கேணிப்பித்தன் .அருளானந்தம அவர்களுடன் ஒரு நேர்காணல்:

எஸ். பாயிஸா அலி

சிறுவருக்காக எழுதும்போது முதுமையை மறந்து விடுகிறோம்.            

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை எல்லைக்குள் ஆலங்கேணி என்னும் அழகிய கிராமத்தில் பிறந்தவர்தான் சண்முகம் அருளானந்தம். இளமைக்கல்வியை ஆலங்கேணிப் பாடசாலையிலும், ஆங்கிலக் கல்வியை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் கற்றவர்.

ஆங்கில ஆசிரியராகத் தனது சேவையைத் தொடங்கி அதிபராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக,வவுனிய மாவட்டப் பிரதிக் கல்விப் பணிப்பாளராக, வடக்குக் கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சின் மாகாகணக் கல்வித் திணைக்களத்தில் மேலதிகக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். ஈழத்தில் சிறுவர் இலக்கியத்தில் தடம்பதித்தவர். இதுவரை 43 நூல்களை எழுதி வெனியிட்டுள்ளவர். இவற்றுள் சிறுவர் பாடல்கள் - 13, சிறுவர் கதைகள் -12, சிறுவர் நாவல்கள் -09 மிகுதி பெரியவர்களுக்கான சிறுகதைத் தொகுதிகள் 05, நாவல்கன் 3 சிறுவருக்கான விபுலானந்தரின் சரிதை, கேணிப்பித்தன் கவிதைகள் தொகுப்பு. அனர்த்த முகாமைத்துவம் எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

1.  தங்களைப் பற்றிய அறிமுகம்.

 பதில் எனது பெயர் சண்முகம் அருளானந்தம் நான் கிண்ணியாப் பிரதேசத்தில் உள்ள  ஆலங்கேணியில் பிறந்தேன். ஆலங்கேணிப் பாடசாலையிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றேன். பின்னர் சுவாமி விபுலானந்தரினால் கட்டியெழுப்பபட்ட சிவானந்த வித்தியாலயத்தில் கல்வியைக் கற்றேன். ஆங்கில ஆசிரியராகி, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தேன். அதிபராகப் பணிபுரிந்தேன்.

திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்தவர் ஆசிரியராக சேவை செய்கிறார். அவர் பிரபல ஓவிருமாவார். அற்றவர் டாக்டராகச் Nசுவையாற்றுகிறார.

இலங்கைக் கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து வவுனியாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக்க கடமையாற்றி பின் திருகோணமலை மாகாணக் கல்விப் பணிமனையில் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளராகவும், கல்வி அமைச்சில் முன்பள்ளிப்பிரிவு, ஆரம்ப கல்விப் பிரிவு ஆகியவற்றுக்குப் பொறுப்பாகவும், மாகாண பதிப்பகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றேன். ஓய்வு என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலையைத் தொடங்குவதாகும். அதனால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது எழுத்துக்கு அங்கிகாரம் தந்த பெருமகனாக தினபதி, சிந்தாமணி ஆசிரியர் அமரர் எஸ்.டி.சிவநாயகம அவர்கள்தான். எனக்கு 'கேணிப்பித்தன்' என்ற புனைபெயரை அங்கீகரித்து சிந்தாமணியில் எனது 'ஏனிந்தப் பிறவி' என்ற கவிதையைப் பிரசுரம் செய்துவைத்தார். இது 1964ல் நடந்தது. இன்றுவரை 'கேணிப்பித்தன்' எழுதிக்கொண்டிருக்கிறார். கிழக்குப் பல்கலைக் கழகம் ..டுவ பட்டத்தைத் தந்தது. புவியியலில் P.HD பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன். முன்பள்ளிக் கல்வியில் டாக்டர் பட்டத்தையுதயும் பெற்றுக் கொண்டேன்.

கலாபூஷண விருது, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருதுகளுடன் இதுவரை 4 இலங்கைச் சாஹித்திய விருதுகளும், 4 மாகாண சாஹித்திய விருதுகளும் கிடைத்துள்ளன. இவற்றுள் ஒன்றைத் தவிர மற்றெதெல்லாம் சிறுவர் இலக்கியத்துக்கான பரிசுகளே.

