பாம்பு

கதை:  எம். கோவிந்தன்

தொகுப்பு:  எம்.முகுந்தன்

மொழிபெயர்ப்பு : .இராஜாராம்

 

வார்னிஷின் ஈரம் உலர்ந்திராத ஜன்னல் கம்பிகளினூடே ஊடுருவும் திருவாதிரை நிலவொளி, பனியில் தோய்ந்த இன்னொரு மஞ்சள் நிறக் குவியலாயிற்று. கூடவே ஜன்னலின் வலைத்துவாரங்களினூடே வட்ட நிழல்களும் சேர்ந்து வந்து விழுந்தபோது, காவிநிறம் பளீரிட்ட நிலத்தில், கை வண்ணத்திலும் காவிய அலங்காரத்திலும் சூர்யகாந்திப் பூக்களின் வழிவந்த ஒரு அழகு தரிசனம்.

"வின்ஸென்ட்" - கையெழுத்து மட்டுமில்லை.

யாருடைய காலடியோசை கேட்கிறது? சரிவாக வைத்த ஒரு மூடித் தேங்காய் போல முகத்தில் கட்டை மயிரடர்ந்த ஒரு குள்ள மனிதன்., தன்னுடைய காதை அறுத்துக் காதலிக்கு சமர்ப்பித்த பைத்தியக்காரன் வான் கோ(க்), இல்லாத காதின் பாதியையும் இறக்கியணிந்த ஃபெல்ட் தொப்பியில் மறைத்து வைத்து, ஏதோ சொல்லிவிட்டுப் போகிறான்.

வாழ்த்துக்கள் என்றா? வருந்துகிறேன் என்றா? நிலவில் விரியும் சூர்யகாந்திப் பூக்கள்! நீ கவனித்தாயோ? அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

மனத்தின் மாயா மோகங்கள்.

வேதனையில் குழைத்த ஆன்ம சர்ச்சையே வான் கோவின் கலை. நான் எனக்குள்ளேயே முனகும்போது எனது பாட்டைப் பாடுகிறேன். என்னுடைய வண்ணக் கலவைகள் இழைபிரிந்து நாட்டியமாடுகையில் எது சித்திரங்கள் உருவம் கொள்கின்றன. கலை, ஆன்மவெளிப்பாடு என்கிற தத்துவம் பாதித் தவறு. எல்லாக் கலைகளும் ஆன்ம சர்ச்சைகள் என்பதே முழுக்க சரி.

அவன் ஆன்ம வாதத்தில் பேரார்வமுற்றவன். கலைஞனாக வேண்டு மென்ற ஆவலினாலல்ல. அது அவனுடைய இயல்பு. சுரப்பதைவிடப் பாலை அதிகமாக உள்ளே உறிஞ்சும் ஒரு பசுவின் மடியப்போல மண இரவிலும் விசித்திரமான இந்த சுபாவத்திலிருந்து அவனால் தப்ப முடிய வில்லை. புதுப்பெண் கட்டிலில் படுத்திருக்கிறாள். மணவாளனோ நான்கு குதிரைகளைப் பூட்டி மனோராஜ்யத்தில் சஞ்சரிக்கிறான்.அந்த சஞ்சாரத்தினிடையில் கண்ணில் படும் காட்சிகளோடு அவன் சல்லாபிக்கிறான். மனித மனத்திற்கு மூன்று போக்குகள்: நம்பிக்கை, குழப்பம். ஊசலாடும் தன்மை. ஃபெய்த், ஃபான்டஸி, ஃப்ராக்மென்டட்னஸ்.

ஒவ்வொருவருடைய பெர்ஸனாலிட்டியும் இந்த குணங்களின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்திறுக்கும். குழப்பமும் ஊசலாடும் தனமையும் அவனிடம் நிறைய உண்டு. நம்பிக்கையின் சிறிய பங்குதான் உண்டு. அதனால் அவன் சந்தேகப் பிராணியாகவும் சிதறிச் சிந்திக்கும் தன்மை பெற்றவனாகவும் ஆனான்.

மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்களின் சித்தாந்தத்தை அவன் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆகாயக் கோட்டைகளை உருவாக்குவதற்கு பதில் இந்தப் புண்ணியவான்கள் பாதாளத்தில் கிணறு வெட்டுகிறார்கள். உண்மையின் உன்னதங்களில் தேவதை என்பது போல, மனத்தின் ஆழங்களில் பிசாசுகள் கூடமைத்துப் பார்க்கின்றன போலும். தாய் நாட்டில் வெந்துலர்ந்த நாகரிகத்தின் சுமையோடு வியன்னா நகரின் தெரு வீதிகளிலும், ஆஸ்பத்திரி வராந்தக்களிலும் அலைந்து திரிந்த ஸிக்மண்ட் ஃப்ராய்டுக்கு அவ்வாறன்றி வேறுவிதமாக யோசிக்க முடிந்தது. முதல் பாவத்தின் புள்ளிக் குத்துக்கள், யஹோவாவைப் புறக்கணித்த அந்த யூதனுடைய ஆத்மாவின் அடுக்குகளாகவும், ஒவ்வொரு அடுக்கிற்கும் ஒவ்வொரு மூடியுமாகப் பரிணமித்தன

யுங்?

 

மற்றொரு கள்ள நாணயம்!

மனத் தத்துவத்தில் கொஞ்சம் கீழைநாட்டுச் சிந்தனைகளையும் கலக்கி

ஊற்றினார். வெண்கல ஓட்டால் செய்த இந்தக் கள்ள நாணயங்களைப்

பாக்கெட்டில் இட்டுக் குலுக்கி, கலைஞர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

மூல உருவங்களென்று முழங்கி விமரிசகர்கள் விமரிசனம் சமைக்கிறார்கள். முதல் பாவத்திலிருந்து முதல் உருவத்திற்கு அதிக தூரமில்லையென்று அறிந்துகொள்ளுங்கள்.தரித்திரம் பிடித்தவர்கள்! மனிதஇதயத்தின் ஆழங்களில் முட்டையிட்டுப் பெருகும் முதலைக் குட்டிகளின் கொட்டாவியைப்போல கலை!

கரையை எட்டாமல் திரும்பிப் போகும் அலைகளைக் குறித்து உனக்கு ஏதேனும் தெரியுமா? தாங்கள் பளபளக்கையிலும் கண்களில் இருள் சூழும் தாரகைகளின் துக்க சங்கீதம் கேட்டதுண்டா? அவ்வளவெல்லாம் ஏன், நீங்கள் விஸிலடிக்கையில் உதட்டிலிருந்து உதிரும் வெப்பத் தினால் சுற்றிலுமுள்ள புற்கொடிகள் வாடுவதைக் கவனித்ததுண்டா?

 

என்னவாக இருக்கும் காரணம், கல்யாணச் சடங்குகள் கழிந்து மண மகளின் அறையில் பிரவேசித்த உடனேயே முதல்முதலாகச் சூர்ய காந்திப் பூக்களின் பகற்கனவு மயக்கத்தில் ஆழ்வதற்கு! குழப்பம்? சிதறல் மனப்பான்மை? அவன் சூர்யகாந்திப் பூவும், அவள் சூர்யனுமோ? அவளுடைய ஒவ்வொரு அசைவையும் அனுசரித்து நகர வேண்டிய ஒரு காய் மட்டுமே தான் என்பதோ குறிப்பு?

நிழலும் நிறமும் இணைத்திட்ட கோலங்களில் சில அசைவுகள் , சற்று தூர பந்தலிட்டு நிற்கும் புளி மாவின் இலைகள் காற்றிலாடுகையில் நிழல்கள் சூர்யகாந்திப் பூக்களின் கன்னங்களை வருடுகின்றன. அக் காட்சியைக் கண்டபோது அவனது நினைவு, இளம்வெயிலில் குளித்த ஒரு மணிநாகத்தைப் போலச் சற்று நேரம் தலையுயர்த்தி நின்று, ஒன்றிரண்டு முறை குலுங்கியாடி, கரையும் மின்னொளி போல மற்றோரிடத்திற்கு ஊர்ந்து போயிற்று. மாவிலைக்கு இஸ்திரிப் பெட்டியின் மூக்கினுடைய சாயலுண்டு. அயர்ன் பாக்ஸின் மூக்கு! இது ஒரு பிரமாதமான உதாரணமாயிற்றே!

முகத்தில பாலுண்ணி கொண்ட அக்கா, வியர்வைத் துளிகளைச் சுண்டு விரலால் துடைத்து வழித்து, சிவப்பும் கருப்பும் சிறுசிறு புள்ளிகளிட்ட ப்ளவுசுக்கு இஸ்திரி போடுகிறாள்,. இஸ்திரியோ, இஸ்தினியோ, என்ன மண்ணானாலும் சரி, அவன் சிரித்தான்.

அக்கா, அக்கா, காக்கக்கா.

மரத்தின் கீழே தவளைக்கா.

அக்கா ஒரு நாள் அவனையும் தூக்கிக்கொண்டு சிநேகிதிகளுடன் சோறு சமைத்து விளையாடுகையில் அவள் உரக்கக் கூறிய வார்த்தைகள், செங்கொட்டை மரத்தின் கிளையில் ஒரு காகமும், அடியில் ஒரு மரத் தவளையும் இருந்தன. பிற்பாடு அவனை இடுப்பில் வைத்து நடக்கும் போதெல்லாம் அவன் அவ்விரு அடிகளையும் பாடிக்கொண்டிருந்தான். அவனது முதற்கவிதை. அது எதுவென ஆராய, நோட்டுப் புத்தகமும் துண்டுப் பென்ஸிலுமாகப் பேட்டி காண்பவர் வரும் நல்ல நாளெதுவோ?

