எம்ஜிஆர்
என்றும்
மறையார்!
தேசபாரதி
தீவகம்
வே.இராசலிங்கம்
'எம்ஜிஆர்'
என்னுமொரு
ஈடுஇணை
அற்றதொரு
எழிலுருவ
நாயகனார்
என்கும்
வண்ணம்
இம்,மருதூர்
கோபாலன்
இராமச்சந்
திரன்என்னும்
ஏந்தலவன்
தமிழ்நாட்டின்
இதய
ஊஞ்சல்
செம்மாது
ளைநிறத்தில்
சிலம்பெடுத்த
அழகுமகன்
சிந்தனையிற்
கட்டுண்ட
சிருட்டி
யன்னார்
அம்கலைகள்
திரைப்படமும்
அற்புதமும்
விஞ்சுமொரு
அமுதமெனும்
கலையுலகிற்
திரண்டார்
மக்கள்!
பொன்மனத்துச்
செம்மலெனப்
பூப்பூக்கும்
மக்க(ள்)உளம்
பொருளையோ
பணத்தையோர்
பொழுதுங்
கேளார்
அன்பொழுகும்
வதனத்தின்
அருகினிலே
சென்றொருகால்
ஆசையாய்த்
தொட்டுவிடத்
துடிக்கும்
ஆவல்
மின்னிணைப்புப்
போன்றதொரு
மின்சாரம்
போலாகும்
மேவுகணை
உந்தலிலே
மிதக்கும்
காந்தம்
ஒன்றையே
பரவசமாய்
உருகிவிடக்
கூடிவிடும்
ஏழைகளின்
இதயங்கள்
இலட்சம்
என்பேன்!
எங்கவீட்டுப்
பிள்ளைமுதல்
ஏடுகளின்
பாராட்டில்
ஏராளம்
படங்களென
இதயத்
தூன்றி
பொங்குமுளம்
நாடோடி,
பேர்மதுரை
வீரனென
பொன்னேட்டிற்
பதித்ததிரைக்
காவி
யங்கள்
தங்கவாட்
பரிசாகச்
சார்ந்தபெரும்
விருதுகளைத்
தாங்கியதும்
சாதனையின்
சரிதங்
கூறும்
திங்களுமார்
சூரியரும்
தென்பொதிகைத்
தமிழணங்கும்
பொன்மனத்துச்
செம்மலுக்குப்
பேரே
டாகும்!
பதினேழு
தையினோடு
பாரதத்தின்
அரசாங்கப்
பள்ளிகட்கும்
விடுதலைநாட்
பகுப்புச்
செய்தார்!
புதிதாகத்
தாட்காசு
பதிப்பித்தே
பொன்மனத்துச்
செம்மலையே
போற்று
வித்தார்!
இதிகாசத்
தில்லிக்கும்
எடுத்ததொரு
வரலாறாய்
இராமசந்தி
ரர்க்கென்று
ஏடு
செய்தார்
மதிநுட்பம்
கலைநேர்த்தி
மக்கமயம்
மாண்பினொடு
வழங்குகரம்
வள்ளலென்றும்
மறையான்
அம்மா!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்