2. கல்விப் புலத்தில் முக்கிய பதவியில் இருந்து கொண்டே இலக்கியம் படைக்கிறீர்கள். சிறுவர் இலக்கியத்தின் மீதான ஈடுபாடு, ஆர்வம் எப்போது, எப்படி ஏற்பட்டது

பதில்: நான் ஆசிரியராக இருக்கும்போது நமது பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிரம்பவே இருந்தது. அதுவும் பெண்களை ஆசிரியர்களாகக் காணவே முடியாது. பாடசாலையில் பெண்பிள்ளைகளுக்கும் ஆண்;கள கற்பிக்க வேண்டிய சூழ்நிலை. சின்ன வகுப்புக்களில் ஆடல் பாடல் அபிநயம் கற்பிக்க பலர் முன்வருவதில்லை. இவற்றைச் சவாலாக சில ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டோம். பிள்ளைகளுக்கு வேண்டிய பாடல்களை நாங்களே எழுதிக் கற்பித்தோம். இதனால் ஏற்பட்ட தற்செயல் ஆர்வம்தான் இந்த நிலைக்கு என்னைப்போல் பலரை உயர்த்தி விட்டது என நினைக்கிறேன். சிறுவருக்காக எழுதும்'போத நாம் முதுமையை மறந்து விடுகிறோம். மனதுக்கு ஒரு புத்தூக்கம் பிறக்கிறது. இதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா? ஓய்வு பெற்றபின்தான எனது எழுத்தில் வேகம் அதிகரித்தது.

3. சிறுவர் இலக்கியம் தவிர ஆர்வமுள்ள வேறுதுறைகள் எவை?

பதில்: உண்மையில் நான் கவிதையில்தான் பற்றுள்ளவனாக இருந்தேன். நமது அண்ணல் (சாலிஹ்) தான் எமக்கெல்லாம் வழிகாட்டி. எனக்கு மரபுக்கவிiதான பிடிக்கும். நான் ஆசிரியராக நமது ஊரிலும், சேனையூரிலும் கடமையாற்றும்போது மூதூரின் குக்கிராமங்களில் கவிதை அரங்குகளை ஏற்பாடு செய்து நடத்துவோம் பல அரங்குகளுக்கு நமது அண்ணல் அவர்களே தலைமை தாங்குவார்கள். அவர் கவிதை சொல்வதே தனியழகுதான். அவரைத் தொடர்ந்து தாமரைத்தீவான் தலைமை தாங்கினார். எனது கவிதைகளைத் தொகுத்து 'கேணிப்பித்தன் கவிதைகள்' என்று வெளியிட்டேன். பேராதனைப் பல்கலைக் கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதலாமிடத்தினைப் பெற்றேன். சிறுகதைப் போட்டியில் பங்கு பற்றி முதற்பரிசினைப் பெற்றேன். பேராதனையில் இருக்கும்போது பிரபல சிறுகதை எழுத்தாளரான .யேசுராச எனது அறையைத் தேடிப்பிடித்து வந்து பாராட்டினார். அதை என்னால் மறக்கமுடியாது

பாடசாலையில் கற்பிக்கும்போது தமிழ்தினப் போட்டிகள் நடைபெறும். நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றினோம். அப்போது . .இராசரத்தினம, நான், நமது தாகீர், முத்தலிப் ஆகியோரே நாடகம் எழுதுவதில் ஈடுபட்டு வந்தோம். எனது பல நாடகங்கள் வெற்றிகளைப் பெற்றன. தாகீரும் முத்தலீப்பும் நல்ல நாடகாசிரியர்கள். அவர்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள் போல் தெரிகிறது.

4.நாவல் அனுபவங்கள்?