அக்காவுக்கு இறகுகளும் தூவல்களும் முளைத்து முற்றி்த் தழைத்த போது வேலிக்கருகிலிருந்து ஒரு பூவன் கோழி கொஞ்சிக் கூவியது. ஒரு கர்சீப் ஆசாமி, வைத்யன் அறிவித்தான்: தலைமயிரை முடிந்து இறுக்கிப் பிழிந்து இழுத்தால் பாலுண்ணி உதிரும். அம்மா சொன்னாள்: "என்னருமை வைத்யரே, அது அவள் முகத்தழகு. பிய்க்கவும் வேண்டாம்; படரவும் வேண்டாம். அது இதயத்தின் காரியம். அஷ்டாங்க ஹிருதயத்தினுடையதல்ல". அயலார் லட்சணம் சொன்னார்கள்: பாலுண்ணி குன்றிமணிக்கொட்டையளவாகையில் அவளுக்கொரு மணவாளன் வருவானே, ஒல்லியும் பலவானுமான ஒரு அரும்பு மீசைக்கார நாயர்! கொஞ்சம் தூர நின்று பார்த்தால் அக்காவின் மூக்குப் பாலுண்ணி அவளணிந்த நீலக்கல் மூக்குத்தியா மெனத் தோன்றும். முக்கியமாக, கொன்னைகள் பூக்கும் நேரங்களில்; காயலோரங்களில் கரிமீன் கூட்டங்கள் புஞ்சை நிலங்களில் புரண்டு தாவும் வேளைகளில். அவன் கல்லூரி பூட்டி ஊருக்கு வந்த சமயத்தில் தான் அவள் முதன்முதலாக அத்தானின் கண்ணில் பட்டாள். மேட மாதத்தில் வேஷ்டி மடியைச் சுற்றிக் கட்டி, கையிலொரு பனையோலை விசிறியுடன், விஸிலடித்துக்கொண்டு, நாட்டுப்புறத்தின் சந்துகளிலும் குளக்கரைகளிலும் சுற்றி நடக்கும் காலம். கல்யாணப்பேச்சு, நிச்சயதார்த்தம், கல்யாணம் எல்லாம் சிக்கெனத் தீர்ந்தன. தீ பறக்கும் மேட மாதம் கழிந்து இடவப் பாதியின் இடியும், மின்னலும், மழையும் கூடிய போது அண்டை வேலிக்குப் பக்கத்தில் வந்து நிற்கும் மீசைக்கார இளைஞன் அவனது அத்தானாகிவிட்டான். அப்படி நேர்ந்தபோது எதற்காகவோ இவனுக்குக் கோபம் வந்தது. அக்காவின் பொன் வண்டை அவன், "அந்த ஆசாமி" என்று மட்டுமே குறிப்பிட்டான்.

"அந்த ஆசாமி இல்லேடா" அம்மா சொன்னாள் ,"ஒன் அத்தான்"

"ஊகும்! அத்தான் இல்லை. அக்காவின் சம்பந்தக்காரன்"

அக்காவின் மூக்குப் பாலுண்ணி மூக்குத்தியல்லவென்று அவன் புரிந்து கொண்டிருப்பான். ஆனாலும் அதை உரித்தெறிய அவனும் விரும்பவில்லை, அவளது அதிருஷ்டம் அவனுடையதுவும். அரும்பு மீசைக்காரனுக்கு அரிசிப் பாலுண்ணிக்காரி.ஃபெய்த், ஃபான்டஸி, ஃப்ராக் மென்ட்டட்னஸ்!

அக்காவின் கல்யாணம் தடபுடல்பட்டது. அன்று காலையில் வழக்கத்திற்கு மாறாக அவனையும் அழைத்துக்கொண்டு அவள் கோயில் குளத்தில் குளிக்கப் போனாள். படித்துறையில் அவனும், அக்காவும், மஞ்சள் பாவுபோலப் பூ மலர்ந்த மரக்கிளையில் மூக்கை உராயும் இரண்டு நாரைகளும் மட்டுமே

அக்கா முதலில் அவனைக் குளிப்பாட்டினாள். அவன் ஓரமாக நின்றான். அவனது ஈரக்கோவணத்திலிருந்து நீர்த் துளிகள் சொடியொழுகிப் புல்நுனியில் விழுந்தன.

"நான் போயிட்டா ஒனக்குக் கஷ்டமாயிருக்குமில்லே?" மார் முழுதும் சோப்பு நுரை பொங்கும் அவளது கேள்விக்கு அவன் பதில் கூறவில்லை. அவனது கண்கள் சட்டென்று புற்கொடியிலிருந்தவொரு சிவப்பு எறும்பின் பக்கம் திரும்பின.

"நீ ஒரு கடிதமெழுதினா நான் ஒடனே வருவேன். வரும்போது உனக்கு ஏதாவது கொண்டும் வருவேன். "

அவன் சிரித்தான்.

ஆனால் அவன் அக்காவுக்குக் கடிதமே அனுப்பவில்லை. எழுதிய கடிதங்களைக் கிழித்தெறிந்தான். கிழித்தெறிந்த கடிதங்களின் வரிகளை நினைத்துச் சிரித்தான். அவள் வாக்குறுதி கொடுத்த "ஏதாவது" கொண்டு வந்ததுமில்லை.

அதிருஷ்ட அடையாளமான பாலுண்ணி அலங்கரிக்கும் மூக்கு மட்டுமல்ல; அழகு திகைந்த வெண்மையான நீண்ட மெலிந்த கைவிரல்களுமுண்டு அவனுடைய அக்காவுக்கு. கல்யாணத்தின் மறுநாள் அவளுடைய விரலில் கிடந்த மோதிரத்தின்மேல் அவனது திருஷ்டி விழுந்தது. மோதிரத்தின்மேல் ஒரு எழுத்து பி.

 

"என்ன இது பி?"

அவனுக்குத் தெரிந்தும் அதை விசாரித்தான்.

"பஃபூன்"

அக்கா சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"இல்லை புல் டாக்" அவன் திருத்தினான்.

"போப்ளோப்ளோ" அவள் குரைத்தாள்.

அவன் புள்ளி நாயைப்போலப் பல்லிளித்துக்காட்டினான். சட்டென்று அவனது அக்கா அவனைக் கட்டியணைத்தாள். அவள் அழுதாளோ? அப்படியானால் எதற்காக?

இப்போது தனது கைவிரலிலும் ஒரு மோதிரம். மோதிரம் இட்டவள் கட்டிலில் சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள். மோதிரத்தின்மேல் "எஸ்" என்ற எழுத்து இருக்கிறது. எழுத்து செதுக்கலின் பின்னணி நிறம் நீலமல்ல, மெஜன்டா.

நாளைக்காலையில் அக்கா வந்து எனது விரலில் கிடக்கும் மோதிரத்தில் செதுக்கியிருக்கும் எழுத்தின் பொருளென்னவென்று ஆராய்ந்தால் நானென்ன சொல்வேன்?

சூர்யகாந்தி?

ஸுர சுந்தரி?

ஸுப்ரியா?

ஸுன்னாமுகி?

அதை மட்டும் சொல்லமாட்டேன்- ஸரளா. மென்மையும் கொஞ்சலும் ஒத்திணைந்த அருமைப் பெயர். உச்சரிக்கையில் நா நுனியிலொரு லாவகமும் தண்மையும், பாவகீதத்தின் ஆரம்பம்போல மணி காஞ்சி விருத்தத்தில் கரைந்து சேரும். களகாஞ்சியிலும், உபஸர்ப்பிணியிலும், உபஸர்ப்பிணி!

மெஜன்டா அவனுக்குப் பிரியமான நிறம். மணிகாஞ்சி விருத்தத்தில் அமைந்த கவிதைகளும் அவனுக்கு இஷடமானவை. முனைப்பான வண்ணக் கலவையில் மெழுகியவை அவனது விருப்பு வெறுப்புக்கள். மங்கலில் பற்றுதலில்லை. வாழ்வும் சாவும் போல அருகருகேயிருப்பினும் இணையாமல் அவனது விருப்பு வெறுப்புக்கள் வாழ்கின்றன.

 

பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசை அவனுக்கு மிக விருப்பம். ஆன்மாவின் தேம்பலும், மென்னொலிகளும் கலங்கித் தெளியும் ராக மாலிகை. அவனது பிரியமான நிறத்தில் ஓவியங்கள் மிகக் குறைவு.

வான் கோவிடம் அவனுக்கு மதிப்புண்டு. வர்ணப் பொலிவல்ல வான்கோ சித்திரங்களில்; துடிப்பு நிறைந்த உணர்ச்சித் தூவல்கள். நிறங்களெனும் பெண் பிள்ளைகள் நீண்டு நிமிர்ந்து ஊஞ்சலாடுகையில் மெஜன்டா என்ற சுந்தரி விளையாட்டிலிருந்து விடுபட்டு நின்று சொல்கிறாள்: "நான் நிறங்களின் ராஜகுமாரி. உங்கள் கூட்டத்தில் விளையாட மாட்டேன். " நாட்டியக் கலையில் அவனுக்குக் கிஞ்சித்தும் ஈடுபாடில்லை. அங்க அசைவுகளின் அழகில் ஆன்மாவின் அழகு சோர்ந்துபோகும், அவ்வளவுதான். குலுங்கும் சதையசைவிலும், இழையும் விரலிலும் அவமானகரமான ஏதோ ஒன்றுண்டு.

அவனுக்குப் பிடித்த நூல்: "ஒரு காலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்"

ஆயிரத்து முன்னூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நவீனம். அதன் படைப்பாளி மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ். இவர் சிரஞ்சீவியான உலகப்புகழ்பெற்ற இலக்கிய கர்த்தா. ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க சந்தர்ப்பமில்லை. மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸின் மாஸ்டர் பீஸ் இன்னும் பிரசுரி்க்கப்படவில்லை. முழுவதும் எழுதப்படவுமில்லை. உலகத்தில் மொத்தம் ஒரே ஒரு ப்ரிக்ஸே உள்ளார். உலகத்தில் இன்று வரை ஒளி காணாத பெருமைக்குரிய நவீனத்தை உருவாக்கிய மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ்.

அவர் அவன்தான்!

மூடிப்புதைந்து கிடக்கிறாள். உறங்குவதுபோல் நடிக்கிறாள். பெண் விக்கிரகமே, உனக்கென்ன தெரியும்?

