கக்கரிக்காய்

கலாநிதி பால.சிவகடாட்சம்

கக்கரிக்காய் பித்தம் கடியும் கபமுயர்த்தும்
மெய்க்குக் குளிர்ச்சிதரு மெல்லியலே-முக்குகின்ற
மூல வழறணிக்கு மூடிரத்த பித்தத்தை
சால வகற்றிவிடும் சாற்று.


                                                           - பதார்த்தகுணசிந்தாமணி


வெள்ளரிக்காய்க்குடும்பத்தைச் சேர்ந்தது இந்தக்கக்கரிக்காய். எனினும் இது சற்று வித்தியாசமானது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்பெறும் இந்தக்காய் சமையலுக்குப் பயன்படக்கூடியது. கக்கரிக்காயைக் காயவைத்து இடித்து எடுத்த தூளை பக்கெட்டிகளில் அடைத்து kachri powder என்னும் பெயரில் விற்பனைக்கு வைத்துள்ளார்கள். இறைச்சியை மென்மையாக்க இந்த தூள் உதவுகின்றது.

Wild melon என்பது கக்கரிக்காயின் ஆங்கிலப்பெயர்.

Cucumis melo ssp.agrestis என்பது இதன் தாவரவியற்பெயர்

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்