ஆத்மார்த்தம்
 

இளைய அப்துல்லாஹ்

 

அவன் தரமுடியாத எல்லாவற்றையும்

நீ தருகிறாய்

உள்ளுரமாக உன்னிலும் மேலானதை

என் மீதான அக்கறைபற்றிய

நெடும் நினைவுகளில்

நான் திளைக்கும்படி……

 

என் எல்லா உணர்வுகளின் நேரங்கள்

பவித்திரமானவை

அவை அவனுக்கானவை ஆனால்

உன்னிடம் தான் இருக்கின்றன.

 

என் ஆகர்ஷிப்பை நீ சவாசமாக்கியதனால்

என்னுள் நீ பஸ்பமானாய்

உன்னை என்னுள் புகுத்தி

அல்லது பத்திரப்படுத்தி

எனக்குள்ளாகவே இருத்திக்கொள்வேன்.

 

எக்காலத்திலும் அவன் உன்னாக ஆக முடியாது

நெடுங்காலமமான சிறுமைகளை விட

உன் நொடிப்பொழுதும் திருப்தியும்

என்னோடு ஸ்பரிஸிக்கும்

 

எனது சுய சிந்தனையின் தெளிவிலும்

விகர்சிப்பிலும் உன்னுள் என்னை செலுத்துவதை

விரும்புகிறேன்

 

அது உயிரில் உயிர் மீதான ஒருவகை கேளிக்கை

 

நான் எப்பொழுதும் நானாக இருந்தபடிக்கு

உன் நேசங்களை எப்பொழுதும்

சுதந்திரமாக உணர்வேன்

ஏனெனில் நான் சுதந்திரமானவள். 

anasnawas@yahoo.com