மிதக்குது மனது

தர்மினி

சுழன்றடிக்கும் காற்றில்
மிதந்து செல்லும் சருகு போல
காதல் எனக்குள்ளே
மிதந்து கொண்டேயிருக்கிறது

திருமணம்
குழந்தைப் பேறு
வயோதிபம்
எதுவுமே மிதக்கும் என் காதலை அமிழ்த்தி விடவில்லை
அது தீர்ந்து போகாமல் மிதக்கின்ற வேளைகளிலெல்லாம்
திருமணமும் வரைமுறையும்
உடற்தளர்வும்
மனச்சுமையும்
என்னைக் கடந்து விடுகின்றன. 

 

tharmini@hotmail.fr