நூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள் மு . .( மு .வரதராசன் )
சிரியர் :   பொன் சௌரி ராஜன்
நூல் ஆய்வு:
கவிஞர் இரா .இரவி

மு. .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் வரலாறு .அவரது படைப்புகள் பற்றிய ஆய்வு .அவரது குண நலன்கள் என அனைத்தும் நூலில் உள்ளது .

நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .மு . .அவர்களை நேரில் பார்க்காத என் போன்ற பலருக்கும் ,இளைய சமுதாயதிற்கும் மு . .பற்றிய பிம்பம் மனதில் பதியும் படியாக உள்ளது .நூலில் 5 கட்டுரைகள் உள்ளது .பின் இணைப்பாக 4 பகுதிகள் உள்ளது. மிகச் சிறந்த ஆய்வு நூலாக உள்ளது .ஒரு மாணவர் ஆசிரியருக்கு செய்த மரியாதையாக மு . . வின் மாணவர் பொன் சௌரி ராஜன்எழுதியுள்ள நூல் .நூலின் முதல் வரிகளை வாசித்துப் பார்த்தவுடன் நூல் முழுவதும் வாசிக்க வேண்டும் என்ற  ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .

"
பறந்துபோய் மலையுச்சியை அடைவோம் என்று சொல்லுகின்றவர்களைப் பார்த்து ஏங்கி நிற்பது வீண் .படிப்படியாக நடந்து ஏறி  மலை உச்சியை அடைகின்றவர்களைப் பின் பற்றுவதே கடமை "( காந்தி அண்ணல் .8)என்று ( மு .வரதராசன் ) மு .காந்தி அண்ணல் பற்றி எழுதிய கருத்து அவருக்கும் பொருந்தும் .மணி மணியாக ,நாள் நாளாக ,ஆண்டு ஆண்டாகத்  திட்டமிட்டுக் கல் மேல் கல் வைத்து  வீடு கட்டுவது போல இடையறாது  உழைத்துப் படிப்படியாக முன்னேயறிவர் மு . . மு .அவர்கள் வேலம்  என்னும் சிற்றூரில்  25.4.1912 அன்று பிறந்தார் .அவரது வாழ்க்கை வரலாறு உணவு நெறி ,இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்தவர் மு . .நன்றியோடு வாழ்ந்தார் .புகழை  வேண்டாம் என்று சொல்லியபடி வாழ்ந்து காட்டியவர் .இப்படி  பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .

மு.வ .அவர்களின் வாழ்வில்அவருக்குள் மாற்றம் நிகழ்த்திய  ஒரு நிகழ்வு நூலில் உள்ளது
 .
"
திருப்பத்தூர் கிறித்தவ குல ஆசிரமத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன் .அந்த காலத்தில் என் உள்ளத்தில் என் கல்வித் திறமை பற்றிய செருக்கு .இருந்தது என்னை விட படித்த பெரியண்ணன் ( சவுரி ராசன் ஜேசுதாசன் ) சின்னண்ணன் ( பாரஷ்டர் பேட்டன் ).ஒரு நாள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்துக் கையலம்ப எழுந்தேன் .குழாயருகே சென்ற போது நான் மட்டும்  வெறுங்கையோடு நிற்பதையும் மற்றவர்கள் ஒவ்வொருவரும் சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக கையில் ஏந்தி நிற்பதையும் உணர்ந்தேன் .சின்னண்ணன் கையில் இரண்டு தட்டுகளைக் கண்டேன் .அவரிடம் என் தட்டை பெற முயன்றேன் .அவர் இரண்டையும் உமி இட்டுத் தேய்க்கத் தொடங்கி  என்னிடம் கொடுக்க மறுத்து விட்டார் .

அன்று என் வாழ்வில் பெரிய திருப்பம் நேர்ந்தது .கல்வி பற்றிய செருக்கு என் உள்ளத்தில் சுவடு தெரியாமல் அழிந்தது .மூளையால்  உழைக்காமல் ,கை கால் கொண்டு உழைக்கும்  எவரைப் பார்த்தாலும் அவர்களும் என்னைப் போன்ற மனிதர்களே என்று மதிக்கும் மனப்பான்மை அமைந்தது .

(
மு . .வின் சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ஆனந்த விகடன் 10.6.1973) இந்த நிகழ்வை படிக்கும் வாசகர்களின் மன செருக்கை அழிக்கும் விதமாக உள்ளது .இது போன்ற பயனுள்ள பல தகவல்கள் நூலில் உள்ளது .

