இலங்கைப் பறங்கியர்

பொன் குலேந்திரன்


லங்கையின் மக்கள் தொகையின் 0.40 விகிதம் பறங்கியர்கள் எனப்படும் சிறுபான்மையினத்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர். ஆங்கிலமும் சிங்களமும் பேசுபவர்கள். புகையிரத திணைக்களத்தில் புகையிரதம் ஓட்டும் சாரதிகளாக பல பறங்கியர் ஒரு காலத்தில் வேலை செய்தனர்.

ஸ்ரீலங்காவில் 'பறங்கியர் கோட்டைக்குப் போன மாதிரி' என்று பேச்சு வாக்கில் சொல்லும் சிங்கள வசனம் பிரபல்யமானது. அதன் அர்த்தம் 'சுற்றி வளைத்து பேசாதே நேரடியாக விஷயத்துக்கு வா' என்பதாகும். போhத்துக்கேயர் கொழும்பு துறைமுகத்தில் வந்தறங்கிய போது; அவர்கள் ரொட்டி சாப்பிடுவதையும் வைன் குடிப்பதையும் கண்டு உள்ளுர் வாசிகள் வியந்தனர். இதென்ன வெள்ளை நிறக்கல்லைத் தின்று இரத்தத்தை குடிக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சூழ்ச்சியால் இலங்கையின் பெரும்பகுதிகளை ஆட்சிபுரியப் போகிறார்கள் என்பது உள்ளுர்வாசிகளுக்கு தெரிந்திருக்கவில்லை. தங்களை கோட்டை இராஜதானியை ஆண்ட மன்னனிடம் அழைத்துப் போகும் படி போர்த்துக்கேயர் கேட்டபோது மன்னனின் அரண்மனை இருந்த கோட்டை என்ற இடம் அண்மையிலிருந்தபோதும் வெகு தூரத்தில் இருக்கிறது என்று காட்டுவதற்காக அவர்களை உள்ளுர் வாசிகள் பல வழிகளால் சுற்றி சுற்றி அழைத்துச்சென்றதாக ஒரு கதையுண்டு. இந்த பரங்கியர்கள் யார். எவ்வாறு இவர்கள் காலப்போக்கில் இலங்கையில் சிறுபான்மையினமானார்கள் என்பது சரித்திரம்.

ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சிசெய்த போது
Maetsuyker என்ற டச்சுக்காரன் 1646 முதல் 1650 வரை கவர்னராயிருந்த காலத்தில் Burgher என்ற இனப் பெயரை இலங்கை வாழ் டச்சுக்காரர்களுக்கு சூடினார். வில்லியம் டிக்பி என்பவர் இவர்களை Eurasians of Ceylon  என அழைத்தார். அதாவது ஐரோப்பியர்களும் ஆசியர்களும் கலந்த இனம் என்பதை அது குறிக்கும். பறங்கியர்கள் ஜெர்மன் மரபுவழிவந்தவர்கள் என்கிறார் இலங்கை பறங்கியர் சங்கத் தலைவர். 1665ல் சுமார் 65 மணமாகிய பறங்கியர் குடும்பங்கள் இலங்கையில் வாழ்ந்தனர். ஒல்லாந்தாரின் முதல் முப்பது வருட ஆட்சியின் போது 500க்கு மேற்பட்ட பறங்கியர் வாழ்ந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மாலுமிகள். கள்ளுத் தவறணை நடத்துபவர்கள். அரசசேவையில் லிகிதர்கள்.. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள். உள்ளுர்;வாசிகளைவிட இவர்களுக்கு ஒல்லாந்து அரசு தனிப்பட்ட சலுகைகளைக் கொடுத்தது. சுருங்கச் சொன்னால் இலங்கையில் இன வேற்றுமை ஐரோப்பிய ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்பட்டது. உள்ளூர் வாசிகளை விட பறங்கியருக்கு அரசசேவையில் அதிக வாய்ப்பு இருந்தது. பாண் சுடுதல். காலணி தயாரித்தல் . இறைச்சி கடை வைத்திருத்தல் போன்ற வியாபரங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டு சுதந்திரமாக வணிகம் செய்ய முழு உரிமைகளும் வழங்கப்பட்டது. டச்சுப் பறங்கியர் திருமணம் செய்வதில் சில விதிமுறைகள் இருந்தன. உள்ளுர் பெண்களைத் திருமணம் செய்யச் சட்டம் இடம் கொடுத்தாலும். அப்பெண்களை போர்த்துக்கேய ஆண்கள் திருமணம் புரிய கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இந்து அல்லது பௌத்த மதப் பெண்களை அவர்கள் திருமணம் செய்ய முடியாது. இவர்களுக்கு பிறந்த பெண்பிள்ளைகளும் டச்சுப் பறங்கியரை மட்டுமே திருமணம் செய்ய முடியும்.

