-      காஞ்சனா முனி 2

 

இயக்கம்: ராகவா லாரன்ஸ்

திரைவிமர்சனம்:  கவிஞர் இரா ,இரவி

ராகவா லாரன்ஸ்  மாற்றுத் திறனாளிகளின் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் .திருநங்கைகளின் வலியை உணர்த்தி உள்ளார் .பாராட்டுக்கள் .திரு. சரத் குமார் பிம்பம் பற்றிய கவலை இன்றி திருநங்கையாக மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .சமுதாயத்தில் திருநங்கைகள் பற்றி மிகப் பெரிய விழிப்புணர்வை விதைத்து உள்ளார் .பாராட்டும்படியான நல்ல நடிப்பு .மதுரையில் பிறந்து உலக அளவில் பரத நாட்டியத்தில் புகழ் பெற்றுள்ள நர்த்தகி நட்ராஜ் பற்றி வசனத்தில் குறிப்பிட்டது பாராட்டிற்குரியது

 
ராகவா லாரன்ஸ் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி நடத்தி வருகிறார் .நல்ல சிந்தனையாளர் .அவரிடம் வேண்டுகோள் .கடவுள் இல்லை என்று சொல்பவன் நான் .நீங்கள் கடவுளை நம்பாத உலகில் பேய் இருப்பதாகத் திரைபடத்தில் காட்டுவது அபத்தமாக உள்ளது .கொலை செய்யப்பட்ட திருநங்கை ,மன நலம் குன்றியவர் ,இஸ்லாமியர்    முன்று பேயும் ஒருவர் உடலில் புகுந்து பலி வாங்குவது போல ,காதில் பூ சுத்தும் அபத்தமான கதை .பேய் இருக்கிறதா என்பதை தேங்காய் வைத்து சோதித்தல் ,பசுமாட்டை கொண்டு வந்து   சோதித்தல்,கையை அறுத்து ரத்தம் விட்டு சோதித்தல் என பல மூடநம்பிக்கைக் காட்சிகள் ஏராளம் உள்ளது .பின்னணி இசை ,தொழில் நுட்பம் போன்றவற்றை மூடநம்பிக்கை பரப்பிடப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை .
அறிவை ஆக்க வழிகளுக்கே பயன்படுத்த வேண்டும் .

கிரிகெட் குச்சியை நிப்பாட்டிய  போது ஒட்டிய ரத்தத்தில் இருந்து பேய் வருவதாக ,கழுவிய ரத்தத்தில் இருந்து தலை முடிகள் வருவது போன்ற காட்சிகள் நம்பும் படியாக   இல்லை .பயத்தை விட அருவருப்பை தந்த பேய் காட்சிகள் படத்தில் தாராளம்  .
வீட்டிற்குள்   சுவற்றில் சிறு நீர் கழிக்கும் காட்சி தவிர்த்து இருக்கலாம்.பெரிய பையன் சிறு நீர் கழிக்க தாயை உடன் அழைத்துச் செல்வது . சிறு நீர் கழிக்கும் போது அம்மாவைச் சாமி பாடல் பாடச் சொல்லுதல்  போன்ற காட்சிகள் தவிர்த்து இருக்கலாம் .

பழைய இயக்குனர்கள் விட்டாலச்சாரியரையும் ,ராம நாராயணனையும் விஞ்சும் வகையில் காதில் பூ சுற்றி இருக்கிறீர்கள் .படத்தில் லாட்சிக் இல்லாத பல காட்சிகள் உள்ளது.கோவை சரளா நல்ல நடிகை தாயாக நடித்து உள்ள அவரை நீச்சல்    உடையில் காட்டி அசிங்கப் படுத்தி இருக்கிறீர்கள்.தாயுக்கு சமமான அண்ணியின் இடுப்பில் கொழுந்தன் அமருவது காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம்.   இந்த வேலைகளை   சராசரி இயக்குனர்கள் செய்து விட்டு போகட்டும் .சமூக அக்கறையும் ,சிறந்த சிந்தனையும்   உள்ள  நீங்கள் செய்தது சரி இல்லை .உங்களிடம் ஆடும் திறன் உள்ளது ,இயக்கும் ஆற்றல் உள்ளது .உங்களிடம் இருந்து இயக்குனர் விஜய்  தந்த தெய்வத் திருமகள் போன்ற தரமான திரைப்படத்தை எதிர்பார்க்கின்றேன் கதாநாயகி லட்சுமி ராய் கவர்ச்சிப் பதுமையாக மட்டும் வந்து போகின்றார்.

திருநங்கைகள் பற்றி மிக உயர்வாக உணர்த்தி விட்டு கடைசிப் பாடலில் மற்றப் படங்களில் காட்டுவது போலவே திருநங்கைகளின் குத்தாட்டம் காட்டியது வியப்பாக இருந்தது .சந்திரமுகி பேய் தெலுங்கு பேசியது காஞ்சனா   பேய் இந்தி பேசுகின்றது .பேய் என்பதே கற்பிக்கப் பட்ட கற்பனை .இந்த உலகத்தில் பேய்  என்ற ஒன்றே கிடையாது .அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் .பேய் படங்களுக்கு வரும் காலங்களில் தடை விதிக்க வேண்டும் .குழந்தைகள் இது போடா படங்களைப் பார்த்து பயந்து விடுகின்றனர் .பிஞ்சு நெஞ்சங்களில் பயம் என்ற நஞ்சு விதைக்கும் விதமாக படம் உள்ளது

உங்களின் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து   விட்டு உலகில் பேய் உண்டு என்ற முடிவிற்கு பலர் வந்து இருப்பார்கள் .படம் முடிவில்  முனி 3 தொடரும்   என்று எழுத்து வேறு வருகின்றது .இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவரிடம் வேண்டுகோள்.முனி 3 தயவு செய்து எடுக்க வேண்டாம் சமுதாயத்தில் மூடநம்பிக்கைப் பரப்ப வேண்டாம் .
 

 


eraeravik@gmail.com