"ஒரு காலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்". அதிசயங்கள் வித்தூன்றுவதும் விளைவதும் முட்டாள்தனத்தின் கதிரறுத்த நிலத்துப் பயிரில்தான். தான் அவளுக்கொரு ஆச்சரியத்தைக் கொடுக்கப் போகிறோம். அது கதிராகையில் அவளது கன்னங்களில் குழிகளும், குழிகளில் நுரைநுரையாக முத்தும் பவளமும் விரியும். அந்த இரத் தினங்களின் தும்பும் தூசியையும் அவன் உதட்டிலணிவான். கீசகன் வேஷம் கட்டும் காவுங்ஙல் சங்கரப் பணிக்கரின் அரிதாரம் பூசிய முகத்தில் காக்காய்ப் பொன் துகள்கள் மன்னுவதை அவன் பார்த்திருக்கிறான். மணிக்கட்டு சுற்றளவில் திரியிட்ட நிலைவிளக்கின் ஓங்கியெரிதலினிடையில் பவழச் சிவப்பான உதடுகளிலும், பச்சை நிறமான கன்னங்களிலும் பொன்னலை போல மின்னிய காக்காய்ப்பொன் துகள்கள். கீசகனின் கெஞ்சலுக்கு அது ஒரு மேம்பாடு நல்கியது. அந்த அரிதாரத்தையும், காகாகாய்ப்பொன் துகள்களையும், வேஷங்களையும் அழிக்காமல் கீசகப்பணிக்கரை ஒரு பெண்பிள்ளை அழைத்தாளென்று கேள்விப் பட்டதையும் அவன் நினைவுகூர்ந்தான். யார் அவளுக்குத் தேவை? கீசகனா, அந்த வேஷம் கட்டிய சங்கரப் பணிக்கரா? கீசகன்தான். இல்லாவிட்டால், நெற்றிச் சுட்டியும் சட்டையும் அவிழ்க்காமல் நேராக வரவேண்டுமென அவள் வேண்டிக்கொண்டிருந்திருக்க மாட்டாள். மனிதனல்ல, கலையே அவளுள் காமம் மூட்டியது. ஆனால், தான் கீசகனல்ல. தனதருகில் படுத்திருக்குமிவள் ஸைரப்ரியுமல்ல. இங்கே வேதனைகளுக்கு வேதனையில்லை. மனச்சோர்வுக்கு மதர்ப்புமில்லை.

அறையில் சூழ்ந்து நிலவும் பரிமளம். சுகந்த ரேகைகளின் இன்னோசை மிகு ரஸக்கிரீடை. பன்னீரும் முல்லைப்பூவும், எரியும் ஊதுபத்தியும், கஸ்தூரி கலந்த கருஞ்சாந்தும், பௌடரும் பாலராமபுரம் பட்டுச் சேலையும், நேரியலும், காயாத வார்னீஷும், நிழல் விரித்து அசையும் மாந்தளிர்களும், சூர்யகாந்திப் பூக்களும்- பரிமளங்களின் கிணுகிணுப்பு துளும்பும் ஸ்வர ராக லஹரி. அவைகளுக்கிடையிலிருந்து ஒரே ஒரு மணம், பிஸ்மில்லா கானின் ஷெனாய் நாதம்போல வேறுபட்டு கட்டவிழ்ந்து அவனது மூக்கினுள், நரம்பு மண்டலத்துள், இணைப்புக்களுள், எழில்மிகு கற்பனைகளுள் முதிர்ந்து சேரும் அவளுடைய மணம், கல்யாண சுகந்தம், ஷெனாய் நாதம் காதில் உலவுகையில் அவன் முன் முகத்திரையணிந்த ஓர் போதைதரும் பேதை தோன்றுகிறாள். நெற்றியின் நீளவாகில் சந்தனப் புள்ளிகள். மெல்லிய முகத் திரையினூடேயும் புருவங்களுக்கு மேலே வளைந்து மின்னும் புள்ளிகள். அவளுக்குச் சற்று உப்பிய கன்னங்கள். அவள் நடுநடுவே முகத்திரையை விலக்கி இடது கண்ணால் சாய்ந்தும் சரிந்தும் பார்க்கிறாள். ஹிந்தியிலோ, குஜராத்தியிலோ இரண்டோ நான்கோ வார்த்தைகள் மொழிகிறாள். அருகிலிருக்கும் தோழியரின் காதுகளில். நாணத்தால் மழலைபேசும் ஒரு பெண். மனதுள் மயக்கமூட்டும் மணம்.

"மணம், மனிதவாழ்வு இவற்றுக்கிடையில் தொடர்ந்து நிலவும் உறவுண்டு. திருமணமென்றால் கல்யாணம். மணவாளனுக்கு மண வாட்டி. மணம், மலரினது போலவே இளமையினுடையவும் சத்தாகிறது. ஜீவனுடையவும் மூலகாரணம். அவனும் அவளும், அவளுக்கும் அவனுக்கும் விதித்த பரிமளத்தைத் தேடும் பிரயாணத்தைப் பிரேமை என அழைக்கிறோம். அவர்களுடைய பரிமளங்கள் கூடியும் குறைந்தும் தெளிவும் தேடலும் மிக்க தாள லயங்களைச் சம்பாதிக்கையில் வாழ்வின் புது ரேகைகள் தளிர்க்கின்றன. கல்யாணப் பொருத்தத்தில் ஜாதகத்தை விட முக்யம் மணமே. "நட்சத்திரங்களுக்கு நிறமேயுண்டு. மணமில்லை" தனது விவாக யோசனைக்காலத்தில் இவ்விதமே புறக்கணிக்கப்பட்டது. அந் நேரத்தில் மூக்கில் வேறொரு மணம் கூடுகட்டியது. அவளுடைய, அதாவது மற்றவளுடைய மணம்!

மற்றவள், அவள்.

எதிரொலியும் ஸ்வரமும்.

இனிமேலும் பிரசுரிக்கத் தயங்கும் உலகப் புகழ்பெற்ற நாவலின் வரிகள். இவ்விதம் எத்தனையெத்தனை உயர்ந்த நடைகள், எங்கும் பொருந்தும் முடிவுகள் வெளிச்சம் காணக் காத்துக்கிடக்கின்றன.!

மிஸ்டர் ப்ரிக்ஸ்.

ஜீனியஸ் ஆஃப்த ஏஜ்.

யுகத்தின் மேதையோ, மேதையின் யுகமோ?

யுகமா மேதையை உருவாக்குகிறது?

மேதையின் அவதாரத்தை யுகப் பேரொளியென அழைக்கிறோமல்லவா?

"ஹலோ, குட் மார்னிங்"

"மார்னிங்"

"மிஸ்டர் ப்ரிக்ஸைப் பார்க்க முடியுமா?"

"எதற்காக?"

"ஒருவிழா விஷயமாக."

"முடியாது"

"விழா மலருக்கு ஒரு கட்டுரை, கதை, கவிதை ஏதேனுமொன்று...!"

"மிஸ்டர் ப்ரிக்ஸ் விழாமலருக்கு எழுதுவதில்லை. நாட்டிய விழாவைத் தொடங்கி வைப்பதுமில்லை."

"ஒரு செய்தியாவது, நாலு வரி."

"இயலாது."

"ஆயிரம் ரூபாய் ரொக்கம்."

"நீங்களென்ன சண்டை போடுகிறீர்கள்? நாகரிகமற்றவனைப் போல!

ப்ரிக்ஸின் விலையென்னவென்று உங்களுக்குத் தெரியுமோ?"

"மிஸ், கொஞ்சம் முயன்றால்."

"யூ கெட் அவுட்."

"பரவாயில்லை. நல்ல காட்டமானவள்தான். மானத்திற்குப் பயப் படாதவர்களைச் சமாளிக்க இவளைப் போன்றவர்கள்தான் வேண்டும். சூட்டிகையானவள் தான் நம்ம ஸெக்ரட்டரி" அவளது உதட்டு வண்ணம் மெஜன்டா. ப்ரீஃப்கேஸை எடுத்துக் கொண்டு லிஃப்டினருகில் வந்து சேர்ந்த ப்ரிக்ஸ் புன்சிரிப்புப் பூத்தார். ஸெக்ரட்டரி ஸ்பானிஷ் பிரசுரகர்த்தருக்கான கடிதத்தை டைப் அடிக்கிறாள்.

ஸிங்ஞார் ப்ரிக்ஸ் இஸ் வெரி ப்ளீஸ்டு.....ட்ட...ட்டி... டைப் அடிக்கும் சுந்தரிகளின் விரல்கள் எல..வி.. என்ற நான்கு எழுத்துக்களில் இடறுகையில் அவர்களுடைய கன்னத்தில் சுழன்றும் முகத்தில் மறுபடியும் மலருவதுமான காதலுணர்ச்சிகளின் நிறப்பொலிவும் அழகொலியும் எப்படியென நினைத்து நிற்கையில், அந் நினைப்பின்

அலையில் நீர்க்குமிழிபோலப் புன்சிரிப்பு உதட்டில் புரள, உரக்க ஒரு வெடித்த சிரிப்பு.

, காட்டுமிராண்டிகள், அரக்கர்கள்!

ப்ரீஃப் கேஸை எடுத்துக்கொண்டு லிஃப்டை நோக்கி நகரும் மிஸ்டர் எஸ். பிரிக்ஸ், யுகத்தின் ஜீனியஸ். கல்யாண இரவில் மணவாட்டியின் கட்டிலில் அவளது மணத்தை மூக்கில் போற்றிக் கிடக்கும் அவனாகி விட்டார். அப்போது இரண்டு மணி, முப்பத்தேழு நிமிடம். இந்தியன் ஸ்டாண்டர்டு டைம்.

