ஒன்றுபடுவோம்! 

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.

ஓன்றுபடுவோம்! வென்றுபடுவோம்!
கன்று வயசிலிருந்து முதுமை வரை
தொன்று தொட்டு வழிகாட்டும் வரி.
குன்றெனப் பல பேதங்கள் இருப்பினும்
வென்றிடும் இனமாக வேண்டாமோ தமிழினம்!
ஓன்று படுதலெனும் சூக்கும மந்திரம்
ஊன்றியிருந்தால் இக் காலத்தில் ஈழவரை
நின்று ஒரு எதிரி துண்டாடுவானோ!

ஓன்றுபட்ட பெருமினம் இன அழிப்பென்று
நன்றாக எம்மைப் பிரித்து ஆண்டு
கொன்று குவிக்கிறது ஈழத் தமிழரை.
ஒன்றாத இனஉணர்வோனின் காட்டிக் கொடுப்பால்
அன்று முன்னேராண்ட எம் நிலம்
இன்று இரத்தம் தோய்ந்த ஈழமாகிறதே!
ஓன்றுபடுதலுக் கெதிரான இனம் தமிழன்
என்று நண்டுக் கதையுமுண்டு அறிவோம்.

பிரியும் உயிரும், இரத்தமும், சதையும்
சரிய வைத்தது மன பேதங்களை.
பெரிய உண்மையின் கனம் அழுத்தியது!
அரிய எழுச்சி! ஒற்றுமை துளிர்த்தது!
விரிந்தது பன்னாட்டிலும் எழுச்சிப் பேரணி!
எரியட்டும் ஈழவன் எனும் உணர்வு!
அரிய உயிருக்கு வாழ்வை வாசிக்க    
பெரிய தேவை உறவும் மண்ணும்

ஒன்றுபடுவோம்! வென்றுபடுவோம்!


vetha@stofanet.dk