என்னதான் வேண்டும்...

கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி


நடு வயிற்றில் உருண்ட சிலீர் பந்து
சொல்லிச் சென்றது காதல் நிற்பது
இங்குதானென்று...

குரல் கேட்டு குளிர்ந்த செவியின்
கொட்டம் அடங்காமல் அங்கு எப்படி
இன்பம் இடமாற்றம்...

கோயில் உறங்கும் புறாவுக்கு
கிடைத்த இலவச மோட்சமாய்...
எனக்கான நீ உனக்கான நான்...

புரியாத மாற்றம் சுகமான ஏக்கம்
நெகிழும் நெஞ்சில் இறகுபோல் பாரம்...

மீண்டும் பேசேன்...கேட்க வேண்டும்
தீண்டும் ஆசை...பார்க்கத் தூண்டும்...!!!


கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்