கல்யாணச் சடங்கில் இரண்டாம் பகுதியின் கூட்டமும் கூக்குரலும் அடங்கவில்லை. பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் முக்கியப் பங்கெடுத்தவர்களும் கண்மூடவில்லை. பெட்டிப் பாட்டை மூடியது நல்லதாயிற்று. பழைய "பூங்கா விநோதமே" முதல் "பூ நிலாவின் கீற்றுத் தடத்தில்" என்ற புதிய சினிமாப் பாட்டு வரை ஆலாபித்த பெட்டி தொண்டை உடைந்து உறக்கமுற்றது. மரப்பெட்டிகள் உறங்கிய பின்னும் மனிதன் உறக்கமின்றியிருக்கிறான்.

அவன் மெல்லக் கட்டிலிலிருந்து எழுந்து ஜன்னலருகில் போய் நின்றான்.

முதியோர்கள் வெற்றிலைச் செல்லத்தின் முன்னமர்ந்து சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்கள். வழுக்கையர்கள், குடைவயிறர்கள், வைரக்கல் கடுக்கன் அணிந்தவர்கள், குடுமி வைத்தவர்கள், விபூதியணிந்தவர்கள், வாடிய துளஸியைக் காதில் செருகி வைத்திருப்பவர்கள்- அவர்களது அந்த இருப்பும், விட்டேத்தித் தன்மையும், சம்பாஷணைச் சாதுர்யமும் அவனை ஆச்சர்யப்படுத்தின. நல்ல பலமுள்ள அசாதாரணமான தலைமுறை. இவர்களெல்லாம் தன்னைப் போல, மணவாட்டியின் மணியறையில், சாய்வு நாற்காலியில், படுக்கையில், அல்லது பொம்மை போட்ட பல்வகைப்புற்பாயில் முதலிரவுகளைக் கழித்தவர்கள். இன்று அவர்களுடைய மக்களும் மருமக்களும் மணவாளர்களும் மனவாட்டிகளுமா-யிருக்கின்றனர். ஆனாலும் காலம் கழுவிக் குழைத்த இம் மண் வளமும் வீர்யமும் கொண்டதே.

கல்யாணத்தில் முக்கியமானவர்களில் ஒருவரான சங்கு நாயர் தனது மண இரவின் அனுபவங்களைப் பற்றிப் புளுகிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்கக் காதைத் தீட்டிக்கொண்டு வேலப்ப மேனனும் கூட்டத்தாரும். வேலப்ப மேனனைப் பார்த்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. வெளுத்த, பருமனான ஒரு ஆசாமி. உருவத்தில் கிஞ்சித்தும் குறையில்லை. நெய் அல்வாவின் பளபளப்பும் நிறமும் கொண்ட அந்த பீமசேனனுக்கு தெய்வம் மனமுவந்து நல்கிய ஒலிப்பேறு ஒரு ஒயிலிடை யாளுடையது. கிணுகிணுத்த நாதமும் பெருத்த தேகமும் ஒரு விதத்திலும் பொருந்தவில்லை. அவர் எவ்வளவு முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் ஜனங்கள் வெடித்துச் சிரிப்பார்கள். தெய்வத்தின் ஞாபகக் குறைவாலுண்டாகும் அமளிகள்! கடவுள் சிலசமயம், அவளுக்குள்ளதை அவனுக்கும் அவனுக்கு வேண்டியதை அவளுக்கும் மாற்றிக் கொடுத்துவிடுகிறார். அப்படி ஆண் கோலத்தில் பெண்மையும், பெண்ணுருவத்தில் ஆண்மையும் மாட்டிக்கொள்கின்றன.

முதியோர்களின் நடுநிசிப் பிரசங்க நடவடிக்கை இவனுக்கு ரசமான அனுபவமாக இருந்தது. பரிகாசத்துக்குரிய பழமைவாதிகள். எதிலும் அவர்கள் "நேரே வா! நேரே போ!" மட்டக்காரர்கள். கல்யாணமானாலும், பொங்கலானாலும், கருமாதியானாலும் பொழுதுபோக்கு ஒருபோதும் கைவிட்டதில்லை. நகைச்சுவையுணர்வு அவர்கள் வாழ்க்கையில் நறும் பசுமை மிக்கதாகும். பருவம் வந்து பழுத்த போதிலும் பச்சையும் பசையும் அவர்களில் மிச்சம்.

தானும் தன் தலைமுறையுமோ?

இக் கட்டுமஸ்தானவர்களோடு ஒப்பிடுகையில் வெறும் தொட்டாற் சிணுங்கிகள்!

ஏன், தொடும் முன்பே வாடும் வர்க்கம்.

ஆரவாரமும், கூக்குரலும், மேளமும், குரவையும், வெடிப்புச் சிரிப்பும் அறிமுகமான இவர்களது வாழ்க்கையில் காமம் ஒரு முனகல் பாட்டல்ல. பசுமையான பல்லவியும் அனுபல்லவியுமாகும். கலவி அவர்களுக்கு உயிருக்கு ஊட்டம் சேர்க்கும் ஒரு உன்மத்த லாகிரி.

"ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்"

யார் தனது நினைவோட்டத்திற்கு விலங்கிடுவது? அவன் திரும்பிப்பார்த்தான்.

அவளல்ல. வேறு யாருமல்ல.

மிஸ்டர் எஸ் ப்ரிக்ஸ்!

"மரபார்ந்த காமம் மென்மையும் நவீனமானதுமான சுலப வெளிப்

பாட்டைப் பெற்றிருக்கவில்லை."

அவனால் மனத்துள் கட்டளையிட மட்டுமே இயன்றது. சொல்வது தனக்குள்ளிருக்கும் மிஸ்டர் ப்ரிக்ஸாக இருந்தபோதிலும். அவன், அவனுடைய அவனாகிய ப்ரிக்ஸினிடம் கேட்டான்: "கொனாரக்கிலும் கஜுராஹோவிலும் போயிருந்தபோது நாம் பார்க்க வில்லையா? கல்லில் செதுக்கி வைத்த காமம்?"

(குருவாயூர்க் கோயில் சித்திரங்கள் என்று சொல்லவே எண்ணம். ஆனால் அச் சுவர்ச் சித்திரங்களை அவ்விருவரும் கண்டதில்லை.)

"சிலைக்குக்கூடச் சதையும் உணர்ச்சியும் இரத்தமும் உருவாக்கிய சிற்பங்கள்?"

"ஆமாம் " ப்ரிக்ஸ் சொன்னார். "ஒளிவு மறைவற்ற காமத்தை அவர்கள் கல்லில் செதுக்கி வைத்தனர். பிறகு வாழ்க்கையில் மிகவும் கரடுமுரடானதும் குரூரமானதுமான ஆபாசங்களில் ஈடுபட்டனர். அப் பிரதிமைச் சிற்பங்கள் உயிர்த்தெழுந்து வந்தால்? முதியோர்களை அவைகள் குட்டிச்சாத்தானின் சுரங்கக்குழியில் போட்டுப் பூட்டி வைக்கும். இவர்களைப் போலத்தான், ராமாயணத்தில் ராமநாமத்தைவிட ஒவ்வொரு செய்யுளிலும் ஃப்ரராய்டினுடையவும் யுங்கினுடையவும் பேரைச்சொல்லி பஜனை செய்யும் நவீன ஸர்ரியலிஸ்டிக் வால்மீகிகளும். ஒரு கூட்டத்தார் வாழ்க்கையைக் கல்லாக்கித் தீர்க்கையில் மற்றக் கூட்டத்தார் உடைந்த ராகத்தில் புல்லாங்குழல் ஊதியூதி நுரையீரலைக் கெடுத்துக்கொள்கின்றனர். உதிரத்தில் சர்க்கரை வீணாவதில் துக்கம் கொள்ளும் இவர்கள் இன்ஸுலின் குத்திக்கொண்டு தப்புகின்றனர். அவர்களது இன்ஸுலின் என்பது இரண்டு துரைமார்களின் பெயராகும். அதை உச்சரித்துவிட்டால் குத்திக்கொண்டது போல.!

மிஸ்டர் ப்ரிக்ஸ் அப்படித்தான். நடுவழி யென்பது அவர்க்கில்லை. இடைநிலை சீக்கிரமே தகருமென்ற நம்பிக்கைக்காரர். இக் குழப்ப யோசனைகளை அந்த விதமே தாலாட்ட அவன் தயாரில்லை. கஜுராஹோவில் கலைஞர்கள் காமத்தைக் கல்லில் செதுக்கி வைத்தனர். ப்ரிக்ஸ்? எழுத்துப் புற்றில் இதைப் புகுத்தி வைக்கிறார். நவீன ரோமாண்டிக்குகளோ, பதனப்படுத்திய சுருதியெனும் இலைகளில் பொட்டலம் கட்டிய கற்பூரம் போல மணத்து உலவுகின்றனர். "காமம் கல்லுமல்ல, எழுத்துமல்ல; சுருதியில் வாட்டிப் பொதிந்த கற்பூரப் பொட்டலமுமல்ல"

வழக்கத்திற்கு மாறாக , தானும் ப்ரிக்ஸும் இப்படியொரு வாக்கு வாதத்தில் ஈடுபட்டது எப்படி? அவனுக்கு ஆச்சரியமுண்டாயிற்று. என்னவானாலும் இந்தப் பண்டிதர் ஒரு நிம்மதியைக் குலைப்பவர்தான். அவரது நாவலின் தலைப்புப் பரவாயில்லை. அவன் வாய் பொத்திச் சிரித்தான். அடைந்த வாயில் ஓட்டையூடே சிரிப்பின் சேமங்கலத் தாளத்தினிடையில் ப்ரிக்ஸ் மீண்டும் பேசினார். அவர் வெறி பிடுத் தவராயிருக்கிறார்.

