பேராசிரியர் மா.நன்னன்

கவிஞர் முருகேசு மயில்வாகனன்
 

ன்னனாம் நற்பெயரான் நாட்டுக்கும் செந்தமிட்கும்
நன்குணர்ந்து செய்தவற்ளை நாமறிவோம் - வண்ணத்
தமிழை வகைப்படுத்தி தாய்த்தமிட்குச் செய்த
அமிழ்தநூல் பற்பலவே ஆம்.

நல்லதோர் ஆசான் நனிசிறந்த செந்தமிழார்
கல்வியிலே மேம்பட்டுக் காட்டினார் – வல்லமையைத்
தாய்நாட்டார் செய்தவத்தால் தாமுணர்ந்தே நற்பணிகள்
தூய்மனத்தால் செய்துவந்தார் தான்.

பண்டிதராய்ப் பாவலராய்ப் பார்போற்றும் பேரறிஞ
வண்ணத் தமிழைநீ வாழவைத்து – மண்ணிருந்து
சென்றதேனோ செப்பிடுவீர் செய்தியாய் எம்மவர்க்கு
இன்னலிங் குண்டோ இயம்பு.

நல்லா சிரியனாய் நாடெங்கும் சென்றுவந்தாய்
பல்லோ ரழைத்தனரே பாரெங்கும் - சொற்கேட்கப்
பேச்சிலே வல்லவனே பேரெழுத் தாளனே
மூச்சடங்கக் காரணத்தைச் சொல்.

போராட்ட வீரனே போர்முனையில் நின்றவனே
சீராம் தமிழுணர்வால் சீர்பெற்றாய் - ஓராயிரம்
தொண்டர்கள் உன்பின் தொடர்ந்துவந்த செய்திகளைக்
கண்டவர்கள் கூறினரே காண்.

பெரியார்பின் சென்றதனால் பேறுனக்கு என்றும்
உரிமைக் குரல்கொடுத்தாய் உண்மை – புரியாத
செய்திகளைப் பேரறிவால் செப்பனிட்டு மக்களுக்கு
ஐயமின்றித் தந்தனரே ஆம்.

நல்லறிஞன் இன்றில்லை நம்மைவிட்டுச் சென்றுவிட்டான்
பொல்லாத காலமோ பொய்;;யோ – அல்லலுறும்
பெற்றோர்க்கும் காதல் மனையாட்கும் மற்றேர்ர்;க்கும்
வெற்றிட மாகியதே வாழ்வு.

இந்தி எதிர்ப்பில் இணைந்துதான் ஏற்றமுற்றாய்
இந்தியப் போராட்டம் ஈர்த்திடவே – சிந்தினாய்
செந்நீர் சிறைசென்ற செந்தமிழா உன்வாழ்வு
விந்தைகள் சேர்ந்த வியப்பு.
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்