எம்.ஜி.ஆர்

கவிநாயகர் வி.கந்தவனம்



மூன்றெழுத்துள்ளேநீ இருந்தாய்
முடிசூடாவொருமன்னனைப்போல்
ஈன்றவள் தனிலும் மிகமேலாய்
இன்பத் தமிழினைத் தான்வரித்தாய்!

தமிழ்நாடதனைத் தாயகமாய்த்
தாங்கிநடந்தாய் தலைமகனே
கமழ்புகளோடேஅரசியலைக்
கல்விகலைளைவளர்த்தெடுத்தாய்!

பேச்சில் எழுத்தில் நடையுடையில்
பெருமைக் குணத்தில் கொடைவளத்தில்
ஆட்சிசெய்தவன் நீயல்லவோ
அன்புக்கும் பண்புக்கும் தாயல்லவோ?

ஆட்சிநெறிக்குஎம். ஜி.ஆர்.
அரசியல் நேர்மைக்குஎம். ஜி. ஆர்.
மாட்சிமகிமைக்குஎம். ஜி.ஆர்.
மன்னவர் இவருக்குநிகரிங்கு யார்?
நிகரில் நடிப்புக்குச் சிவாஜி என்பார்
நேர்மைத் தலைமைக்குநீதான் என்பார்
பகல்நிலவொத்தமுகமுடையாய்
பாட்டாளிமக்களின் அகமுடையாய்!

ஐயாநின்னை யார் மறப்பார்
அறத்தைதிறத்தை யார் மறப்பார்
கைம்மாறென்னசெய்திடுவோம்
கனவும் மறவோம் வாழியவே!
 




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்