"நாம் மிகவும் முன்னேற வேண்டியிருக்கிறது. காமத்திற்கும் மறு பிறவி உண்டாகவேண்டும். நடப்பிலிருந்து கற்பனைக்கு, செய்கையிலிருந்து செய்யும் உணர்வெனும் நினைப்பிற்கு நகரவேண்டியிருக்கிறது. வருகிற தலைமுறை. பழையவர்களுடையவும், புதியவர்களுடையவும் நடத்தைகள் முடிய வேண்டிவரும். புதுமையின் கவர்ச்சி உணர்வு அந்த வழியை நோக்கியல்லவா? இந்த யுகம் வேசிகளுடையதல்ல. நடிகைகளையே ஜனங்கள் விரும்புகிறார்கள். இன்றைய கோவில்கள் சினிமாத் தியேட்டர்களும் நாடகக் கொட்டகைகளுமே. அங்கே தேவதாசிகள் ஆடுகிறார்கள். மனிதர்களை அவர்களது தாசர்களாக்கிவிட்டு, நடிகைகளை மனத்துள் வைத்து அவர்கள் தங்கள்வசமென்ற மாயக் கற்பனையில் ஜனங்கள் நடந்துகொள்கிறார்கள். ஒன்றும் நடக்கப் போவதில்லையாயினும் ஓரான்ம திருப்தி. காமம் இங்கே கனவின் ஒளி வட்டத்தை யணிகிறது. செயல், நடிப்பாகப் பரிணமிக்கிறது. எண்ண பூர்வமானதோர் உணர்ச்சி வெளிப்பாடு என்பது நடிப்பாம்! வேஷம் போடுவதும் கண்கட்டு வித்தை....!

 

"இச்சொற்பொழிவை இன்னும் நீட்ட வேண்டுமா?" அவன் விநயமாக விசாரித்தான்.

"வேண்டும்." மிஸ்டர் ப்ரிக்ஸ் உறுதியாகச் சொன்னார். உண்மையை நேராகச் சென்று தெரிந்துகொள். ஒளிந்து ஓடுவதால் தப்பமுடியாது.

நீங்கள் இன்னும் மனத்தத்துவவாதிகளின் ஆதிக்கத்திலிருக்கிறீர்கள். அவர்கள் புறக்கணிக்கப்பட்டுவிடுவார்கள் வெகு விரைவில். ஓடிப் பஸும், ஆண்டகணியுமெல்லாம் தெருச்சுற்றிக ளாவார்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டும் மகத்தான காலகட்டம் அஸ்தமிக்கும். ஓடிப்பஸ் குருடன் என்ற விஷயம் தெரியுமில்லையா? புராண புருஷர்களைக் கலையின் பூணூலணிவித்துப் பூசாரிகளாக்கும் மனத்தத்துவ வாதிகளின் எதிர்காலம் இக்கட்டிற்குள்ளாகும். அவர்களுக்குப் பதில் சமூகத்தில் கலைஞர்கள் வழிபடத்தக்கவர்களாவர். காமம் கலையாகாது. கலை காமமாகும். அதுதான் அப்போது நேரும். நாளைய மனித இனம் கவிதை வாசிப்பு, ஓவியக் கண்காட்சி, நாடக அரங்கேற்றம், கதா காலட்சேபம், பாட்டுக்கச்சேரி என்றிவற்றில் கிடைக்கும் மயக்கத்தில் காம திருப்தியைப் பெறும் தங்களுடைய கடும் உழைப்பை மகிழ்ச்சி நுகர்வுப்பரப்பிற்கு உயர்த்திக்கொண்டு, இன்னுமொரு காமனெரிப்பு நடக்கப் போகிறது. மனத்தத்துவவாதிகளின் காமனைச் சுட்டெரித்தல்!

புராதனமும் கொச்சையானதுமான நடத்தைகளுக்குப் பதில் அதே பலன் அளிக்கும் நாகரிக வித்தகங்கள் கைவரும், மிக நொய்மையானது

மனிதர்களின் நரம்பு, நாகரிகத்தில் அது இன்னும் நொய்மையாகி விடுகிறது. இந் நிகழ்வை வைத்து மனத்தத்துவவாதிகள் முடிவுகளைப் புனைந்து சேர்க்கிறார்கள். அக் கற்பனைகள் இன்றைய யதார்த்தங்களுடன் சீதக உறவுகூடப் புலர்த்தவில்லை. அதனால் புதுக் கற்பனைகள் அவசியமாயிருக்கின்றன."

வார்த்தைகளின் இந்த அம்புக்கூட்டத்திலிருந்து தப்பித்தால்! அவன் நியாயமாகவே விரும்பினான். "வாழ்க்கை நாடகம் என்ற முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். வாழ்க்கை ஒரு காவியமல்ல. நீங்கள் அப்படி ஆக்குகிறீர்கள்."

ப்ரிக்ஸ் விடவில்லை. "வாழ்க்கை நாடகமல்ல காவியமுமல்ல. நாடகம் ஆனால் காவியமாவதிலும் கெடுதலில்லை. விசேஷமான உறவு என்ற பொருட் செறிவு வேண்டும்; அவ்வளவுதான். பொருள் விளக்கத்தின் விஷயம் அப்படியே இருக்கட்டும் இப்போதைக்கு. ஒரு காலத்தில்- அவ்வளவு நெருங்கிய எதிர்காலத்திலாக முடியாது- மனித வர்க்கம் கலைஞர்களைக் காமதேவதைகளாக்கிப் பன்னீர் தெளிக்கும். அந்தக்காலத்து டயோனிஸஸைப்போல, காளியைப்போல. கலா ரசனையிலிருந்து புதிய வழிபாட்டுமுறைகள் உருவெடுக்கும் . அக் கலையும் கலைஞர்களும் மிக உயர்ந்த மட்டத்தில் உலாவுபவர்களாயிருப்பர். ஆனாலும் ஒரு விஷயத்தை அறுதியிட்டுச் சொல்வேன். யாரும் அருவக் கலையின் பிரயோகத்திற்கு ஆளாக மாட்டார்கள்

"எதனால்"?

"நீங்கள் சற்றாவது சிந்தித்ததுண்டா?"

ப்ரிக்ஸ் ஏதோ கொள்கையை நிலைநாட்ட முயல்வதுபோல உரக்கச் சொன்னார்" ...அருவக்கலையின் பிறப்பிடம் எதுவென்று? கலவியைக் குறித்துள்ள விபரீதப் பார்வை; சுருங்கிச் சிதைந்த நரம்புகளை வளைத்து இணைத்த தாளவெறுமை. கட்டவிழ்ந்த உருவங்களாவன- ஆடியுலைந்த மனங்கள், உலர்ந்து சுருங்கிய நரம்புகள் இவையிணைந்த குழப்பங்களே.

வளர்ச்சியடைந்திராத காலங்களின் அருவக் கலைக்கும் இக் கலைக்கும் எந்த உறவுமில்லை. முதலாவது உற்சாகத்தின் முண்டியடித்தலும் தாள கதிகளுமாம். இதுவோ பலவீனத்தின் வெறுப்புக்கள். பாண்டு நோயின் அதீத வெண்மை அழகு என்பதுபோலக் காமத்தைக் குறிப்பிட்டு இது கற்பனையை ஒத்திருக்கும். கலையின் ஊற்றும் உண்மையும்- ஃபார்மும் கண்டென்டடும்- காம சக்தியின் வீர்யமே கலையின் வஜ்ரம்.

இந்த மனிதர் என்னவெல்லாம் அடித்துவிடுகிறார்!

அவனுக்குத் தலையும் வாலும் பிடிபடவில்லை. சரியான கன்ஃப்யூஷனும் உண்டாயிற்று. இது மிஸ்டர் எஸ். பிரிக்ஸின் ஒரு திறமை. சில சமயம், நேரெதிராக இந்த அபிப்ராயங்களுக்கு எதிர்மாறான தத்துவங்களை வெளிப்படுத்துவதும் அவருக்கு எளிது. அந்த வேளைகளில்தான் பிரமித்து நின்றுவிடுகிறோம். வழியறியாத ஒரு அடர் காட்டில் அகப்பட்டதுபோலவும், பெரியதோர் பாரத்தை நெஞ்சில் ஏற்றிவைத்ததுபோலவும்.

தனது ஆன்மாவில் அங்குமிங்குமாக மடக்கோ, சுருக்கோ இன்றி அலையும் ரேகைகளுக்கும் நிறங்களுக்கும் உருவம் கொடுக்க அவன் முயன்றான். கற்பனையின் காந்திபொழியாத நினைவுகள் மதிப்பிற் குரியவை. ஒரு காலத்தில் காமம் வாழ்க்கையிலிருந்து வேறாக உதிர்ந்து விழவும், பிறகு அதனுடைய காலியான மொட்டில் கலை சூலுற்று விரியவும் செய்யுமென்ற கற்பனை சாமர்த்தியமானதுதான். அவன் மெல்லச் சொன்னான், பிரிக்ஸ் கேட்காமலிருக்க. அதற்குள் ப்ரிக்ஸ் தனது கைத் தடியைச் சுழற்றிக்கொண்டு அவன் முன்பிலிருந்து போய்விட்டிருந்தார்! மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ்!!

ஸெக்ஸைப் பொறுத்த வரையிலும் அவனுக்கும் கற்பனைகளுண்டு. அதனுடைய சின்னம் பூமொட்டு. அதிமென்மையும் அழகு மணமும் கொண்ட மொட்டுக் கிண்ணம். நேர்த்தியையும் மணத்தையும் பருக வேண்டியவன் அதை நெருங்கவேண்டிய விசேஷ முறைகளிருக்கின்றன. முரட்டுத்தனமாக நெருங்கினால் நேச நேர்த்தி மங்கும். கிள்ளி வேதனைக்காளாக்கினால் அலங்கோலம் கொள்ளும். மணஇரவின் மறு தினம் கன்னத்திலும் உதட்டிலும், வீக்கமும் கீறலகளுமாக வெட்கம் மீதூர வரும் பெண்களைப்பற்றி அவன் யோசித்தான். மறைக்க முடியாத இடங்களில் கீறிப்பிளக்கும் மிருகத்தனமும், ஆபாசமும், அடக்கியாளலும்! பாதாளச் சுரங்கங்களில் சங்கிலியில் கட்டிப்போட்ட ஆண்களை, இரவு நேரத்தில் திராட்சை ரசமும் வறுத்த ஆட்டுக்கறியும் ஊட்டியபின், அந்தப்புரத்திற்கனுப்பி, ஒட்டகமயிர் பொதிந்த சாட்டையால் விளாசும் அரேபியக்கதை சுந்தரிகளின் நகைச்சுவை இரசனையை அவன் சிலாகித்தான். அந்த ஆரணங்குகளின் முன்னால் தான் இந்த ஆசாமிகளை அனுப்பவேண்டும்.