 பதில்... அது சுவையானது. ஓய்வு பெற்றபின்தான் எனக்கு எழுத ஓய்வு கிடைத்தது. சிறுவர் நாவல்களை எழுதிய பின்னர்தான் நாவலையிட்டுச் சிந்தனை பிறந்தது. இந்திய எழுத்தாளர்களது நாவல்களைப் படித்தேன். சிறப்பாக டாக்டர் மு.. அவர்களது நாவல்களை நிறையவே படித்தேன். மணிவண்ணன் என்ற புனைபெயரில் நா.பார்த்தசாரதி எழுதிய பொன்விலங்கு மிகச் சிறப்பானது. நானும் நாவலை எழுதினால் என்ன? என்று எண்ணி எழுதினேன். எனது முதல் நாவலான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நாவலை எழுதி வெளியிட்டேன். வெளியீட்டு விழாவுக்கு நூலறிமுகம் செய்ய ஒப்புக்கொண்டு நூலைப் பெற்றுக் கொண்டு போனவர் மறுநாளே தன்னால் முடியாது என்று சொல்லி விட்டார். வெளியீட்டில் நூலை மேலோட்டமாக வேறொருவர் கூறினார். எனக்கும் பயந்தான். ஆனால் அதனை அரச சாஹித்தியப் போட்டிக்குத் துணிவுடன் அனுப்பி வைத்தேன். அது பல வல்லுநர்களது நாவலுடன் போட்டி போட்டு இறுதிச் சுற்றுக்குச் சென்றது. இறுதிச் சுற்றில் இரண்டாவது இடம் கிடைத்தது. சான்றிதழும் பெற்றது நாவல் எழுதுவது சலபமானது என்பதனைக் கண்டு கொண்டென். நமது அனுபவங்களைப் புது மெருகுடன் சொல்வதுதான் நாவல். ஆனால் நமது நாவல்களை நம்மவர்கள் படிப்பது குறைவு. காரணம் இந்திய தொலைக்காட்சியும். இந்தியப் புத்தகங்களும்தான்.

உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் ஒரு சட்டம் இருக்கிறது. இந்தியப் பிராந்திய மொழிகளில் வெளிநாடுகளில் வெளியாகும் புத்தகங்களை இறக்குமதி செய்ய முடியாது. ஆனால் இந்தியப் புத்தகங்களை உலகத் தமிழ் பேசும் மக்கள் வாங்கிப் படிக்கலாம். அவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் வாழுமிடங்கள் சந்தையாக உள்ளன. இதனை எவரும் எதிர்க்கவில்லை. குறிப்பாக தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. இதில் அவர்களது இராஜ தந்திரம் அடங்கியுள்ளது. அவர்களது குப்பைகளை வாங்குவதற்கு நம்போன்ற தமிழ்பேசும் மக்கள் உள்ளார்கள் அல்லவா?

5.தற்போதைய - இன்றைய இளைய தலைமுறையினரின் எழுத்துக்கள் பற்றியும் கூறுங்கள்.

பதில்: இன்றைய இளைய தலைமுறையினர் நன்றாகச் சிந்திக்கிறார்கள். ஆனாலும் வாசிப்பதில் பின்நிற்கிறார்கள். நன்றாக வாசிக்க வேண்டும். வாசித்தபின் அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எழுத வேண்டும். 'எழுது. ஏனென்றால் எழுதும்போது சிந்திக்கின்னறாய்' என்று பெரியோர் கூறுவர். எழுதவேண்டும் எழுதியதை வாசிக்க வேண்டும். திருத்தி எழுத வேண்டும். நாம் நூறு பாடல்களை எழுதினால் பத்துப் பாடல்கள் சிறந்ததாக வந்து தேறும். சிறந்த எதிர்காலம் நமது இளைய தலைமுறையினரிடம் உண்டு.

6.வரலாற்றுச் சிறப்புமிக்கது திருகோணமலை என்று சொல்கிறார்கள். கலை இலக்கியத்தில் தொன்று தொட்டே பிரசித்தமான பிரதேசம் நம்முடையது. திருகோணமலையும் - கலை இலக்கியமும் பற்றிப் பேசலாமே

பதில்: தி.கனகசுந்தரனார தொடக்கம் பீதாம்பரனார், பாலேஸ்வரி. தா.பி.சுப்பிரமணியம. அருள்சுப்பிரமணியம் அண்ணல் .. இராசரத்தினம், கிண்ணியா அலி போன்றோரின் பின் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இன்று எழுத்துலகில் பிரவேசித்துள்ளனர். ஆனால் அவர்களது முகவரிகளைப் பெற்று அவர்களின் விபரங்களை ஆவணப்படுத்த முடியாதுள்ளது. காலத்தின் கட்டாயத்தினை உணர்ந்து அவர்களது விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும். அவர்களது ஆக்கங்களை வெளியுலகினுக்குக் கொண்டு வரவேண்டும். இதில் ஆர்வமுடையவர்கள் என்னோடு தொடர்பு கொண்டால் அதனை நிறைவேற்றலாம். இது காலத்தின் கட்டாய தேவையாகும்

7. உங்களின் 3 படைப்புக்கள் -2010ல் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்ததே. இது பற்றிச் சொல்லுங்களேன்.

