கனவுகளை விற்பனை செய்பவர் 

தமிழ்மணவாளன்
 

றக்கம் நழுவும் இரவின் தலையணையில்
இறுக்கித் திணிக்கப்பட்டிருக்கும்
இலவம் பஞ்சாய்,
கனவுகளை விற்பவர்கள்.

மூடிவைக்க முடியாத புத்தகத்தின்
வரிகளினூடாகவும்
இசைத்தட்டின் ஒழுங்கமைந்த முழுவட்டக்
கோடுகளாகவும்
தேனென வழியும் அலைபேசி வழியும்
மெஸெஞ்சர் வாட்ஸாப் எழுப்பும்
பீப் ஒலியெனவும்
உறக்கத்திற்குப் பின்
நிலைபெற வேண்டிய யுத்திகளோடு.
இரவுகள் என்பன கனவின் சந்தை.
பகற்கனவும் பலிக்குமென
உச்சி காலப் பொழுதொன்றின்
சோர்வைக் கைகுட்டையில் துடைத்து நிற்க,
விருப்பமறிந்து
சர்க்கரை குறைவாய் ஸ்ட்ராங்காய்
அட, எத்தனை லாவகமாய் ஆற்றி
இளஞ்சூடாக
கண்ணாடித் தம்ளரிர் நுரைததும்ப
கனவினை நிரப்பித் தருகிறார் டீ மாஸ்டர்.
                                        
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்