மு . .காலத்தைக் கண்ணாகக் கருதியவர் மு . .வின் வெற்றி ரகசியம் இதுதான் ." காலந்தவறாமைக் கடவுள்  மனிதனுக்கு வகுத்தளித்த அடிப்படை அறமாக மேற்கொண்டு பணியாற்றியவர் .இதனால்தான் நல்ல ஆசிரியராகவும் ,சிறந்த தந்தையாகவும் ,உற்றுழி உதவும் நண்பனாகவும், சமுதாயத் தொண்டனாகவும் அவர் விளங்க   முடிந்தது .

 
பொன்னை விட மேலான நேரத்தை எப்படி மதிக்க வேண்டும் .எப்படிபயனுள்ளதாக்க வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும்  பயனுள்ள நூல் இது. தரமான பதிப்பாக பதிப்பித்த சாகித்ய அகதமிக்கு பாராட்டுக்கள் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் மு . .

இவர்  கற்றன இவ்வளவுதாம் என்று வரையறுக்க முடியாத அளவு கற்றமை ,மாணாக்கர் எழுப்பும் வினாக்களுக்கு விடையறுப்பதில் பொறுமை. மாணாக்கரது உழைப்பிற்கு ஏற்ப உதவுதல் இவற்றில் நிலம் போன்று விளங்கினார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல் நூலில் உள்ளது .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பலர் இன்று ஆசிரியப் பணியோடு என் பணி  முடிந்தது  என்று வாழ்ந்து வருகின்றனர் .மு . .அவர்களைப் போல இலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பலர் இன்று ஆசிரியப் பணியோடு என் பணி  முடிந்தது  என்று வாழ்ந்து வருகின்றனர் .ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மு . .அவர்களைப் போல இலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் .

மு .ஆர்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 85 .மு .அவர்கள் அவர் மட்டுமல்ல தன் மாணாக்கர்களையும் இலக்கியவாதிகளாக உருவாக்கி உள்ளார்.மு .அவர்களின் செல்லப் பிள்ளை தமிழ்த்தேனீ முனைவர் மோகன் அவர்கள்  பேராசிரியராகப்  பனி புரிந்து கொண்டே நூல் ஆசிரியராக 85  நூல்களைத் தாண்டி விரைவில் 100 நூல்களை தொட உள்ளார் .தமிழ்த்தேனீ முனைவர் மோகன் அவர்கள்எழுதிய மடல்களுக்கு மு . பதில் மடல் இட்டு தெளிவு தந்த தகவல் நூலில் உள்ளது.
 
தனது படைப்புகளில் மனித நேயத்தை வலியுறுத்தி ,மனிதனை நெறிபடுத்தும் பணியினை இலக்கியத்தால் செய்த சகலகலாவல்லவர் மு .. என்பதை மெய்பிக்கும் நூல் .அவரது நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் நூல் உள்ளது .

திருக்குறளுக்கு உரை வந்தது, வருகின்றது ,வரும் .ஆனால் மு . .அவர்களின் திருக்குறள் உரைக்கு இணையான ஒரு உரை இது வரை வரவும் இல்லை .இனி வரப்போவதும் இல்லை .மு .அவர்களின் தமிழ்ப் புலமைக்கு மகுடமாகத் திகழ்வது அவரது திருக்குறள் உரை.

இந்த நூலில் மு .அவர்களின் பாத்திரங்களின் பெயர்கள் ,உரையாடல்கள் மேற்கோள் காட்டி அவரது ஆற்றலை நன்கு உணர்த்தி உள்ளார் .சாகித்ய அகதமி பதிப்பாக மு . .அவர்கள் எழுதிய " தமிழ் இலக்கிய வரலாறு  " என்ற நூல் 27 பதிப்புகள் வந்துள்ளது .இன்னும் பல பதிப்புகள் வரும் .

மு .அவர்கள் படைப்பாளியாக மட்டுமன்றி இலக்கிய திறனாய்வாளராகவும் சிறந்து விளங்கி உள்ளார் .கட்டுரை நூல்கள் மொழியியல் நூல்கள் எழுதி உள்ளார் .தான்  வாழ்ந்த நேரத்தை ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்கி படைத்தான் காரணமாக மு .அவர்கள் உடலால் உலகை விட்டு மறைந்த போதும் படைப்புகளால் இன்றும் வாழ்கின்றார் .என்றும் வாழ்வார் .அவர் எழுதிய இறுதி நூல் " நல்வாழ்வு "அவரது நல் வாழ்வை முடித்துக் கொண்டார் .நம் மனங்களில் வாழ்கிறார் .மு . .என்ற இலக்கிய ஆளுமையை இளைய தலைமுறைக்கு நன்கு அறிமுகம் செய்து வைத்த நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன் அவர்களுக்கும் சிறப்பாக வெளியிட்டுள்ள சாகித்ய அகதமிக்கும் பாராட்டுக்கள் .

வெளியீடு சாகித்ய அகதமி விலை ரூபாய் 40.


eraeravik@gmail.com