பதில்: இது உண்மைதான். 'சாதனையாளர்,' 'அற்புதமான வானம்,' 'கனவு மெய்ப்பட வேண்டும்.' என்ற எனது படைப்புகள் பற்றிய செய்தியைப் பத்திரிகையில் பார்த்ததும் ஏதாவது ஒன்றுக்குத்தான் பரிசு கிடைக்கும் என்பது தெளிவானது. ஆனால் மூன்றும் தேசியஅ ரீதியில் இறுதிச் சுற்றில் இடம் பெற்றதே பெரிய சாதனைதான். ஆனாலும் எனது நூல்களின் தரம் இன்னும் உயரவேண்டும என்று நினைத்து கொண்டேன். தரமானதாக இருப்பதற்குச் சிலவேளைகளில் பரிசு கிடையாது போவதும் உண்டு. வெற்றி பெற்ற நூல்கள் தரமானவை என்றும் கொள்ளமுடியாது. பரிசு என்பது 'குருடனுக்கு விரால் படுவது' போன்றது.

8. வெளியீட்டு முயற்சிகள், வெளியீட்டகம், அதை நிறுவ முயற்சி செய்ததன் நோக்கம், அதன் வெற்றி, தோல்வி பற்றிக் கூறுங்கள்:

பதில்: எனது நூல்களை வெளியிடுவதற்கு ஒரு வெளியீட்டு நிறுவனம் தேவைப்பட்டது. எனவே 'அருள்வெளியீட்டகம்' தொடங்கப் பட்டது. அது பெயரளவிலேயே தொடங்கப்பட்டது. எனக்கென கணினியைப் பெற்றதன்பின் எனது நூல்களைக் கணினியிலேயே செய்யத் தொடங்கினேன். அதனால் ரைப்செற்றிங் செலவு குறைந்தது. திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிமுகப் படுத்த நான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. உண்மையை உணரமுடியாத உத்தமமான மக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். தாமரைத்தீவானின் 'போரும் பெயர்வும்' என்ற நூலினை வெளியீடு செய்தேன். ஆலையு}ரன .தங்கராசாவின மூன்று நூல்களை வெளியிட்டேன். ஜெனிராவின் இரண்டு நூல்களை வெளியிட்டேன். ஈச்சையூர்தவா என்ற .தவராச அதிபரின் நூலையும் வெளியிட்டேன். ;. எனக்கு உதவ லங்கா புத்தகசாலை முன்வந்துள்ளது. எனது 43 நூல்களையும் எனது அருள்வெளியீட்டகத்தின் ஊடாகவே செய்துள்ளேன். இதில் எனக்கு இலாப நோக்கில்லை. ஒரு எழுத்தாளனுக்கு உதவும் நோக்கத்தையே கொண்டுள்ளேன். இதன் வெற்றி எனது உதவியை நாடி வரும் எழுத்தாளர்களிலேயே தங்கியுள்ளது. இப்போது 'வெலிப்பன்னை அத்தாஸ்' அவர்களது பூவும் கனியும் என்ற நூலினைச் செய்து கொண்டிருக்கிறேன். அத்துடன் எனது 10 நூல்களையும் செய்து கொண்டிருக்கிறேன்.

9.'சாதனையாளர்,' 'சிறகு வைத்த கதைகள்' இரண்டுமே நான் விரும்பிப்படித்த சிறுவர் இலக்கியங்கள். இவைகள் உருவான விதம் பற்றிக் கூறுங்கள்.

பதில்: சாதனையாளர் உருவாக்கத்துக்கு அந்தந்தக் களங்களில் உள்ள பாடசாலைகளும், ஆசிரியர்களும் கல்விச் சமூகமும்தான் காரணம்.. அதில் வருவன கற்பனையல்ல. உண்மைச் சம்பவங்கள். அவற்றைச் சுவைபடக் கூறியது மட்டுந்தான் எனது வேலை. அத்துடன் வாசிக்கும் உள்ளங்களின் உள்வாங்கல்தான் காரணம். சிறகு வைத்த கதைகள் பிறமொழிக்கதைகள். நான் இளமையில் ஆங்கிலத்தில் படித்துச் சுவைத்த கதைகளை எனது பேரப்பிள்ளைகளுக்குச் சொல்வேன். எனது பேர்த்தி அருள்சுலக்ஷிகா விரும்பி ரசித்த கதைகளை மட்டும் எழுதினேன். கதைகள் பழையன. ஆனால் கதை நடக்கும் இடங்கள் நமது பிரதேசம்தான்.

