இன்று நடந்த கனடா தமிழ் ஊடகவியலாளர்கள் சந்திப்பு:

அகில்

னடா பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை (05-07-2017) ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் கனடாவில் இருந்து வெளிவரும் முக்கிய பத்திரிகைகள், இணையத்தளங்களின் ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் எழுதி வெளியிடவுள்ள 'கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும் - ஓர் வரலாற்றுப் பதிகை' என்ற நூல் வெளியீட்டைப்பற்றிய முன்னறிவிப்பாக இச்சந்திப்பு அமைந்திருந்தது.

இந்நூல் 'கனடாவில் வாழும் ஈழத்தமிழரது வரலாற்றைப் பதிவு செய்துள்ள ஓர் அரிய வரலாற்று ஆவணம் என்றும், ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம் என்றும் பேசப்பட்டது.

இப்புத்கத்தின் வெளியீட்டு நிகழ்வு: வருகின்ற
16-07-2017 அன்று மாலை 5:00 மணிக்கு பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில...

 

 


 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்