காலப்போக்கில் பறங்கியர் இனம் இரண்டாக வளரத்தொடங்கியது. ஒன்று டச்சுப் பறங்கியர் இனம் மற்றது போர்த்துக்கேய பறங்கியர். டச்சு பறங்கியர்கள் வெள்ளை நிறத்தவர்களாகையால் உயர்ந்த இனமாகக் கருதப்பட்டனர். இவர்கள் ஐரோப்பியர்களாக கருதப்பட்டனர். போர்த்துக்கேயர் நிறம் குறைந்தவர்கள். டச்சு பறங்கியர் தம் இனத்தை போர்த்துக்கேய பறங்கியரை விட உயர்சாதியினர் எனக் கருதினர். மற்றைய போர்த்துக்கேய பறங்கியர்களை இவர்கள் ஆங்கிலத்தில்
Mikoes, Lafai Types, Tea bushes , Godaya, Yako, Karapati lansi எனப் பல பெயர்களால் அழைத்தனர். கரபொத்தி லன்சி என்று வெள்ளையரல்லாத பறங்கியரை அழைக்கும் முறை இன்றும் இலங்கையில் இருந்துவருகிறது. இவர்கள் ஐரோப்பியர்களாக கருதப் படவில்லை. இப்பறங்கியர் Creole என்ற பாஷை பேசும் கத்தோலிக்க மதத்தினர். டச்சுக்காரர் ஸ்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஐரோப்பாவில் மதத்தைச் சேர்ந்த போர்த்துக்கேய பறங்கியரை வெறுத்தனர் எனப்பது ஒரு காரணமாகும்.இருந்த காரணத்தால் புரொத்தஸ்தாந்து; மதத்தை சேர்ந்த அவர்கள், கத்தோலிக்க ஒல்லாந்தர் ஆட்சியில் கடைசி தசாப்தங்களில்; ஒல்லாந்தர்களின் இராணுவத்தின் ஒரு பகுதியாக பறங்கியர்கள் செயலாற்றினார்கள். ஒல்லாந்தருக்கும் பிரித்தானியருக்கும் இடையேயான நான்காவது போரில் அவர்கள் கொழும்பு நகரம் பிரித்தானியர் கைவசம் போகாமல் எதிர்த்து நின்று போராடினர். ஐரோப்பாவிலிருந்து பல பறங்கியர் இலங்கைக்கு வந்து குடியேறி உள்ளூர் பெண்கள் பலரைத் திருமணம் செய்தனர்.

1796ல் பிரித்தானியர் இலங்கையை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிய போது கிட்டத்தட்ட 900 பறங்கியர் குடும்பங்கள் கொழும்பு. காலி . மாத்தறை. யாழ்ப்பாணம். மட்டக்களப்பு போன்ற நகரங்களில் வாழ்ந்தனர். பிரித்தானியர் ஆட்சியில் பறங்கியருக்கு உள்ளூர்வாசிகளை விட பல சலுகைகள் கிடைத்தன. டச்சு பரங்கியர் படிப்பபடியாக தம் மொழியை மறந்து ஆங்கிலத்தை கற்கத்தொடஙகினர். 1860ல் டச்சு மொழி முற்றாக மறைந்தது. போர்த்துக்கேய பறங்கியர் 19ம் நூற்றாண்டு வரை
Creole மொழியைப் பாவித்தனர். அதன் பின் அம்மொழியும் மறைந்தது. 1907ல் டச்சு பறங்கியர் தமக்கென ஒரு சங்கத்தை உருவாக்கினார்கள்.

பிரித்தானியரின் ஆட்சிக்குப்பின் பறங்கியருக்கு அரசில் கிடைத்த சலுகைகள் மறைந்தன. சிங்களம் மட்டும் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் பல பறங்கியர் அவுஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் இடம் பெயர்ந்தனர்.
1963ல் 45.990 ஆக இருந்த பறங்கியர் தொகை 1981ல் 39.374 ஆக குறைந்தது.

