வாப்பா இல்லாத பெருநாள்

நாச்சியாதீவு பர்வீன்


னவு கொத்தித்தின்று
காணாமல் போனது வாழ்க்கை
சோபை இழந்த தெருக்கள்
சுறுசுறுப்பாகி விட்டன

நாட்கள் வேகமாய் கழிய
நோன்பும் கரைந்து போனது

பெருநாளுக்கான ஆரவாரம்
வீடுகள் தோறும்
விளக்கேற்றி ஒளிபாய்ச்சுகிறது

இந்தப்பெருநாளுக்கு
வாப்பா இல்லை

வாப்பா இல்லாத பெருநாளை
முதல்முதலாய் சந்திக்கின்றேன்.

முன்னர்
நோன்பின் தொடக்கத்திலிருந்து
அப்பாவின் பரிசுக்காக
என் மகள்கள் காத்திருப்பார்கள்

தினமும் என் மகள்களோடு
கதைத்து ஆனந்தப்படுவார் வாப்பா

இம்முறை அப்பா இல்லாத
பெருநாளை பகிஷ்கரிக்க
என் மகள்களும் முடிவெடுத்துள்ளார்கள்

வாப்பாவோடு தொலைபேசியில்
பேச மறுத்த செய்னப்
இப்போது பேசப் பிரியப்படுகிறாள்

ஆங்கில தினப்போட்டில்
தான் வெற்றிபெற்றதை
வாப்பாவோடு பகிர
மரியம் ஆவலாய் இருக்கிறாள்

மரியம் புதிதாய் சேகரித்த
விடுகதைகளுக்கு
வாப்பாவிடம் சொல்லித்தான்
விடை கேட்க வேண்டுமாம்

வாப்பாவின் மரணம்
என் குடும்பத்தின்
எல்லா சந்தோஷங்களையும்
அள்ளிக் கொண்டு போய்விட்டது.

 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்