பெருங்காயம் Asafoetida

கலாநிதி பால.சிவகடாட்சம்


அட்டகுன்மம் தானும் அணுகாது ஆகமதில்
ஒட்டியவாய்வுத் திரட்சி ஓடுமே-முட்டவே
வருங்காயம் புட்டியாம் மாரிழையீர் கேளீர்
பெருங்காயம் என்று குணம் பேசு


இதன் பொருள்: எட்டுவகையான குன்மங்களும் சேராது. வாய்வுப் பிரச்சனைகள ஓட்டிவிடும். உடலுக்கு வலுவைக்கொடுக்கும். பெண்ணே பெருங்காயத்தின் குணம் இதுவாகும்.
மேலதிக விபரம்: பெருங்காயம் என்பது பெருஞ்சீரகக்குடும்பத்துக்குரிய ஒரு தாவரத்தின் வேர்க்கிழங்கில் இருந்தும் லிருந்தும் தண்டில் இருந்தும் பெறப்படும் ஒரு பிசின் ஆகும். ஈரான் தேசத்துக்குரியது இந்தத்தாவரம். இந்த மூலிகைப் பொருளைக் கட்டியாகவோ தூளாகவோ கடைகளில்பெற்றுக் கொள்ள முடியும். செமியாக்குணம், வாய்வு என்பற்றைத்தீர்த்து வைக்கும் சிறந்த மருந்தாகப் பெருங்காயம் உள்ளது. எளிதில் சமிபாடு அடையாத போஞ்சி கடலை மற்றும் பருப்பு வகைகளைச் சமைக்கும்போது பெருங்காயத்தையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாய்வுக்கோளாறுகள் ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

இருமலுக்குப் பெருங்காயக்குடிநீரை சிறிதளவு தேனுடன் குடிக்கலாம். இரத்தத்தில் கூடுதலாக உள்ள கொலெஸ்ரெறோல் உட்பட்ட கொழுப்புக்களின் அளவைக்குறைக்கும் குணமுடையது பெருங்காயம் என்று கூறப்படுகிறது.

Asafoetida என்பது பெருங்காயத்தின் ஆங்கிலப்பெயர்.
Hingu என்பது இதன் வர்த்தகப் பெயர்.
Ferula assa-foetida L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.


 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்