ஓ இளைஞனே!

மானியூர் மைந்தன்

இளைஞனே!
உன் இதயஓரத்தில்
ஒதுங்கிக் கிடக்கிறது
உன் வெற்றி
உன்னைத்தத்தெடுத்து
தவறான பாதைவழி
தள்ளுதே உன்சோம்பல்

சொர்க்கம் மதுவென்று
சுகிக்கின்ற பொழுதெல்லாம்
மெல்லச்சுருக்கிட்டுக்கொள்ளும்
உன் ஆயுள்

இல்லாத காதலும்
நெஞ்சின் ஓரம் பூத்து
பெண்ணோடு பேசும்
உன்னுடைய நேரம்
வீணாகிப்போகுதே

செல்லாத காசாய்
சீர்கெடாமல்
உன்வாழ்வை
சிறப்பாய் மாற்று
தொலையும் பண்பை
நீ தேடு

அண்டிவாழ்ந்தால்
அகிலமும் உனைவிரட்டும்
துணிந்தால் உனைவரவேற்கும்
வெற்றிஎனும் ஏடு
வெட்கத்தை வீதியில்விரட்டு
தூக்கத்தை துரத்து
முட்டுக்கட்டைகளை
முற்றிலும் அகற்று

தெளிவுறும் அறிவினை
ஒளியுற வெளியிடு
ஊக்கத்தை உறுதியாய்
உள்ளத்தில் ஊன்றி
ஆக்கம் காணவழிதேடு

அன்போடு உன்னை
ஆளாக்கும் பெற்றோர்
சந்தோசம் சேர
பணபாhய் நடந்து
பாராட்டு பலசுமந்து
வெற்றிகாண வழிதேடுnavaas06@yahoo.de