10. உள்ளுர், ஈழத்து, சர்வதேச எழுத்தாளர்களுடனான உறவுகள் எப்படி உள்ளது?

நமது எழுத்தாளர்களது ஆக்கங்களைப் படிக்கும்போது எனது மனதைத் தொட்டால் உடன் அவர்களுடன் தொடர்பு கொண்டு பாராட்டிவிடுவது எனது பண்பு. அல்லது எழுத்து மூலம் தெரிவிப்பேன். சர்வதேச எழுத்தாளர் என்று யாரைக் குறிப்பிடுவது. எங்களது நாட்டைத் தங்களது சந்தையாக்கி விட்டு குப்பைகளை எங்களைப் படிக்கச் சொல்லும் எழுத்தாளர்களை நாம் எப்படி மதிப்பது? நமது விமர்சர்களைப் பாருங்கள். பல்கலைக்கழகத்து விரிவுரையாளர்களைப் பாருங்கள். எடுத்ததற்கெல்லாம் புதுமைப்பித்தனையும், குப. போன்றோரையும், சினிமாவால் புகழடைந்தவர்களது படைப்புக்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு விளாசுகிறார்கள். நமது தாமரைத்தீவான், அலி போன்றோரது கவிதைகளில் கைவைக்கின்றார்களா? புதிய எழுத்தாளர்களது கவிதைகளை நயக்கின்றார்களா? தேடலில் ஈடுபடுகின்றார்களா? இல்லை. ஈழத்தின் எழுச்சியைத் தொட்டுக் காட்ட கே.எஸ. சிவகுமாரனைப் போல் எந்த விமர்சகர்களும் இன்றில்லை. காரணம் சோம்பல். இடித்த மாவையே இடிக்கிறார்கள்.

11. உங்களின் 'அனர்த்த முகாமைத்துவம் ஒரு அனுபவ அணுகுமுறை' பற்றிக் கூறுங்கள்.

இந்த நூலுக்கு கிழக்கு மாகாணத்தின் சாஹ-pத்திய விருது கிடைத்தது. நான் டில்லிப் பல்கலைக்கழகத்தால் நடாத்திய 'அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நெறியில் டிப்ளோமா செய்துள்ளேன். அத்துடன் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளேன். நமது அரச அதிகாரிகள் சரியாகச் சேவை செய்;வார்களாயின அனர்த்தங்களில் இருந்து நமது மக்களைக் காப்பாற்முடியும். சிறப்பாக அனர்த்ங்கள் இயற்கையாகவும். செயற்கையாகவும் எற்படும். இலங்கைளைப் பொறுத்தவரை இயற்கை அனர்த்தங்களான வெள்ளம், வரட்சி இரண்டாலும் வருவன. இதற்கேற்ற ஆயத்தங்களை அவர்கள் செய்யவில்லை.

2004ல் சுனாமி வந்து கொள்ளை கொண்டது. தூக்கத்தில் இருந்து விழித்தவர்களைப் போல் செயற்பட்டு மீண்டும் உறங்கிவிட்டார்கள். 2011ல் கிழக்கில் வெள்ளம் வந்தது. மக்கள்தான் வலிய வந்து உடனடி நிவாரணத்தில் இறங்கினார்கள்2011 பெப்ருவரியில் மீண்டும் மழையும் வெள்ளமும் வந்துள்ளது. என்ன தற்காப்பு முறைகளை முன்வைத்துள்ளார்கள். அரசாங்கத்தின் பிரதேச செயலாளர் மட்டத்தில் 'ராஸ்க் போஸ' ;(வுயளம குழசஉந) உள்ளனவா? அதற்குரிய  உணவுவகை, நிதியொதுக்கீடு உள்ளனவா? யப்பான், இந்தேனேசியா, இந்தியா போன்ற நாடுகளில் அனர்த்த விழிப்புணர்வுக் குழுக்கள் உண்டு. இவற்றைப்பற்றி அறிய எனது நூல் உதவியாக இருக்கும். நமது நாட்டில் தேர்தல்கள்தான் நடக்கும் நாட்டு மக்கள் எப்படிப் போனாலும் யாருக்கும் அக்றையில்லை.

