குழந்தைகளுக்கு வரும் மழைக்கால நோய்கள்

முனைவர் செ.இராஜேஸ்வரி


டகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. மழை கொட்டு கொட்டென்றுகொட்டுகிறது வழியெல்லம் ஒரே தண்ணீர் அதில் பல இடங்களில் கழிவு நீரும் ரோட்டோரத்துக் குப்பைகளும் சேர்ந்து வருகின்றன. குழந்தைகள் சிலர் வெறுங் கால்களோடும் ஷு போட்ட கால்களோடும் சாக்ஸ் நனைந்தபடி பள்ளிக்கூடம் விட்டு வருகின்றன. அவர்கள் மழை நீரில் நனைவதாலும் அழுக்கு தண்ணீர் அவர்கள் மீது படுவதாலும் பல நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றன. சுத்தம் சுகம் தரும் என்ற பழமொழி நமக்கு முதல் வழிகாட்டி என்றாலும் மழைக்காலத்தில் குழந்தைகளை தாக்கும் சில நோய்களை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கிய கடமையாகும்.

மழைக்கால நோய்கள்

மழை பெய்ய ஆரம்பித்தவுடன் குழந்தைகளுக்கு பல விதமான காய்ச்சல் வர வாய்ப்புண்டு. காய்ச்சல் எனப்படும் சளி காய்ச்சல் டைஃபாய்டு காய்ச்சல் வைரல் காய்ச்சல் என பலவகை காய்ச்சல் வரக்கூடும். இவை தவிர காலரா மலேரியா போன்ற நோய்களும் ஏற்படும். உணவு காரணமாக புட் பாய்சன் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு போன்ற குடல் நோய்களும் இந்த மழைக்காலத்தில் உண்டாகும்.

கிராமங்களில் மழைக் காய்ச்சல் என்பர். அங்கு ஆடு மாடு மற்றும் நாய் பூனை எலி போன்ற மிருகங்களால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தாக்குதலும் ஏற்படும். இந்நோய் வந்தால் அதை தொடர்ந்து கண் பாதிப்பும் ஏற்படும். நகரத்தில் வீட்டில் செல்ல பிராணிகளோடு விளையாடும் குழந்தைகளை தாய்மார் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் லெப்டோஸ்பைரோசிஸ் வர வாய்ப்பு உண்டு. இதை சிலர் எலி காய்ச்சல் என்றும் கூறுவர். [இது குறித்து தனியாகக் காண்போம்]

மழைக்கால நோய்களில் இருந்து நம் குழந்தைகளை காத்துக்கொள்ள முதல் வழி அவர்கள் கை கால் உடை அவர்கள் புழங்கும் தரைப் பகுதி அவர்கள் தொட்டு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை கிருமிநாசினியை பயன்படுத்தி அடிக்கடி கிருமி நீக்கம் செய்து சுத்தமாக வைத்துக்கொள்வதே ஆகும்.

காய்ச்சல்

Influenza எனப்படும் காய்ச்சலை நாம் பொதுவாக சளி காய்ச்சல் என்போம். ஆனால் இரண்டும் வெவேறு நோய்கள் ஆகும். இரண்டுமே வைரசால் ஏற்படும் தொற்று நோய்கள் ஆகும் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு எளிதில் தொற்றக் கொள்ளக்கூடியவை. இருமும்போதும் தும்மும்போதும் சுத்தமான கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் முடிந்த வரை மூடி பிறருக்கு தன் நோயின் தாக்குதல் ஏற்படாவண்ணம் கவனமாக் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் தொற்றில் இருந்து தற்கத்துக்கொள்ளும் முறைகளை கற்றுத்தர வேண்டியது தாய்மாரின் கடமையாகும்.

டைஃபாய்டு காய்ச்சல்

மழை வந்துவிட்டால் டைய்ஃபாய்டு காய்ச்சல் வேகமாக பரவும். நோய் தாக்கியவரைத் தொடுவதாலும் அவர் இருமும்போது அவர் மூச்சுக்காற்று படுவதாலும் டைபாய்டு அடுத்தவருக்கு தொற்றிவிடும் எனவே நோய் தாக்கிய குழந்தையின் பொருட்களை டெட்டால் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.

