மறைந்து மறைந்து பார்க்காதே...

கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

ன் அலட்சியம் கோரும்
அதீத அன்பு பற்றி தெரியும் எனக்கு...
மறைந்து பார்க்கும் மாயமும் புரியாமல் இல்லை...

உன்னைத் தவிர யார் எனக்கு...

காட்டும் அன்பு போதாமல் கதறும்
களவாணிப் பயல் நீ...
கண்ணியம் காப்பதாய் சொல்லி தள்ளி வைத்துக் குதறி எடுக்கிறாய்...

தந்திரம் விளங்காத அப்பாவி என்னை
தண்டிக்காதே தவிக்கிறேன்...
வல்லின அன்பின் இறுக்கம்
வலிக்கிறது...

கடிக்கும் குழந்தையைக் கொஞ்சும்
லாவகத் தாயாய் நடிக்கிறேன்...
எப்போது அறிவாய் என்னை உடல் வேகிறது...
தப்பாகக் குழம்பி எனக்கு மனம் நோகிறது...!!!
 

கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்