திரிபலை சூரணம்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

டுக்காய்த்தூள், தான்றிக்காய்த்தூள், நெல்லிக்காய்த்தூள் மூன்றையும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலை சூரணம் (Triphala churna) ஆயுள்வேதமருத்துவர்களின் கைகண்டமருந்தாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுகிறது. திரிபலைச் சூரணத்தைத் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள கொலெஸ்ரறோலைக் குறைக்கமுடியும். திரிபலை சூரணம் இருதயம் ஈரல் சமிபாட்டுத்தொகுதி கண்கள் போன்ற உடல் உறுப்புக்கள் பலவற்றுக்கும் நன்மை பயப்பதுடன் உடல் நிறையக்குறைக்கவும் உதவுகிறது.

நாளொன்றுக்கு
2 தொடக்கம் 3 கிராம் வரை சுடுநீருடன் படுக்கைக்குப் போகுமுன்னர் அருந்தலாம். அல்லது உணவு இடைவேளகளில் ஒவ்வொரு கிராமாக மூன்றுதடவைகள் எடுக்கலாம். இதன் கைப்புச்சுவை பிடிக்காவிடின் வில்லை (capsule) களாக எடுக்கலாம். வயதையும் தேவையைப் பொறுத்து ஒன்று தொடக்கம் மூன்று வில்லைகளை எடுக்கலாம். கால் தேக்கரண்டியுடன் ஆரம்பித்துப் பின்னர் தேவையைப்பொறுத்து அளவைக்கூட்டலாம். அளவுக்கு அதிகமானால் வயிற்றோட்டம் ஏற்படும்.

கண்ணில் ஏற்படக்கூடிய வியாதிகளைத் தடுத்து கண்களுக்கு வலுவூட்டும் மருந்தாக திரிபலைச் சூரணம் கருதப்படுகிறது.
10 கிராம் தொடக்கம் 50 கிராம் வரையிலான தூள் ஒருநேரம் கண்களைக்கழுவத் தேவைப்படலாம். தூளின் அளவிலும் பதினாறு மடங்கு நீரில் அதனை ஒருமணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் நீரில் அரைவாசி ஆவியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும். இந்தக் கஷாயத்தை ஒரு மெல்லிய சுத்தமான பருத்தித்துணிகொண்டு வடித்துஎடுத்து இளஞ்சூட்டுடன் கண்களைக் கழுவ வேண்டும். திரிபலை சூரணத்தை அனைத்து ஆயுர்வேதக்கடைகளிலும் பெற்றுக் கொள்ளமுடியும். எனினும் நம்பகத்தன்மையுடய கடைகளில் இம்மருந்தை வாங்கவும் அல்லது நீங்களாகவே இதனைத் தயாரித்துக்கொள்ளலாம்.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்