நீர் பெருமாங்குப்பம்

சா.சம்பத்து

லகம்
அடுத்ததாக
எழுதக் காத்திருக்கும்
கருப்புக்
காவியத்தின்
பாடுபொருள்
நீர்...!

உலகத்தின்
ஒட்டுமொத்த
அழுக்கையும்
தொண்டையில் வைத்து
திணறிக்கொண்டிருக்கும்
நீரின் மீது
உலகம்
சுமத்தக்
காத்திருக்கும்
இன்னொரு
பழி...!

அதனால்,
காற்றைப் போல்
நீரும்
பொதுவாக வேண்டுமென
காத்திருப்போருக்கு
காத்திருக்கிறது
இன்னொரு
ஏமாற்றம்...!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்