
மலையேறி
நந்நகர் வார்ப்பெல்லாம் செந்தமிழ்
           
வைப்போடும் பயக்கு மோசை
வரையேறி
ஒளிர்ந்திடும் கரையாத சூரியன்
           
வளர்காவி(ல்) ஒளிருங் காலை
விலையென்ற
கல்வியை வலையிட்டுச் சார்ந்துமே
           
வித்தெனப் பூக்க(ள்) வைத்தார்
மெய்யென்ற
பூமியில் விழுகின்ற காவியம்
           
விருட்சமாய் எழுத வைத்தார்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்