இதற்குமேல்...

கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

அள்ளி அள்ளிக் கொடுத்து விட்டு
அள்ளிக்
கொண்டும் போகிறாய்...
அந்த
வெறுமை நிறைக்கவும்
நீதான்
வேண்டும்...

மழை நேரத்து தேனீரின் இதம்
வெது
வெதுப்பான மன ஒத்தடம்
வழிய
வழிய வார்த்தைகளற்ற
கவிதைகள்
...

கரகரப்புக் கொறிப்புக்கு  சீண்டல்கள்...
போர்த்துக்
கொள்ள கொஞ்சம் காதல்...
பொழுது
போக சின்ன மோதல்...

கடனாய் துளிப் பாடல் குரலாய்த் தரக் குயில்...
ஈர
இறகு ஈசல் இனிமை கூட்டும் தூறல்... இதற்குமேல் என்ன வேண்டும் நீ திரும்பிவர...
எனக்குத்
திருப்பித்தர...!!!


கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்