அன்பின் சிகரம் ஆசான்அலெச்சாந்தர்!
அடைக்கலம் புகுந்தனர் இயேசுவின் அடிதனில்!


அருட்கவி ஞானகணேசன்
 

லமரமொன்றுஅடியோடுசாய்ந்ததோ?
சாலச் சிறந்தசற்குணன் அலெக்சார்
பாலபண்டிதன்,பண்பின் சிகரம்
ஓலமிடினும் ஒருமுறைவருவரோ?

இலக்கணவித்தகன்,எண்திசைபோற்றிடும்
தலைக்கனமில்லாத் தங்கமாம் ஆசான்!
கலகலப் பில்லாக் கண்ணியன்! கற்றோன்
விலையிடமுடியாமாணிக்கமேவிரைந்ததேன்?

அன்பின் சிகரம்! ஆழறிவுடையோன்!
என்றும் சிரித்தஎழிலாம் வதனன்!
தன்னலமறியாத் தங்கமனத்தினன்;
நண்ணினன் இயேசுசைநாமெலாம் தவித்திட!

இறுதி மூச்சிலும் எம்நிலைஉயர்த்திட
உறுதியாயுழைத்தஉத்தமபுருசரே!
அறவனே! ஆசான் அலெக்சரே இரங்கினோம்
மறுமுறைவருவிரோவண்தமி ழூட்டிட?

சர்வமதப்பிரியன்! சாத்விகன் சற்குரு
கர்வமறிந்திடாகன்னித் தமிழ்மகன்
தற்பெருமையிலாத் தங்கமனசினன்
பொற்பதமடைந்தனன் புண்ணியாசாந்தியே!

எத்தகைஅன்பினைஎன்னிலேவைத்தீர்?
முத்தரே இறுதி மூச்சிலும்புகட்டிய
சித்தரேகாண்பனோசிரித்தஉம்முகம்
கர்த்தரின் தாளதில் காண்பீர் சொர்க்கமே!
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்