அகத்திகீரை

வைத்திய கலாநிதி கே.ரி.கோபால்



சிறிய மெல்லிய வன்மையில்லாத மரமாகும். ஏறக்குறைய 20-30 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. கிளையற்ற ஒரு அடி உயரமுள்ள இரட்டைக் கூட்டு இலையாகும். சிற்றிலைகளும் உண்டு. பெரும்பாலும் 1' நீளம் உடையது. நீள்சதுர வடிவமைப்புடையது. இதன் 'பூ' பெரியது. 2' - 3' இருக்கும் வெள்ளை நிறம் கொண்டதாக இருந்தாலும், சிவப்பு பூக்களும் செறிந்து காணப்படும்.

மகரந்த சேகரம் பத்தில் ஒன்று தனித்து இருக்கும். மிகுதி ஒன்பதும் ஒன்றாகச் சேர்ந்து காணப்படும். காய் ஏற்குறைய
1' நீளம் உடையது. இதன் விதைகளுக்கு இடையில் பள்ளமான பகுதி காணப்படும்.

இதன் கீரையும், பூவும், காயும் கறிப்பாவனைக்கு உதவும், காயும் கறிப்பாவனைக்கு உதவும். அகத்தியில் மூன்று வகையுண்டு.

1. அகத்தி
2. செவ்வகத்தி
3. சாழையகத்தி என்பனவாகும்.

அகத்தியின் பூ வெண்ணிறமாக இருக்கும். இதனை வெண்ணகத்தி என்றும் செந்நிறப்பூவுடைய அகத்தியை செவ்வகத்தி எனவும் அழைப்பர். இது சுவையானது கைப்பாகும். விஷத்தை முறிக்கும் ஆற்றல் உள்ளதால் 'விஷநாசினி' (
Antitoxin) என்று கூறுவர். குளிர்ச்சியை உண்டாக்குவதால் 'சீதளகாரி' (Refrigerant) எனவும், உடல் வெப்பத்தை அகற்றுவதினால் 'வெப்பகாரி' (Gigestone) எனவும் அழைக்கப்படுகின்றது.

இதன் மறுபெயர்களைப் பார்க்கும்போது கரீரம், முளி, அச்சம் எனக் கூறப்படுகின்றது. அகத்திக் கீரையின் செயலைப் பார்க்கும் போது உடலில் உண்டாகும் பத்தத்தை தணிக்க வல்லது. இடுமருந்தின் தோஷத்தையும் அகற்றும் தன்மையுடையது. உணவை சீரணிக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது.

'பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னுமவர்க்கு

இந்த அகத்தி இலையானது இடுமருந்தின் குணத்தை மறிப்பது போல், மற்ற மருந்துகளின் செயல்தன்மையையும் திறனையும் கெடுத்துவிடும் ஆற்றல் உடையது. எனவே இதனை தினமும் பாவிப்பதை தவிர்ப்பது நன்று. தவறின் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்து. இரத்தத்தையும் முறிக்கும் ஆற்றல் படைத்ததினால் பாண்டு, சோகை போன்ற வியாதிநிலை தோன்றி விடும். எனவே நாளாந்தம் பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

இதில் கூறப்பட்ட செவ்வகத்திக் கீரையை பெரும்பாலும் சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் செந்தூரம், நவிநீதபஸ்பம் தயாரிக்கும் போது இதனைப் பயன்படுத்துவார்கள்.

புகைபிடிப்போர் புகையிலை பாவிப்போர் போன்றோருக்கு ஏற்படும் பித்த அதிகரிப்பை அகத்திப் பூ கட்டுப்படுதும்.

'புகை பித்தமும் அழலாற் பூசிக்கும்
அந்த வகைப் பித்தமும் அனலும் மாறும்' என்பர். சீமையகத்தி என்ற இனமும் உண்டு. அகத்திப்பூ, அவரைப்பூ போன்று பட்டாம் பூச்சி வடிவில் தோற்றம் அளிக்கும். இலையின் காம்பு மிகச்சிறியது. காம்பு அற்றதுபோல் காட்சியளிக்கும். சிற்றிலையின் நுனியில் முள்போன்ற நீட்சி உள்ளது. இலைகள் முக்கோண வடிவடையன. இதன் கனி நாக்கு வடிவில் நீளமாக இருக்கும். இதன் இலை புளிப்புச் சுவையுடையது. வாத குணத்தை குணப்படுத்தும் தன்மையுடையது. காசம், இருமல் மற்றும் தோலில் ஏற்படும் படர்தாமரைக்கு
(Ringworm) நன்மையை விளைவிக்கும் மருந்தாகும். இதன் இலையை தேசிப்புளிச்சாற்றில் அரைத்துப் படைக்கு மேல் பற்றுப் போடவேண்டும். எக்ஸிமாவிற்கு நல்ல மருந்தாகும். இதன் இலை, பூ, பட்டை கசாயம் செய்து உரிய இடத்தை நன்றாகக் கழுவவேண்டும். பூரணகுணம் கிடைக்கும்.

இந்த சீமை அகத்தியின் மறுபெயரை அறிந்து கொள்வது மிக நல்லது. வண்டுகொல்லி, மலைத்தகரை, பேயக்தி ஆங்கிலத்தில்
Ringworm shirt எனவும் அழைப்பார். இதன் இலை, வேர், பூ என்பன பாவகைக்கு எடுப்பதுண்டு அதாவது இவற்றை எடுத்து உரய இடத்தில் தேய்த்தால், அல்லது தேசிப்புளிச்சாற்றில் அரைத்து உரிய இடத்தில் பூசினால் குணம் கிடைக்கும். மற்றும் இதன் இலையை எடுத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் சூடாக்கி உரிய இடத்தல் தடவி வர குணம் கிடைக்கும்.

சீமை அகத்தி இலையை கசாயம் செய்து பாவித்து வந்தால் சர்மநோய், விஷகடி,மேகப்புண் யாகும் குணமாகும்.