"ஸெக்ஸ் என்றால் ஈஸ்த்தெட்டிக்ஸின் உயர்ந்த மட்டத்தில் விளையாடும் ஒரு உணர்ச்சி உச்ச மயக்கம்."

மீண்டும் - மிஸ்டர் ப்ரிக்ஸ்.

அவன் முடிக்குமிடத்தில் அவர் தொடங்குகிறார். சில சமயத்தில் ஒரு இயங்கியல்வாதியான அதிகப் பிரசங்கியாக; வேறு சில நேரங்களிலொரு நம்பிக்கையற்றவனின் தீவிரவாதத்துடன்.

அவனும் மிஸ்டர் ப்ரிக்ஸும் உறைந்துளரென்ற உணர்வேயின்றி கடிகார முட்கள் நகர்கின்றன. நேரத்தின் இதயத் துடிப்புக்கள். காலத்தின் இதயத்தைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது,

"தாளமென்பது அண்டத்தின் நிற்காத நாத தாரை. உயிர்த் துடிப்பின் வளர்ச்சி அணுக்கள். தாளத்தை ஒடுக்கி ஒன்றாக்கியதே கடிகாரம். உனது, உன்னுடைய உலகின், ஒரு நாளின் வாழ்க்கையினுடையதான ஓரம்சம் அதிலுண்டு. அதன் நகர்வில் நீயும் உன்னை யறியாமல் நகர்கிறாய். ஏங்கி இழுத்து நகர்கிறாய், உன்னிடமிருந்தேகூட."

இந்த "நீ" உபயோகம் அவனுள் நிம்மதியின்மையைத் தோற்றுவித்தது. ப்ரிக்ஸ் தனது படைப்புத்தான். "பாஸ்" அல்ல. படைப்பானது படைத்தவனையே மீறுவதில்லை. இருந்தாலும் இந்த ப்ரிக்ஸ் அப்படி நடந்துகொள்கிறார்,. மறுத்துக்கூற அவன் நா எழுவதில்லை. தனது காலத்தின் துளிகள் அடர்ந்து பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. கடிகாரத்தின் முட்கள் ஒவ்வொரு "டிக் டிக்" சப்தத்திலும் அவற்றைத் தோண்டித் தோண்டி யெடுக்கின்றன. ஆனாலும், நான் வாழ்வேன்; என்னைத் தாங்கி நிறுத்தும் தாளக் கிரமங்களெல்லாம் தகர்ந்துபோயிடினும். அவ்வுருமாற்றம்தான் மிஸ்டர் எஸ் ப்ரிக்ஸ். "ஒருகாலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்."- அதனுடைய படைப்பாளி, கணக்கற்ற ஜீவதமனிகளில் பரிமளமும் வீரமும் பரப்பி, குதித்து உயர்ந்து, இறவாப் புகழ் பெற்றவராவார். தான் நிகழ் காலம்; தனது எதிர்காலம் ப்ரிக்ஸ். ப்ரிக்ஸின் கை விரல்களுக்கிடையில் காலத்தின் நூலிழைகள் கொஞ்சிக் குழையும். "எங்களுக்கு உருவம் கொடுங்கள்"

 

காவி தேய்ந்த நிலத்தில் நிலாவொளி பரப்பிய கவிதைகள் பின் வாங்கத் தொடங்குகின்றன. இதயத்துள் இரகசியங்கள் எழும்பி ஏறுகின்றன.

அவள் இப்போது என்ன யோசித்துக்கொண்டிருப்பாள், உறக்கத்தில் ஆழ்ந்திருக்கவில்லையென்றால்? நேரமடங்கும் அந்திமினுக்கில் கிழக்குத் தொடர்ச்சிமலையின் மேடுகள்போல அவள் கட்டிலில் சரிந்து படுத்திருக்கிறாள். சற்றுத்தள்ளி, தானோ அரேபியக்கடல் அலைபோல் நினைவுகளுக்கு நடுவே. அவளுள்ளும் இருக்கலாமோ அவளுடைய ஒரு ப்ரிக்ஸ்? தன்னந்தனியென உறுதியிட்டு நடிக்கும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தியும் உள்ளே எத்தனைபேரைச் சுமந்து கொண்டிருப்பார்கள்! அவளும் தனியாயிருக்க வழியில்லை. சமூகத்தின் பல துண்டுகளையும் சேர்த்துத் தைத்த ஒரு துவாலையே தனிமனிதன். தையல் உள்ளேதான், வெளியேயல்ல.

மாலையையும் மோதிரத்தையும் அகற்றி வைத்தபோது மணி நேரம் பலவும் கழிந்தது. இதுவரை அவர்கள் தமக்குள் எதுவுமே பேசவில்லை. அவள் வெட்கிக் குனியும் பெண்ணல்ல. அன்று பார்த்தபோதே தோன்றியது முதிர்ந்த விதைதானென்று. முதிர்ந்த விதையினுள்ளும் ஊமைக் கனவுகள் இருக்கலாம். ஈரமண்ணில் கிடந்து கனாக்காணாத ஒரு விதையும் இன்றுவரை முளைத்து இதழ் விரித்து நின்றதில்லை. இளம் பருவத்தில் பயற்று விளையில் குருவிகளை விரட்டியபோது முளையூன்றிய பயற்றுமணிகள் அவனைக் கவர்ந்தன. தண்டின் இரு முனையிலும் வளைந்த பருப்புக்களின் கூனலும் நிமிர்வும். கர்ப்பப் பையில் மனிதக் குழந்தை சுருண்டு கிடப்பதைப்போலத்தான்! இப்படித் தோன்றியது மிகவும் வளர்ந்த பிற்பாடே. எல்லா விதைக்கும் இரண்டு பருப்புண்டு. ஒன்றுதானென்று தோற்றமளிப்பதிலும். படைப்பு நியதி அத்வைத சாஸ்திரத்திற்கு எதிரானது ஏன்?

ஆனாலும் அவள் ஏதேனும் உரையாடலாமாயிருந்ததல்லவா. பழைய முறையிலென்றால் பழைய முறையிலாவது: "இதைப் பாருங்கள்":- இல்லாவிட்டால் "ஐயாவின் மனத்துள் இப்போது என்ன நினைவு?" என்றோ- ஏதாவது ஒருவிதத்தில் ஓர் ஆரம்பம். தானும் அவளிடம் ஒன்றும் கூறவில்லை. நினைவுகளைச் சப்புக்கொட்டியும், சந்தேகங்களுக்கு அட்டிகை யணிவித்து அலங்காரங்கள் செய்தம் , ப்ரிக்ஸ்ஸுடன் வார்த்தையாடியும் நேரம் சென்றது.

அவன் ஒரு சிகரெட்டைக் கொளுத்தினான். அது ஒரு பெரிய நிகழ்ச்சியல்ல. எத்தனையோ சிகரெட்டுகள் கொளுத்திப் புகைத்தான்; அணைத்து எறிந்தான். ஆனால் இது ஓர் பொருள்பொதிந்த நிகழ்ச்சியாயிற்று. சிகரெட்டைக் கொளுத்திய பின்னும்; தீக்குச்சியை அணைக்கவில்லை. விரல் சுடும் வரை அதைப் பிடித்திருந்தான். ஜரிகைப் புடவையும் பச்சைப்பட்டுச்சோளியும் மணிக்கட்டு நிறைய வளையல்களு மணிந்த அவளும் அவ்வொளி உண்டாகியபோது திரும்பிப் பார்த்தாள். அவனைத்தான். வளை குலுங்கல் கேட்டபோது அவனது கண்களும் அந்தப்பக்கம் திரும்பின. ஒளியின் கடைசிமூச்சில் அவன் பார்த்தான். இரு கண்கள்.

முன்பெங்கேயோ கண்ட கண்கள்!

அக் கண்களை அவனெப்போது கண்டான்? அவள் உறங்கிக் கொண்டிருந்திருக்கவில்லை. உறங்கும் பாவனையில் படுத்திருக்கிறாள்.

அவளது கண்ணிமை மயிர்களில் ஈரமிருந்ததோ? அவனையறியாமல் ஒரு முறை தூக்கி வாரிப்போட்டது. சுவற்றில் சாய்த்து வைத்திருந்த சாய்வு நாற்காலியை நிமிர்த்தி அவளையும் ஜன்னல்புறக் காட்சிகளையும் பார்க்கும்விதத்திலொரு கோணத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தான்.

அவ்விரண்டு கண்களும் இப்போதும் அவனைத்தான் பார்க்கின்றனவோ? இருளில் ஒன்றும் புலப்படவில்லை. வெளியே எரியும் பெட்ரோமாக்ஸின் வெளிச்சம் பரவி விழும் மங்கிய மினுக்கத்தில் இரண்டு சிறு கண்மணிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்.

நடுநிசி தாண்டிய நேரத்தில்,கனவுகள் தாலாட்டிய கண்ணிமையில், சிறகுகள் படபடக்கும் ஆரவாரத்துடன் விழிப்புற வேண்டிய கண்ணிமை மயிர்களில் ஈரத்துடன் சுருண்டு சுருங்கி, நாணமுற்று, கிட்டத் தட்ட ஒரு குற்றவாளியைப் போல, திருமணவறைக் கட்டிலில் தனியாக, நடுவிலெதுவிமில்லாத ஒற்றை பிராக்கெட்டைப் போல,சரிந்து படுத்திருக்கும் பெண்ணே, தூண்டுதல் வார்த்தைகளின் சுடுரஸமேற்று சிரித்துக் குழைய வேட்கையுற்றிருக்கும் மங்கைத் தையலாளே...!

