எழுது

கவிஞர் புகாரி


ழுது
எழுத்து ஒரு தவம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு யுகம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு வானம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு சூரியன்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு சொத்து
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு பண்பாடு
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு பரிணாமம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு ஆட்சி
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு எழுச்சி
நீ எழுத்து

எழுது
எழுத்து ஒரு புரட்சி
நீ எழுது

எழுது
எழுத்துக்குமுன்
இயலாததென்று
எதுவுமில்லை
நீ எழுது

நீ எழுதியதை நேசிக்க
பலகோடி உயிர்கள் உண்டு
நீ எழுது

நீ எழுதியதை
நஞ்சு நெஞ்சோடு கீற
ஒன்றிரண்டு
தேள்களும் உண்டு
ஆனபோதிலும்
நீ எழுது

கொடுந் தேள்களால்
மட்டுமே
ஆனதல்ல எழுத்துலகம்
நீ எழுது

தேடித்தேடி
வாசித்து வாசித்து
நேசித்து நேசித்து
உருகிப் பல்கிப்பெருகும்
நேச நெஞ்சக்
கடல்களால் ஆனதே
எழுத்துலகம்
நீ எழுது
 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்