12. மீண்டும் சிறுவர் இலக்கியத்துக்கே வருகிறேன். இலக்கியப் படைப்புக்கள் யாவும் நவீனத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் சிறுவர் இலக்கியங்கள் மாத்திரம் தொடர்;ந்தும ஒரே வாய்ப்பாட்டுக்குள் அடங்கியிருப்பது போலப்படுகிறதே. இத்துறையில் நீண்ட அனுபவம் உள்ள நீங்கள் சிறுவர் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது பற்றி சிந்திக்கவில்லையா?

பதில்:  இந்தக் கேள்வி விசித்திரமாக உள்ளது. இலக்கியப் படைப்புக்கள் யாவும் நவீனத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறதெனக் குறிப்பிடுகிறீர்கள். நவீனம் என்பது என்ன? மாற்றம் நியதியானது. ஆனால் அதில் கட்டொழுங்கு இருப்பதை நாம் காணமறந்து விடுகிறோம். காலத்தின் கண்ணாடிதான் இலக்கியம் என்றால் மனிதன் வாழும் முறையை இலக்கியம் காட்டுகிறது. அதன் வளர்ச்சிப் போக்கை அவதானித்தால் பெரிய வித்தியாசத்தைக் காணமுடியாது. உதாரணமாக 1990 ல் ஆலங்கேணியை விட்டு நாங்கள்  விரட்டப்பட்டோம். அப்போதிருந்த ஆலங்கேணியை மனதில் பதித்திருந்தோம். 1997ல் ஆலங்கேணிக்கு திரும்பியபோது காடாக இருந்தது 2009ல் ஓலைக்குடிசைகள் ஒன்றையும் காணோம். எல்லாம் மாற்றம். தோணாக் காடு இன்றில்லை. எங்கும் குடியேற்றம். ஆனால் மக்கள் மனதில் மாற்றங்கள் இன்னும் ஏற்படவே இல்லை. இதனை நாம் நவீனத்துவம் என்று கொள்ளலாமா? சிறுவர் இலக்கியமும் மாற்றமடைந்து கொண்டு வருகிறது. அதற்கு ஊடகங்கள் நல்ல பல பணிகளை ஆற்றுகின்றன. ஆனால் அவற்றுக்கு அபடிப்படையான கதைகள், பாடல்கள். உரையாடல்கள். நாடகங்கள் ;ளன. அவற்றைத்தான் பலவேறு வடிவங்களில் தருகிறார்கள். மாற்றம் கொண்டு வருவதற்குப் பல வசதிக்ள் தேவை. ஆனால் அதற்கு முதலிடுவோர் யார்.? சிறுவர் இலக்கியங்கள் வேண்டும் என்பார்கள். பாடல்கள், கதைகள் தேவை என்பார்கள். வாங்கி அறிமுகம் செய்து படிக்க யார் முன்வருகிறார்கள்.? எனினும் சிறுவர் இலக்கியத்தை வளர்த்தெடுக்க நீங்களும், உங்களைப்போல் சிலரும் இருக்கும் வரை நம்மால் இயன்றவரை தொடர்வோம்

13.எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிப் பேசலாமே.

   பதில் இப்பொழுது 'நினைவு நல்லது வேண்டும்' 'நல்லதோர் வீணை என்ற நாவல்களையும் எழுதுகிறேன். 'மகாவலி மைந்தன்'; 'உதவும் உள்ளங்கள்'; 'வான்வீதி உலா'என்ற சிறுவர் நாவல்களையும் எழுதுகிறேன். 'ஈழத்தில் சிறுவர் இலக்கியம்' எனது நாடக அனுபவங்கள் ; என்ற ஆக்கங்களிலும் ஈடுபட்டுள்ளேன். எனது பேர்த்தி அருள்சுலக்ஷிகா அருமையான சிறுவர் கதையை எழுதித்தங்துள்ளார். அதனையும் வெளியிடவுள்ளேன்

14.மேலும் நீங்கள் கூற விரும்புவது:

பதில்: நமது இளைய தலைமுறையினரைக் கேட்டுக் கொள்வதெல்லாம் 'அருள் வெளியீட்கம்'; உங்கள் ஆக்கங்களை வெளிக் கொண்டுவர ஆயத்தமாக உள்ளது. அதற்காக என்னோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  

.அருளானந்தம அவர்களின் இதுவரை வெளியான நூல்கள்:

இல            நூலின் பெயர்       

01                  இன்பக் கனிகள்   (சிறுவர் பாடல்)
02                 
பாட்டுப் பாடுவோம்  (சிறுவர் பாடல்)
03                 
காகமும் தம்பியும்   (சிறுவர் பாடல்)
04                 
பாடி ஆடுவோம்  (சிறுவர் பாடல்)
05                 
கடலும் காவிரியும்  ( சிறுவர் பாடல்)
06                 
சின்னச் சின்னப் பாட்டு  (சிறுவர் பாடல்)
07                 
மனதுக்கினிய பாட்டு   (சிறுவர் பாடல்)
08                 
ஆனந்தமான பாட்டு   (சிறுவர் பாடல்)
09                 
சகோதரராய் வாழ்வோம்  (சிறுவர் பாடல்)
10                 
இசையோடு அசைவோம்  ( சிறுவர் பாடல்)
11                 
தம்பிக்கொரு பாட்டு   (சிறுவர் பாடல்)
12                 
அறிவைத் தரும் பாடல்கள்   (சிறுவர் பாடல்)
13                 
பாட இனிக்கும் பாடல்கள்    (சிறுவர் பாடல்)
14                 
ஆடி மகிழ்வோம்     (சிறுவர் ஆடலும் பாடலும்)
15                 
பூஞ்சிட்டுக்கள்     ( சிறுவர் கதைகள்)
16                 
சின்னத் தேவதைகள்      (சிறுவர் கதைகள்)
17                 
கண்ணனும் இராமனும்    (சிறுவர் கதைகள்)
18                 
தங்க மாம்பழம்   (சிறுவர் கதைகள்)
19                 
சிறகு வைத்த கதைகள்    (சிறுவர் கதைகள்)
20                 
சாதனையாளர்     (சிறுவர் கதைகள்)
21                 
அற்புதமான வானம்   (சிறுவர் அறிவியல் கதைகள்)
22                 
பார்த்தேன் கதைகள்     (சிறுவர் கதைகள்)
23                 
சின்னச் சின்ன சிறுவர் கதைகள்   (சிறுவர் கதைகள்)
24                 
வித்தகன் விபுலானந்தன்     -   சிறுவர் இலக்கியம் -சரிதை
25                 
பேனாவினால் பேசுவோம்     - சிறுவர் கட்டுரைகள்
26                 
பளிங்குத் தீவு        சிறுவர் நாவல்
27                 
பயங்கொள்ளலாகாது பாப்பா      - சிறுவர் நாவல்
28                 
காட்டில் கலவரம்    - சிறுவர் நாவல்
29                 
உல்லாசப் பயணம்   -   சிறுவர் நாவல்
30                 
மனதில் உறுதி வேண்டும்                      சிறுவர் நாவல்
31                 
அந்த மாணவர் உலகம்   - சிறுவர் நாவல்
32                 
துணிச்சல் மிக்க சுந்தரி    -  சிறுவர் நாவல்
33                 
சுனாமி தந்த உறவு     -   சிறுவர் நாவல்
34                 
அந்த ஆவணி ஆறு       -  சிறுகதை தொகுதி
35                 
வம்மிப் பூ      - சிறுகதை  தொகுதி
36                 
கேணிப்பித்தன் கதைகள்    -   சிறுகதைகள் - தொகுதி
37                 
ஏன் வந்தாய்?          சிறுகதைகள் - தொகுதி
38                 
கும்பத்துமால்       சிறுகதைகள் - தொகுதி
39                 
வாக்கினிலே இனிமை வேண்டும்     (நாவல்)
40                 
கனவு மெய்ப்பட வேண்டும்     (நாவல்)
41                 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்    (நாவல்)
42                 
கேணிப்பித்தன் கவிதைகள்   (கவிதைத் தொகுதி)
43                 
அனர்த்த முகாமைத்துவம் ஒரு அனுபவ அணுகுமுறை ( ஆய்வு )


 

sfmali@kinniyans.net

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved. (தமிழ் ஆதர்ஸ்)