யாழ்ப்பாணத்தில் பறங்கியர்

யாழ்பாணத்தில் பறங்கியர் குடும்பங்கள் வாழ்ந்த தெருவை பறங்கித் தெருவென அழைத்தனர். இது பிரதான வீதியின் ஒரு பகுதியாகும். டச்சு படையில் சேவை செய்து ஓய்வு பெற்வர்கள் பலர் யாழ்பாணத்தில் குடியேறினார்கள். அவர்கள் டச்சுக்காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்தார்கள். இவ்வீடுகளில் சிலவற்றை இன்றும் யாழ்ப்பாணத்தில் காணலாம். யாழ்ப்பாண பறங்கியர்கள் பலர் பரியோவான் கல்லூரியிலும் வேம்படியிலும் கல்வி பயின்றனர். வான்டுவேஸ்ட் என்ற பறங்கியினத்தவர்
60ல் யாழ்ப்பாணத்தில் பொலீஸ் அதிகாரியாக கடமையாற்றினார். இவர் விளையாட்டுத் துறையில் அதிகம் அக்கரை காட்டினார். மாக்(Mack) என்பவர் மத்திய கல்லூரியில் 1930-40களில் கால் பந்து விளையாட்டு பயிற்றுவித்தார். ஆளைள.Pழரடநைச யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியையாக 1940வரை கடமையாற்றினார். 1966ல் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அரசாங்க ஏஜன்டாக வேர்ணன் அபயசேகர என்ற பறங்கியினத்தவர் கடைமையாற்றினார். இவருக்கு நாடகத்துறையில் நல்ல ஈடுபாடிருந்தது. தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்.
Dr.R.Brohier என்பவரின் மூதாதையர்கள் யாழ்ப்பாணவாசிகள். யாழ்ப்பாணத்தில் உள்ள டச்சுக்காரர்கள் 1706ல் ஒரு கிறிஸ்தவ தேவலாயத்தைக் கட்டினர். Martinus Leusekam என்பவர் இதன் கட்டிடக் கலைஞர் ஆவார். யாழ்பாணம் - கொழும்பு இரயில் பாதை ஸ்தாபிக்கப்பட்டபின் யாழ்ப்பாணத்துப் பறஙகியர்கள் கொழும்புக்கு இடம் பெயர்ந்தனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பறங்கியர் குடம்பஙகளில் குறிப்பிடப் பட வேண்டிய குடும்பங்கள் De Kretsers, Werkmeisters, Leembruggem போன்றோரின் குடும்பங்களாகும். யாழ்பாணத்தில் இப்போது பறங்கியர்களைக் காண்பது அரிது.

கொழும்புப் பறங்கியர்


ஆரம்பக் காலத்தில் கொழும்பில் பறங்கியர்கள் பெட்டா
Pettah) என்ற பகுதியில் வாழ்ந்தார்கள். காலப்போக்கில் இவர்கள் காலி வீதியில் உள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி பகுதிகளிலும், கறுவாக்காடு பகுதிகளிலும் பரவலாக வாழ்ந்தனர். கொழும்பில் பிரபல்யமான பறங்கியர்களில் குறிப்பாக Peter Keuneman (MP),Antonisz (Surgeon), Arndt (Police Service). Bartholomeuz, Janz, Prins, Scharengivel> Hepponstall  இப்பெயரைக்கொண்டவர் தபால் இலாக்காவில் கடமை புரிந்ததோடு} பறங்கியர் பலர் தபால் இலாகாவில் பணிபுரிந்துள்ளனர்; Van Langenberg, Van Dort, Kelaart, Spittel  குடும்பங்களைச் சொல்லலாம்.
 

 பிரபலமான பறங்கியர்கள்.

1860ல் மாத்தறையைச் சேர்ந்த இளம் வழக்கரிஞரான சார்ல்ஸ் அம்புரொஸ் கொழும்பில் உள்ள
Hulftsdorp என்ற நீதிமன்றங்கள் உள்ள பகுதியில் சட்டத்துறையில் பிரசித்தமாக திகழ்ந்தார். அவரைச் சட்டத்துறையின் உதயதாரகை என அழைத்தனர். இவர் வேறு சில பறங்கியர்களுடன் கூட்டாக இளம் இலங்கை என்ற சஞ்சிகையை வெளியிட்டார். 1859ல் லோரன்ஸ் என்பவர் Ceylon Examiner என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விமர்சித்து இப்பத்திரிகை எழுதியது. பல பறங்கியர்கள் கொழும்பு மாநகரசபைக்கு கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1937ல் Dr.V.R.Schokman என்பவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் வைத்தியத் துறையில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் காட்டினார்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவில் வாழும் பல் இனத்தவர்களிடையே மதிப்பும் மரியாதையும் பெற்று உயர் பதவிகளை பறங்கிச் சமூகத்தவர் வகித்தனர், சிங்களம் மட்டும் சட்டத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட இனங்களில் ஒன்று பறங்கியர். இன்னும் சில வருடங்களில் இவ்வினம் இருந்த இடம் தெரியாமல் ஸ்ரீலங்காவில் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.