சட்டென்று அவனது வார்த்தையோட்டம் உடைந்து சிதறியது.அக் கண்கள் தனக்குப் ரிச்சயமானவையென்ற உணர்வு மனதில் மீண்டும் புடைத்தெழுந்தது. ஒரு நினைவின் தூக்கிட்டுத் தொங்கும் நூலிழையில் அவனது பச்சை இதயம் உருண்டுருண்டு அசைவது போல. 'இதய'மென்ற மூன்றெழுத்து அவனை ஒரு மாதுளை மரத்தடிக்கு அனுப்புகிறது. மாதுளம் பழத்தின் நிறமும் உருவமும் கிட்டத்தட்ட மனித இதயத்தினுடையவை. அதனுடைய தோலுறைக்குள் கரிந்துறைந்த இரத்தச் சொட்டுகளிருக்கின்றன. வாழ்க்கையின் துடிப்பும் எழுச்சியும் தாவுகின்றன ஒவ்வொன்றிலும்,மனித இதயம் போலவே மாதுளம் பழமென்று. ஃப்ரெடரிக்கோக்ரேஷியலோர்க் கவிதை எழுதியதெப்போது? எப்படியானாலும் அதைப் படிப்பதற்கு எவ்வளவோ காலம் முன்னாலே இவ்வுண்மையை அவன் கண்டுபிடித்திருந்தான்.

ஒவ்வொரு கீதமும் ப்ரேமையின் மௌனம். ஒவ்வொரு நட்சத்திரமும் காலத்தின் கெட்டிப்பட்ட வெளிப்பாடு. நேரத்தின் சிடுக்குகள். ஒவ்வொரு பெருமூச்சும் கூக்குரலின் நிசப்தம்.

லோர்க்கின்மேல் அவனுக்கு மதிப்புண்டு. யார் அதிகக் கற்பனா சக்தியுள்ளவர், லோர்க்கையா, ரில்கெயா? மிஸ்டர் ப்ரிக்ஸ் இவ்விரண்டு பேரையும்விடத் தற்படைப்புத் திறம் மிக்கவர்.

 

வீடு பாகப் பிரிவினையாவதற்கு முன் முற்றத்தில் ஓர் மாதுள மரம் இருந்தது. அதன் அடியிலேதான் முதலில் அக் கண்கள் அவனை நோக்கின. மாதுளம் பழம் கொத்தித் தின்னவந்த இரு பறவைகள் மனித இதயம் போலிருக்கும் பழங்களில் தாவிக்குதித்து அலகைத் தீட்டிக் கொத்தின. இரத்தத்துளிகள் தெரித்து வீழ்ந்தன. மூக்கில் படிந்த இரத்தத்துடன் குருவிகள் கிளையிலிருந்து பழத்திற்கும், பழத்திலிருந்து கிளைக்கும் தாவிப் பறந்தன ஹர்ர்...என்ற ஒலியுடன். அக்குருவிகள் சிறகுகளைச் சிறகுகளில் தீட்டி, இறகுகளை இறகுகளில் ஒளித்தன. கிணுகிணுக்களின் இடையில் சற்றுக் கலவியும் கொண்டாடின. சட்டென்று நினைவு தப்பியதுபோலப் பெண் குருவி கீழே விழுந்தது. பயந்தோ, வேறெதனாலோ, ஆண் பறவை பறந்து மறைந்தது.

மாதுளை மரத்தைப் பற்றியொரு செவிவழிச் சரித்திரமுண்டு என்பதை அவன் நினைவுகூர்ந்தான்.

முன்னொரு காலத்தில் அதாவது மிக்க பழங்காலத்தில் இம் மரம் மரமாயிருக்கவில்லை.அதன் வேர்கள் மண்ணில் ஊன்றியிருக்கவில்லை. நடுமரம் ஆகாயத்தை நோக்கி உயர்ந்திருக்கவில்லை. பூமியிலும் ஆகாயத்திலும் ஒரேபோலப் படர்ந்திருந்த ஒரு ராட்சசனின் உருமாற்றமே மாதுளை மரம். அவனுக்குப் பிடித்த உணவு மனித இதயம் மட்டும். நாள்தோறும் நாற்பத்தொன்று இதயங்களை உள்ளே தள்ளினால்தான் அவன் பசியடங்கும்.ஆயுட்காலத்திற்குள் அநேகமாயிரம் மனிதர்களைக் கொன்றொடுக்கி அவர்களது மாரைப் பிளந்து இதயத்தைப் பறித்தெடுத்து அவன் உண்டான். ஒரு நாள் அவனுக்கு மனித இதயம் கிடைக்கவில்லை. அவன் கொன்று குவித்த மனிதர்களில் யாருக்கும் இதயம் இருக்கவில்லை. கணநேரத்திற்கு அவன் ஆச்சர்யமுற்றான். பசி அதிகமாகியபோது ஆச்சர்யம் மடிந்தது. விஷயம் இந்தமாதிரிப் போனால் தான் பட்டினிகிடந்து இறப்போமென அவன் பயப்பட்டான்.

மனிதர்களுக்கு இதயம் கொடுக்கவேண்டுமென்று கடவுளிடம் வேண்டத் தீர்மானித்துக் குகையிலிருந்து வெளியே புறப்பட்டான். அப்போது காட்டில் நீர்ப்பொய்கையில் அழகு தேவதைகளாகிய பெண்கள் நீராடுவதைக் கண்டான். ராட்சசன் ஒரு ராஜகுமாரனின் வேடம் பூண்டு அவர்களை மோக வசமாக்கினான். ஒவ்வொரு அழகுக் கன்னியையும் அழைத்துக்கொண்டு குகைக்குள் போனான். அவர்களது மார்பைக் கீறி மரக்கிளையின் கொம்பில் தொங்கவிட்டான். நாற்பத்தொன்று சேர்ந்தால் உண்ணத் தொடங்கலாமென நினைத்தான். அப்படி அவன் முப்பத்தாறு இதயங்களை மரக்கிளையில் முடிச்சிட்டான். அந்நேரத்தில் அவ் வழியாகக் குளிக்கந்தஒரு ரிஷிபத்தினி இந்தக் கோரக்காட்சியைக் ண்டு கோபமுற்று ராட்சனைச் பித்தாள். "டேய், குரூரக் கொடியோனே, நீ ஒரு மாகக் வாய்." அவனொரு மானான் அந்தக் த்திலேயே. அதுவே மாதுளை ம். அவன் அன்றுவரை புசித்தஇதங்களை மாதுளம்பஉருவத்தில் முப்பத்தாறு தேவர்களுக்கும் மற்றவை னிதர்களுக்கும் திருப்பிக் கொடுக்கும் ரையில் ராட்சனுக்கு சாபவிமோசமில்லை. னிதஇதங்களையெல்லாம் அவன் திருப்பிக் கொடுத்துவிட்டானென்றும், பாக்கியிருக்கும் முப்பத்தாறு தேவஇதங்களைக் கொடுக்கவானர்களை பூமியில் காணாததினால் இன்றும் மாகவே சாபனுபவிக்கிறான் என்றும் கேள்வி. இக் தையைக் கேட்டபின் அவன் மாதுளம் ம் தின்னவில்லை. தேவஇதத்தைத் தின்ற குருவிக்கு என்ன ஆயிற்று? சொர்க்கவாசம்! மாதுளை மரத்தினடியில் கிடந்த குருவியை அவன் கையிலெடுத்தான். குருவி அவனைப் பரிதாபமாகப் பார்த்தது. சற்றுக் கழிந்ததும் அது செத்து விறைக்கவும் செய்தது. அப்போதுகூட அதன் கண்களில் ஒளி வற்றியிருக்கவில்லை. அக் குருவியின் கண்கள். அவளுடைய கண்கள்.

அக் குருவியைப்போல இவளும்..அவனால் தொடர்ந்து யோசிக்கமுடியவில்லை. சும்மா வேண்டாத இவற்றையெல்லாம் சிந்தித்து நெஞ்சில் துன்பத்தின் நஞ்சிட்டுக் குமைக்கிறான்.

இந்த இதயமென்பது எத்தனை விசித்திரமான பொருள்! மாதுளம் பழம் மட்டுமல்ல அது. அசுத்தம் மிக்க உமிழ்நீர் படிக்கம்கூட. எவ்வளவு விரைவில் அதில் கெட்டவை நிறைகின்றன. கீழ்த்தரமான கலவியின் அருவருப்பான நிலைகளை அவன் கண்டான். ஆடு, மாடு, பருந்து, நாய், பாம்பு, கீரி-எல்லாவற்றினுடையவும் கலவி முறைகள். இதெல்லாம் தனது மனத்தினுள் நுரைதள்ளிப் பொங்குகின்றனவென்பதை நினைத்தபோது அவனுக்கு அவனிடமே அருவருப்புண்டாயிற்று.கெட்ட காட்சிகளின் அடுக்குகளைச் சுருட்டி வைதத சுமையே மனம். மனத்தின் காட்சிகளைப் பிய்த்தெடுக்கவும் முடியாது. உறக்கமும் அவனைப் புறக் கணித்த மாதிரித்தான். அவன் கவிதையை நோக்கித் திரும்பினான்.

 

உறக்கப்பறவை எந்தன் கண்ணில்

முட்டையிட முடிவு செய்தும்

கண்ணிமை மயிர்கள் வலையாமெனவே

குழம்பியங்கு பறந்து போயிற்று.

 

ஆயிரம் வருடத்துக்குமுன் ஒரு மூரிஷ் கவிஞன் பாடினான். அதே வழி வந்த மற்றொரு கவிதையையும் அவன் தனக்குள் பாடினான். 

அவள் வழங்கத் தயாரானாள்.

ஆனால் நான் விலகிப் போனேன்.

சைத்தானின் ஆசையூட்டலுக்கு

அடிபணியவில்லை.

முனைத்த இரவொன்றில்

முகத்திரை இடாமல்

அவள் வந்தாள்.

அவளது முக காந்தியில்

இரவும் திரையை

விலக்கிப்போட்டது

நானப்போது யோசித்திருந்தேன்

காமத்தை மட்டந்தட்டும்

 

தெய்வீக அறிவுரைகளை,

என் உணர்ச்சிகளின் முற்றத்தில்,

நன்மையிலிருந்து விலகிப் போக முயன்ற

என்னைத் தடுத்து நிறுத்தும் காவலாளியைப் போல

திவ்யோபதேசம் நிலை நின்றது.

