குற்றம் கடிதல் (திரை விமர்சனம்)

ஞா.ஆரணி


சிறந்ததமிழ் படத்திற்கான தேசியவிருது பெற்றபடம்தான் குற்றம் கடிதல். புது நடிகர்களின் நடிப்பில் வெளியான இப்படம் பள்ளிக்கூடத்தையும்,அங்கு கொடுக்கப்படும் தண்டனையையும் பற்றியது.

கதாநாயகியாகிய மேர்லின் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். திருமணமாகிய பின்னர் முதல் முறையாக வேலைக்கு செல்கிறார். பள்ளியில் வேறு ஒரு ஆசிரியர் தன்னுடைய வகுப்பை கவனிக்க கதாநாயகியை கேட்கிறார். அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

செழியன் என்ற ஒரு மாணவன் வகுப்பில் சேட்டை செய்கிறான். தன் வகுப்பில் சகமாணவி ஒரு வரைமுத்தமிட்டதால் அவள் அழுகிறாள். ஆசிரியை என்னவென்று செழியனை விசாரிக்கும் போது,அவன் ஆசிரியரைக்கூட முத்தமிடுவேன் என்கிறான். அதிர்ச்சியில் ஆசிரியர் அவனைகையால் அடிக்கிறார். திடீரென்று செழியன் மயக்கம் வந்துதரையில் விழுகிறான். இதுவேபடத்தின் முக்கிய தருணம் ஆகும்.


இதற்கு பின்னர் என்ன நடக்கிறது? பள்ளிக்கூடத்தில் இவ்விடயத்தை எவ்வாறு சமாளிக்கின்றனர்? மேர்லினின் மனநிலைஎன்ன? செழியனிற்குஎன்னநடக்கிறது? தகப்பன் இல்லாத செழியனது
‘Auto driver’ வேலைபார்க்கும் தாயும்,தொழிற்சங்கவாதியான மாமனும் என்ன செய்கின்றனர்? முக்கியமாக ஊடகங்கள் இவ்விடயத்தை எவ்வாறு பெரிது படுத்துகின்றன? இவ்வாறான கேள்விகளின் பதில்களை படத்தைபார்த்து அறியுங்கள்.

இனி படத்தில் வரும் சிலவிடயங்களைப் பார்ப்போம். இந்தப்படத்தில் பலவிடங்களைக் காண்கிறோம்.
Corporal punishment (அதாவது அடிப்பதன் மூலம் தண்டித்தல்) தான் இப்படத்தில் முக்கியவிடயமாக இருந்தாலும்,படத்தின் தொடக்கத்தில் வேறு பல விடயங்களைக் காணுகிறோம். உதாரணத்திற்கு கதாநாயகி மேர்லின் ஒரு கிறிஸ்தவர், ஆனால் அவர் காதலித்து திருமணம் செய்தகணவர் ஓர் இந்து. இதனால் மேர்லினுடைய தாய் அவருடன் பேசுவதில்லை. மேர்லினும் இதை நினைத்து வருத்தப்படுகிறாள்.

மறுபக்கத்தில் ஆசிரியர்கள்
Reproductive health ஐப்பற்றி மாணவர்களுக்கு படிப்பிக்கிறதா? இல்லையா? எனவிவாதிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் கெடுவார்களா? அல்ல நன்மை பெறுவார்களா? என வாதிடுகிறார்கள்.


முற்கூறியதுபோல் இப்படத்தின் முக்கிய கருத்து: பிள்ளைகளை அடித்துதிருத்துவதா? அணைத்துப்பேசிதிருத்துவதா? என்றாலும் இப்படம் இரு பக்கங்களின் நியாயங்களையும் காட்டுகிறது. அடிக்காவிட்டால் திருந்தமாட்டார்கள் எனவும் அடித்தால் மனநிலை பாதிக்கப்படும் எனவும் சிலர் வாதிடுகின்றனர். ஊடகங்களின் வாதத்திற்கு நடுவில் மேர்லினும்,செழியனின் தாயும் சிக்குப்படுகின்றனர். இருவரும் செழியன் உயிர்தம்பவேண்டும் என்று ஆசைப்படுகின்றர். படம் மிகவும் விறுவிறுப்பாக செல்வதற்கு செழியனின் மயக்கத்திற்குபின்னால் ஒரு மர்மம் இருப்பது உதவுகிறது.


மாணவரை ஆசிரியர் அடித்தது சரியோ, தவறோ, கடைசியில் செழியனுக்கு நன்மையாகவே இவ்விடயம் முடிவடைகிறது. பாடசாலைகளில் பிள்ளைகளை ஆத்திரத்தில் ஆசிரியர் அடிப்பதை தவறு என்று கூறினாலும் இப்படத்தில் ஆசிரியர் அடிப்பது ஒரு தற்செயலான நிகழ்வாகி ஒரு ஏழைச்சிறுவனின் பெரும் வியாதி பல ஆயிரம் ரூபாய் செலவில் குணப்படுத்தப்படஉதவுகிறது.


இது மாணவர்களும் பெற்றோரும் கட்டாயம் பார்க்கவேண்டியபடம்.
 

 

 


 

 


 

asgnanam@gmail.com