பெய்திருக்கலாம் ஒரு சிறு மழை...

கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழிஒரு மழை நாளின் மையலுக்கு ஏங்கும்
அந்தத் தையலுக்காகப் பெய்திருக்கலாம் ஒரு சிறு மழை...

கருவுக்குக் காத்திருக்கும் மலட்டு வயிறாய் காளான் கனவோடு மண்ணில் மறைந்திருக்கும் விதைகளுக்காய்...

மனைவியோடு சண்டையிட்டு
தெருக்கோடிக் கடையில் நிற்கும் கணவன் வீடு திரும்புவதற்காய்...

கப்பலாகிக் காத்திருக்கும் காகிதத்தின் கம்பீரத்துக்காய்...

காமத்தை உள்ளடக்கிக் காதல் பொய்யில்
கண் சொக்கும் காளையரின் கிளர்ச்சிக்காய்...

குறைந்தது...
கழுதைகளின் கல்யாண வேலையை
கடவுள் பார்க்காமல்இருப்பதற்காய்...

பெய்திருக்கலாம் ஒரு சிறு மழை...!!!!


கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்