தமிழ்போலவாழ்ந்திருப்பார்!  (கவிதாஞ்சலி)

மாவிலிமைந்தன் சி.சண்முகராஜானியஇலக் கணமாக, இளந்தளிரின் இதமாகக்,
கனிமழலைமொழியாகக்,கரும்பினதுசாறாகப்,
பனிநீரின் குளிராகப் பார்த்திருந்தோம் பண்டிதரை
இனியிவரின் இடத்தினிலேஎவரைவைத்துப் பார்த்திருப்போம்?

வெற்றாகக் கதையளக்கும் வேடிக்கைமனிதரல்லக்
கற்றறிந்தோன் தானென்றகனம்கொண்டஒருவரல்லப்
பெற்றுயர்ந்தபதவிகளாற் பெருமைகொண்டஆளுமல்ல
முற்றாகஎளிமையிலேமுழுமையுற்றமனிதரிவர்!

தெள்ளுதமிழ்ப் பாலெடுத்துத் தேன்கவிதைசேர்த்துவைத்து
அள்ளியள்ளித் தான்கொடுத்தார் அருந்திமிகக் களித்திருந்தோம்
வெள்ளியலைக் கடல்போலும் விரிந்தவான் வெளிபோலும்
உள்ளன்புகொண்டிருந்தஉத்தமனைநாமிழந்தோம்!

நல்லாசான் அலெக்சாந்தர் நலமடைவார் என்றிருந்தோம்
பல்லாண்டுவாழ்ந்திருந்தேபணிபுரிவார் என்றிருந்தோம்
சொல்லாண்ட இலக்கியத்தின் சுவைதருவார் என்றிருந்தோம்
வெல்வதுதான் எப்போதும் விதியெனில்நாம் என்செய்வோம்?

மக்களுக்குப் பணிசெய்யும் மாண்பினர்க்குமரணமில்லை!
திக்கற்றஏழைகளின் துயர்துடைத்தோர் அழிவதில்லை!
எக்காலம் ஆனாலும் இனியதமிழ் வாழ்ந்திருக்கும்!
அக்காலமெல்லாமேஅலெக்சாந்தர் வாழ்ந்திருப்பார்!
 


மாவிலிமைந்தன் சி.சண்முகராஜா

  

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்