நரம்புகளுக்கு பலம் தரும் வெண்தாமரை
 



நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வெள்ளை தாமரையின் மருத்து குணங்கள் பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.கோடை காலத்தில் எளிதாக கிடைக்க கூடியது வெள்ளை தாமரை. இதன் பூக்கள், இலைகள், தண்டுகள், கிழங்குகள் ஆகியவை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டவை. குளம், குட்டை, ஏரிகளில் உள்ள இந்த தாமரை அதிகமான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

வயிற்றுபோக்கை சரிசெய்கிறது. வெள்ளை தாமரை பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகள் பலம் அடைகிறது. காய்ச்சலை தணிக்கும் தன்மை உடையது. இதயத்துக்கு மருந்தாகிறது. சிறுநீரக கோளாறை சரிசெய்கிறது. வயிற்று புண்களை ஆற்றுகிறது. மூளைக்கு பலம் கொடுக்கிறது. சிறுநீர் தாரையை சீர்படுத்துகிறது.வெள்ளை தாமரை பூக்களை பயன்படுத்தி இதயம், நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தாமரைப்பூ, பனங்கற்கண்டு, ஏலக்காய், லவங்கம்.

தாமரை பூவின் இதழ்கள்கள் சுமார்
10 எடுக்கவும். இதில், சிறிது பனங்கற்கண்டு மற்றும் 2 ஏலக்காய், 2 லவங்கம் தட்டி போடவும். பின்னர் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை வேளையில் தினமும் குடித்துவர இதய நாளங்கள் பலம் பெறுகிறது. இதயத்தின் இதமான செயல்பாட்டுக்கு பயன்படுகிறது. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. நுரையீரலில் ஏற்படும் நோய்கள் போக்குகிறது. சளியை கரைத்து நுரையீரலை சீர்படுத்துகிறது. காய்ச்சல், சளி பிரச்னை இருக்கும்போது இந்த தேனீரை எடுக்கலாம்.

தாமரை விதையை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தாமரை விதை, பனங்கற்கண்டு.தாமரை விதை நாட்டு மருந்து கிடைக்கும். விதையின் மேலிருக்கும் ஓட்டை நீக்கிவிட்டு தாமரை பருப்பை எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இது கெட்டியாகும்போது காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை வடிகட்ட, இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வெள்ளை தாமரை பூக்களை பயன்படுத்தி வியர்குர, அம்மை, அக்கி பிரச்னைகளுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தாமரை பூ, பனங்கற்கண்டு.தாமரை பூவின் இதழ்களை பசையாக அரைக்கவும். எடுக்கவும்.
2 ஸ்பூன் பசை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காலை, மாலை இருவேளை குடித்துவர அம்மை, அக்கி, வியர்குரு சரியாகும். இது, தூக்கத்தை வரவழைக்கும். கோடை காலத்தில் சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். தாமரை பூவின் சாறை மேல்பற்றாக போடும்போது வியர்குரு, அக்கி குணமாகும்.

தலையில் ஏற்படும் பாரத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தினமும் தலைக்கு குளிப்பதால் தலையில் பாரம் ஏற்படும். குளிர்பானங்களை அடிக்கடி குடிப்பதால் தலையில் நீர் கோர்க்கும். இப்பிரச்னைகளுக்கு தும்பைப்பூ மருந்தாகிறது. தும்பை பூக்களை சேகரித்து, நல்லெண்ணெயில் இட்டு, ஒரு சிறு மிளகாய் துண்டு சேர்க்கவும். இதை காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிப்பதால் தலைபாரம் குறையும். தலையில் நீர்கோர்க்கும் பிரச்னை குணமாகும்.



நன்றி: தினகரன்


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்