நூல் : அன்பென்ற மழையிலே
நூல்
ஆசிரியர் :
 கவிஞர்  நா .முனியசாமி
நூல் அறிமுகம்:
கவிஞர்   இரா .இரவி

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய்35.செல் 9944391668, kavignareagalaivan@gmail.com

பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரையில் நூல் ஆசிரியர் கவிஞர் நா.முனியசாமி அவர்களைப் பற்றி எழுதிய வரிகள் அவருக்கு உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் , சிந்தனையில் குறை இல்லை என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளன .

"இளம் படைப்பாளியான நூல் ஆசிரியர் கவிஞர்  நா .முனியசாமி அவர்களின் முதல் கவிதை நூலான அன்பென்ற மழையிலே !அன்பின் பெருமைகளையும் , உலகியலின் அருமைகளையும் எடுத்தியம்பும் நல்ல நூலை எங்கள் வாசகன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டு அவரின் அளப்பரிய திறமைகளை உலகறியச் செய்வதில் அகமகிழ்கிறோம் ."

கவிஞர் ஆங்கரை பைரவி அவர்களின் அணிந்துரை நன்று .சில துளிகள் உங்கள் பார்வைக்கு .

"எறும்புகள் குளிக்கும் படித்துதுறைதான் .இந்தத் தூறல் பெரு மழையாகி நம் எல்லோரையும் நனைக்கும் அதற்கான ஆர்வம், முயற்சி கவிஞரிடம் இருக்கிறது .வாழ்த்துகிறேன் நானும் ." 

போர் இன்றி உலகம் மிக மிக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம்நூல் ஆசிரியர் கவிஞர்  நா .முனியசாமி விருப்பமும் அமைதிதான் .

யுத்தம் இல்லாத 
ரத்தம்
சிந்தாத 
உலக
வாழ்வினை 
அன்பில்
மலர்ச் செய்..
அனைத்தையும்
மகிழச் செய் 
அமைதியாய்
வாழச் செய் 
இதற்கென
இனியதைச்
செய்திடு 
எப்போதும்
 
தப்பேதும்
இல்லாது.

மனிதன் உயர் திணை என்ப்று உயர்வாக எண்ணுகிறோம் .ஆனால் சில மனிதர்கள் சில நேரங்களில் விலங்கை விட மோசமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம் .

இயற்கையில் 
வேறுதுவும்
 
உன்னைப்
போல
இன்னொரு
உயிரை 
அழிக்க
நினைப்பதில்லை  .
அழச்செய்வதில்லை
.
உயர்ந்த
படைப்பான
நீ
மட்டும் ஏன்
இந்த
இழிந்த 
செயலைச்
  செய்கிறாய் ?

.உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின்  திருக்குறளை வழிமொழிந்து வரைந்த கவிதை நன்று .

இனியவற்றை 
எல்லாவற்றிக்கும்
 
பகிர்ந்து
கொடு .
அதில்தான்
 
மணக்கிறது
 
மனிதப்பண்பாடு
!

இரும்பு  கூட பயன்படுத்தாவிட்டால் துரு பிடித்துவிடும் .மனிதன் உழைக்க வில்லை என்றால் மனிதனே  அன்று என்று உணர்த்தும் கவிதை நன்று .

உண்மையான 
உழைப்பில்தான்
 
உன்னதமான
 
வாழ்வு
மலர்கிறது.

கடமையை நேசிக்க சொல்லும் விதம் அருமை . கடமையில் இன்றிய இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய  வைர வரிகள்ஹைக்கூ வடிவில் நன்று .

கடமையில் 
காதல்
கொள் 
காவியமாகும்
வாழ்வு !

ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் நன்று.

இழிவான 
செயல்களால்
 
மகிழ்வான
 
வாழ்வைப்
பெற முடியும் 
என
எண்ணுபவர்களே 
முட்டாள்களில்
 
முதன்மையானவர்கள்
!

முயற்சி திருவினையாக்கும் திருக்குறளை மெய்பிக்கும் விதமான வரிகள் நன்று .

இடைவிடாது 
முயற்சி
செய்வோர் 
அடைய
முடியாதது 
எதுவுமில்லை
 உலகில் !

வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் உண்டு .சாலை என்றால் மேடு பள்ளம் உண்டு வாழ்வியல் கருத்துக்களை சித்தர் பாடல் போல தத்துவம் போல நன்கு எழுதி உள்ளார் பாராட்டுக்கள் .

முட்களுக்கு நடுவே 
ரோஜா
மலர்வது போல 
வருத்தங்களிலுடேதான்
 
வாழ்க்கை
மலர்கிறது
அழகாய்
!

மொத்தத்தில் கவிதைகள் நேர்மறை சிந்தனை விதைக்கும் விதமாக அன்பை போதிக்கும் விதமாக மனிதநேயம் கற்பிக்கும் விதமாக அற்புதமாக உள்ளது .

நூல் ஆசிரியர் கவிஞர் நா.முனியசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.