வயிற்றுப்போக்கு

அழுக்கான தண்ணிரை தொடுவதாலும் கையை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதாலும் நொய்க்கிருமிகள் கை வழியாக வயிற்றுக்குள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். இந்நோய் இரண்டு வகைப்படும் சில குழந்தைகளுக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இரண்டு நாட்களில் குணமாகிவிடும். சிலருக்கு மெல்ல மெல்ல தொடங்கி ஒரு வாரம் பத்து நாள் வரை நீடிக்கும். இரண்டு வகை வயிற்று போக்கும் குணப்படுத்தக் கூடியதே என்றாலும் சுத்தமான நடவடிக்கைகளே இதற்கு முதல் தேவை ஆகும்.

வயிற்றுப்போக்கால் குழந்தைகளூக்கு வயிற்று வலி வாந்தி மயக்கம் உடல் சோர்வு போன்றவையும் ஏற்படும். உடலில் இருந்து அதிக நீர் வெளியாவதால் உடல் வறட்சியை போக்க கொதிக்க வைத்து ஆற வைத்த நீரில் உப்பும் சர்க்கரையும் கலந்து அடிக்கடி கொடுத்து உடம்பின் ஈரத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.
 
மலேரியா காய்ச்சல்

அனோஃபிலிஸ் கொசு வகையில் பெண் கொசு கடிப்பதால் வரக்கூடிய நோய் மலேரியா. இந்த கொசு வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டால் மலேரியா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். ஒரு குழந்தைக்கு மலேரியா நோய் வந்துவிட்டால் முதலி சாப்பாடு செல்லாது குழந்தை அடிக்கடி வாந்தி எடுக்கும்; இருமிக்கொண்டேயிருக்கும் பின்னர் உடல் கதகதப்பாகி அனல் போல கொதிக்கும். மலேரியாவுக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் அது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும் எனவே நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மலேரியா பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நோய் பரவுதல்

நோய் தாக்கியவரின் மலத்தின் மூலமாக நோய்தொற்று ஏற்படும் எனவே கழிவு நீர் கலந்த நீரில் நடக்கும் போதும் அந்த நீர் நம் மீது தெறிக்கும்போதும் நோய்க்கிருமிகள் நம் மீது ஒட்டிக்கொள்ளும் நாம் கை கால்களை சரியாக கழுவாமல் இருந்தால் நோய் கிருமி உடலுக்குள் சென்று நோய் தாக்குதலை ஏற்படுத்திவிடும். சில நோய் ஈக்களால் பரவக்கூடியன. எனவே ஈ மொய்க்கும் இடத்தை கடந்து வண்டியிலோ நடந்தோ குழந்தைகளுடன் வரும்போது நாம் நோய் தாகுதலுக்கு உள்ளாவோம் அவ்வாறு வந்து வீடு சேர்ந்தபிறகு குழந்தைகளை டெட்டால் கலந்த நீரில் கை கால்களை கழுவலாம் அல்லது டெட்டால் சோப் போட்டு குளிக்க வைக்கலாம். அதுவரை எந்தப் பொருளையும் சாப்பிடக் கொடுக்க கூடாது. நன்கு சமைக்காத உணவுப்பொருளை சாப்பிட்டாலும் பழம் பச்சடி சாலட் போன்றவற்றை சாப்பிடுவதாலும் நோய் தாக்கும் அபாயம் உண்டு.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்

மழைக்கால் நோய்களில் இருந்து பாதுகாக்க குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவேண்டும். தெருவில் அசுத்தமான மழை நீரில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கு முன்பும் கை கால்களை கிருமிநீக்க சோப் கொண்டு கழுவ வேண்டும். குழந்தைகளை ஈர உடைகளில் இருக்கவிடக்கூடாது. விட்டமின் சி அதிகம் உள்ள பச்சை காய்கறிகள் கீரைகள் போன்ற உணவுகளை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு அதிகரிக்க வேண்டும். அழுக்கு மழை நீர் தெளிக்கக்கூடிய தெருவில் விற்கும் உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிட கொடுக்க வேண்டாம்.

நோய் அறிகுறி தென்பட்ட உடனேயே மருத்துவரிடம் அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் கை மருந்து வீட்டு மருந்து எனக் கொடுத்து கால தாமதம் செய்ய கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை ஒரு கோர்ஸ் முழுமையாக கொடுக்க வேண்டும். நோய் குணமாகிவிட்டது என்று இரண்டு மூன்று நாட்களில் நிறுத்திவிடக் கூடாது. அவ்வாறு செய்தால் நோய் திரும்ப வரும் வாய்ப்பு மிகுதி.
 







 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்