சமாதானம்  

கதைப்பிரியன்

காதலில் தோல்வி என்று
மீண்டும் ஒருமுறை என்னிடம்
சொல்லாதே நண்பா

காதலில் வென்றவர்களே
உண்மையில் காதலில் தோற்றவர்கள்
காதலில்  தோற்றவர்களே
உண்மையில் காதலில் வென்றவர்கள்

காதலில் நீ
வென்றிருந்தால்

முதல் முதலாக
அவளைச் சந்தித்ததை

முதல் முதலாக உனக்குக்
கிடைத்த முத்தத்தை

மணிக்கணக்காக
அவளுக்காக காத்துக்கிடந்ததை

ஞாபகப்படுத்திக் கொள்வாயா
இப்பொழுது சொல்
நீ காதலில் தோற்றாயா
காதலில் வென்றாயாkathaipiriyan@rocketmail.com