தூங்காவனம் (திரை விமர்சனம்)

ஞா.ஆரணி


2011இல் வெளியான பிரஞ்சு படமான 'Nuit Blanche' (Sleepless Night) இன் தமிழ் ''Remake" தான் 'தூங்காவனம்'. தீபாவளிக்குவெளியான இப்படம் இவ்வருடம் வெளியான கமல்ஹாசனின் மூன்றாவதுபடமாகும்.


திவாகர் (கமல்ஹாசன்) ஒரு
Narcotics Officer. அதாவது போதைப் பொருட்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் காவலதிகாரி. திவாகரின் மகன் அவருடன் சிலநாட்களும், அவரின் முன்னாள் மனைவியுடன் சில நாட்களுமாக வாழ்கிறான். தந்தை வேலையிலேயே கவனமாக இருப்பதால் மகன் மீது அன்பு  காட்டுவதில்லை போல் மகனுக்குத் தோன்றுகிறது.


இப்படி இருக்கையில் திவாகரும்,அவருடன் வேலைசெய்யும் மணியும் ஒரு போதைப் பொருள் கடத்தும் கும்பலை நிறுத்தி, அவர்களது போதைப் பொருட்களை எடுக்கின்றனர். இந்தச் சண்டையில், ஒரு கடத்தல்காரன் சூடுபட்டு இறக்கிறான். இதனால், இதை விசாரிக்க வந்த வேறு காவலதிகாரிகள் இதை ஒரு குழு மோதல் என நினைக்கின்றனர். இந்தக் காவலதிகாரிகளில் ஒருவர்தான் கதாநாயகியான மல்லிகா (திரிஷா).


தனதுபொருட்கள் திருட்டுப் போனதை அறிந்த போதைப் பொருட்கள் விற்கும் குழுவின் தலைவன் (பிரகாஷ்ராஜ்) திவாகரின் மகனைக் கடத்துகிறான். 'போதைப்' பொருள் உள்ளபையைத் தந்தால்தான் பையனை தரும்பித்தருவேன்' என திவாகரிடம் அவன் கூறுகிறான். போதைப் பொருள் நிறைந்தபையை கொண்டு செல்லும் திவாகரை கண்ட மல்லிகாவிற்கு அவர் மேல் சந்தேகம் வருகிறது.


திவாகர் நல்லவரா? கெட்டவரா? திவாகரால் போதைப் பொருள் நிறைந்தபையைகும்பல் தலைவரிடம் சேர்க்க முடிகிறதா? திவாகர் எவ்வாறு தனது மகனைக் காப்பாற்றுகிறார்? இவற்றை படத்தைப் பார்த்து அறியுங்கள்.


இனி இப்படத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
Hollywood படத்தை வைத்து எடுத்ததால் ஆங்கிலபடப்பிடிப்பின் சாயல் தெரிகிறது. உதாரணத்திற்கு இப்படத்தில் ஒருபாடலும் இல்லை. பொதுவாக, எந்த அளவிற்கு Serious ஆனபடம் என்றாலும், பாடல் தரும் கமல் இங்குதரவில்லை. ஆனால் படம் முடிந்துவரும் Credits ஐ பார்த்தால் ஒரு வியப்பு உங்களுக்குக் காத்திருக்கிறது.


கதாநாயகியும் இப்படத்தில் காதலிக்கவரவில்லை. மல்லிகாவும் ஒருபோதைப் பொருட்களை  தேடிப்பிடிக்கும் காவலதிகாரி. திவாகரைபற்றி கேள்விப்பட்டு, அவரை தனக்கு ஒரு முன் மாதிரியாககருதுகிறார். ஆனால் போதைப்பொருட்கள் உள்ளபையுடன் திவாகரைகாணும் போது மல்லிகாவிற்கு திவாகரை நம்புவதா அல்லது தனது மேலதிகாரியை நம்புவதா என தடுமாற்றம் ஏற்படுகிறது. இப்படத்தின் முடிவும் இவள் கையில்தான் இருக்கிறது. அவள் யார் குற்றவாளி என தீர்மானிக்கிறாளோ,அவர்தான் கைது செய்யப்படுவார். இப்படத்தில் திரிஷா சொந்தக் குரலில் பேசியதால் அது இயல்பாகவும் நன்றாகவும் இருந்தது.


திவாகரும் அவரதுமகனுக்கும் இடையேபோதிய அளவு தொடர்வு இல்லை. ;பள்ளிக்குநேரம் ஆயிற்று,
bat எங்கே? எனது தந்தை கேட்க, மகன் Soccer பந்தை தூக்கி, 'நான் கால் பந்தாட்டவீரன்' எனக் கூறுகிறான்.


இவ்வாறுதொடர்பு இல்லாவிட்டாலும் மகன் மீது தந்தைக்கு அதிக அளவு பாசம் இருக்கிறது. என பார்வையாளருக்கு புரிகிறது. மகனிற்கு எவ்வாறு இது புரிய வைக்கப்படுகிறது எனபடத்தைத் பார்த்து அறியுங்கள். அப்பாவும் அம்மாவும் சேரவேண்டும் என்ற ஆசை மகனிடம் இருப்பதையும் இப்படத்தின் இறுதியில் காணக்கூடியதாக உள்ளது.


மகள் மீதுள்ள அதீதபாசத்தில் எதையும் செய்யத் துணிந்த தந்தையாககமல் ஹாசனை 'பாப நாயத்ததில்' பார்த்தோம், மகன் மீதுள்ள அதீத பாசத்தால் எதையும் செய்யத் துணிந்த தந்தையாக கமல்ஹாசனை தூங்காவனத்தில் பார்க்கிறோம்.
  

asgnanam@gmail.com