மாட்டிறைச்சித் தடை

அகில்

 


திகாலம் தொடக்கம் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் மக்களிடம் இருந்து வருகிறது. இன்று திடீரென்று மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று தடை செய்வது இந்திய அரசாங்கத்தின் உச்சக்கட்ட அராஜகத்தையே காட்டி நிற்கின்றது.

இந்திய விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நீர் இல்லாததால் விவசாயத்தொழில் நலிவடைந்த நிலையில் அவர்களுக்கு கை கொடுத்தது, மாடு வளப்பு தொழில். இன்று அத்தொழிலுக்கும் சாவு மணி அடிப்பதாக இருக்கிறது இந்த மாட்டிறைச்சி தடைச்சட்டம்.

அழிந்து வரும் விலங்கினங்களான மான், புலி, சிங்கம், யானை போன்ற மிருகங்களை பாதுகாப்பதற்காக சட்டம் இருப்பது வரவேற்கத்தக்க விடயம், மாறாக மாட்டிறைச்சி தடைச்சட்டம் என்பது எதிர்காலத்தில் விவசாயிகள் மற்றும் மாடுவளர்ப்பு தொழிலில் ஈடுபடும் மக்கள் அத்தொழிலை கைவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இது கொண்டு சொல்லும். முடிவில் அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் மாட்டு இனமும் சேர்க்கப்படும் என்பதே நிஜம்.

மாட்டிறைச்சி தடைகாரணமாக வன உயிரின பூங்காக்களில் உள்ள மிருகங்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு ஆண்டுதோறும் சுமார்
113டன் மாட்டிறைச்சி தேவைப்படுவதாக மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலில் இருந்து கொண்டு அதிக பணம் சம்பாதித்துக் கொண்டு சுகமாக வாழும் சிலரின் தூரநோக்குப் பார்வையில்லாத செய்கையாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்