வேறென்ன ?

சோ.பொ.கமலப்பிரியா, அறந்தாங்கி
பேகன்போல
மயிலுக்கு
போர்வை தரவேண்டாம் !

பாரிபோல
முல்லைக்கு
தேர் தரவேண்டாம் !

சிபிபோல
புறாவுக்கு
சதை தரவேண்டாம் !

மனதில் ஈரம்மட்டும்
வார்ப்போம்

அதில் பாசம்கொஞ்சம்
விதைப்போம் !

உதவி கோரி
உயரும் கைகளுக்கு
இல்லையென்று சொல்லாத
பண்பு வளர்ப்போம் !

அன்பு கொண்ட
உள்ளத்தைவிட
அகிலத்தில் பெரியது
வேறென்ன ?
 


 

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்