அப்துல் கலாம் ஆங்கில உரைகள் நூல் வெளியிட்டு விழா

 

15-10-2017
 

15.10.2017 அன்று பொள்ளாச்சி நகர்மன்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 54வது நிகழ்வுகள் தொடங்கியது. இலக்கிய வட்டத்தின் செயலர் கவிஞர் பூபாலன் வரவேற்றார், கவிஞர் கூடல் தாரிக், முனைவர் மஞ்சுளாதேவி ஆகியோர் கவிதைகள் குறித்து பேசினார்கள். பின்னர் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஆங்கில உரைகளை முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் மற்றும் கவிஞர் அன்புசிவா தொகுத்த (Speeches of Abdul kalam) என்னும் நூலை பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டு கலாமின் நினைவுகளை எடுத்துக் கூறினார். அரிமா டி.லட்சுமிகாந்தன் நூலைப் பெற்று கலாமின் நாட்டுப் பற்றுகளை எடுத்துக்கூறினார். முனைவர் அன்புசிவா நூல் கூறித்தும், சென்ற ஆண்டு அப்துல் கலாமின் தமிழ் உரைகளைத் தொகுத்து வெளியிட்ட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்வுக்கு பதிப்பாளர் கரங்கள் சுரேஷ்குமார், முனைவர் நஞ்சையன், கவிஞர் இளவேனில், கவிஞர் இளஞ்சேரல், கவிஞர் மீனாசுந்தர், எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் 60க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கவிஞர் அம்சப்பிரியா அவர்கள் நன்றி கூறினார்.
 

படம்:

பேரா.முனைவர் பழனிச்சாமி, கவிஞர்.அன்புசிவா, அரிமா.டி.லட்சுமிகாந்தன், முனைவர் நஞ்சையன் ஆகியோர்.
 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்