அப்படியாக அவளோடு

இரவைக் கழித்து நான்

வாய்க்கூடை கட்டிய

ஒரு ஒட்டகக் குட்டியைப்போல

முலை குடிக்காமல், மற்றபடி

பார்க்கவும் முகரவும் செய்த

ஒரு பூங்காவனத்தில்;

வேறென்னவுண்டு எனக்கங்கு செய்ய?

பூவனங்களை மேய்ச்சல் காடுகளாக்கும்

ஊர்சுற்றி மாடுகளைப்போலவோ நான்?
 

அவன் எங்கிருந்து ஆரம்பித்தானோ அங்கேயே வந்து சேர்ந்தான். பார்க்கவும், முகரவும் செய்தபோதிலும், நினைவுகளுக்கும் பார்வைகளுக்கும் சற்றுக்கூடத் தூய்மை கிட்டியது. வாய்க்கூடை கட்டிய ஒரு ஒட்டகக் குட்டியைப் போல அவனும் அவளை நோக்கினான்.

 

அவள் கட்டிலில் படுத்திருக்கிறாள்.

வாய்க் கூடையை மெதுவாக அவிழ்த்து நீக்கி,

மெல்ல மெல்ல சென்று,

காலியாய்க் கிடக்கும் படுக்கையின் பாதியில்

சரிந்து, சற்று நீந்தி நீங்கினான்.

 

அவளது சிதறி விழுந்த அளகபாரங்களைச் சீவியொதுக்கி, நெற்றியில் விரல்களைப் பதித்து, கண்ணிமை மயிர்களைத் தடவி அதன் ஈரத்தை உருமாலில் ஒத்தியெடுத்து, விரலைச் சற்றுயர்த்திப் புருவக் கொடிகளின் வளைவையும் நீளத்தையும்மளந்து, மூக்கின் பாலத்தோடு மோதிர விரலை நீவி, அதன்மேல் இனிய வீணை வாசித்து, அப்படியும் அசையாமல் கிடக்கும் அவளது அதரங்களில் சற்று இலேசாக அழுத்தி, இன்னும் கொஞ்சம் அழுத்தி, ஒரு நெடுமூச்சுவிட்டு, அவளில் ஒருமூச்சை எழுப்பி, சுடும் உதடுகள், மயக்கும் பரிமளம், மென்மைமிகு நாடித் துடிப்புக்கள்....அப்படியப்படி.....

வெளியே ஓசையும் சலனமும் அடங்கின. விளக்குகள் மட்டும் எரிகின்றன. எல்லாக் கண்களும் உறக்கத்தில் கட்டுண்டடங்குகின்றன. நடுநிசிப் பாட்டில் எல்லாவற்றிற்கும் களைப்பு. பூமிகூட சுக நித்திரையில். பாவம் பூமி! அவள் அதிருஷ்டம் கெட்ட ஒருத்தி, சூரியனென்னும் சுல்த்தானின் அரண்மனையில் சுந்தரி. சுல்த்தானுக்கு மற்றும் உளர் சுந்தரிகள் வைப்பாட்டிகளாகவும் மனைவியராயும். சுல்த்தான் அவர்களுக்கருகே செல்கையில் பூமிக்குக் காவலாக ஒரு கருப்பு அடிமையை நிறுத்துகிறான். அவனும் உறக்கத்திலாந்துவிட்டான்-அலி.

ஒருவன் மட்டும் உறங்கவில்லை. ஒருத்திக்கு அருகிலிருப்பவன். தான் காவலாளியல்ல. கருப்பு அடிமையல்ல. பிறகு மறுபடியும் நினைவுகள் கட்டு முளையை இழுத்துக்கொண்டு மறுபக்கம் குதிக்கின்றன. நினைவுகளை வரப்பில் மேய விடுகையில் அவை பதறி வயலில் குதிக்கின்றன. வயலிலிருந்து இன்னொரு வயலுக்கும்.

"தூங்க வேண்டாமா?” அவள்தான் கேட்கிறாள். அவள் செவியுற்றதும் சினம் பிறந்தது. பின்னே உறங்க வேண்டாமா? கல்யாண ராத்திரி சிவராத்திரியா? பின் எதற்காக இவள் தன்னிடம் இதைக் கேட்க வேண்டும்? அடீ பெண்ணே, உறங்கிக் கொள். எனது அருமை மணவாட்டி நித்திரைவயப்பட்ட போதிலும், எனது அருளுக்காகக் காத்திருக்கிறாளோ அவள்? அதுவா அல்லது தன்னை உறங்கச் செய்யும் பிடிவாதமா? வந்திருக்கிறாள் ஒருத்தி தாலாட்டித் தூங்க வைக்க. பெண்களெல்லாம் கணவன்மாரைக் காண்பது இவ்விதமா? தாலாட்டித் தொட்டிலாட்டி, கையில் கிடத்தி உறங்க வைக்க வேண்டிய பிஞ்சு சுசுக்களைப் போல-ராராரிராராரோ..... என்று உன்னி கிருஷ்ணன் பிறந்தானோ? இருக்கலாம். அவளுடைய காம உணர்ச்சிகூட ஒரு தாலாட்டுப் பாடல்தான். ஆணின் தொட்டிலும் சவப்பெட்டியுமே பெண். அவள் தாலாட்டுப் பாடுகிறாள். அதை நிறுத்தி ஒப்பாரியை ஆரம்பிக்கிறாள்.

"உறங்க வேண்டாமா?”

மீண்டும் அதே வார்த்தை. ஆனால் குரல் வேறு. தன்னுடைய குரல். அவளது வார்த்தைகளைத் தனது தொனியில் பொதிந்து திருப்பிக் கொடுத்தல். அவனது சொற்களுக்கு என்ன நேர்ந்தது? எல்லாவற்றையும் மிஸ்டர் ப்ரிக்ஸ் கைப்பற்றிக்கொண்டுவிட்டாரோ?

 

"உறக்கம் வருவதில்லை அவள் சொன்னாள்.

அவனொன்றும் சொல்லவில்லை.

அப்போது அவள் மறுபடியும் கூறினாள்:

கட்டெறும்பின் தொந்திரவு.”

"படுக்கை விரிப்பைத் தட்டி உதறிவிட்டால் போதும்.”

"அப்படியெல்லாம் போய்விடுகிற கட்டெறும்பில்லை.”

 

சட்டென்று அவனுக்குத் தனது ஒரு வாக்கியம், அதாவது மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸின் சொற்றொடர் நினைவிற்கு வந்தது. முட்டாளிடம் அவனது நூற்றெட்டுக் காதலிகளில் அறிவில் குறைந்தவளான மிஸ் விலாஸினி கூறியது: தங்களுடைய கல்யாணக் கட்டிலில் ஒரு கட்டெறும்பாகிவிடச் சற்றும் விரும்பியதிலை. பிரபோ, இவள்.”

அவன் கேட்டான் அவளிடம்-முட்டாள். விலாஸினியிடமல்ல- மணவாளன், மணவாட்டியிடம்: "கட்டெறும்பெங்கே? கட்டிலிலா, உள்ளங்கையிலா?”

"கையில்

"கட்டெறும்புகள் அப்படித்தான் ப்ரிக்ஸை தியானித்து அவன் விவரித்தான். "அவற்றின் கடியேற்றால் தாங்க முடியாத எரிச்சலும் கடுப்பும் உண்டாகும். கட்டெறும்புகளில் பல பிரிவுகளுண்டு மிகவும் குறும்பானவன்-நீல நிறமும் மெலிந்த உடலும் கொண்ட குரூர மானவன். அவனது கொடுக்கில் ஒரு ஸ்பூன் கொழுத்த விஷம் இருக்கும். விஷத்தில் மரணத்தின் பிணைப்பும்.”

 

அவள் பதில் கூறவில்லை. தனது தொண்டை இடறுகிறதென்று அவன் புரிந்துகொண்டுவிடக் கூடாது. இருளில் கண்ணிலிருந்து பெயர்ந்து விழும் துளிகளை அவன் பார்க்கவில்லை. நல்லதாய்ப் போயிற்று. அப்போது பக்கத்தில் கோழி கூவியது. பெண்கள் கன்னத்தில் கண்ணீரை வழிய விடுகையில் கோழியின் தொண்டையிலிருந்து நாதம் உயர்கிறது. இப்போது கோழியின் கொண்டைப்பூ குதிரைப் படை வீரனின் தலைப்பாகை நுனிபோல அசையுமாயிருக்கும். விடிகாலையில் எழுந்த கொக்கரக்கோ நின்றதெப்படி? ப்ரோக்கன் இமேஜ் போல ப்ரோக்கன் ஸெளண்டும் உண்டாமோ? யாருக்குத் தெரியும்? சே! நான் இகழும் அம் மனத்தத்துவக்காரர்களின் நாடை, என் நினைப்பில் எங்ஙனம் பிணைந்தது? வெட்கக்கேடு!

அறையில் சிலஉஸ்ஸென்ற ஓசைகள். காற்றும் ஜரிகைப்புடவையும் இடறுகின்றன. வளை குலுங்கல். அவள் சாய்வுநாற்காலியின் பின்னால் வந்து நிற்கிறாள். குன்றின் பின்னால் உதயம்போல அவளது நெருக்கம்தன்னில் கவிதையின் மயக்கத்தைப் புரட்டுகிறது. அந்த மங்கல வேளையில் கிரெளஞ்சப் பறவைகளில் ஒன்றை எய்து வீழ்த்திய காட்டுவாசியின் கூர்மையான அம்பு போல இன்னொரு நினைவு இதயத்தில் துளைத்தேறியது. தான் கல்யாணத்திற்குப் புறப்படத் தயாராகும் வேளை. ஒரு சீட்டுக் கடிதத்துடன் ஒரு சிறுவன் தோன்றுகிறான். நோன்புக் கயிறு கட்டிய அவனது கையில் ஒப்படைக்கிறான். மணிமணியான எழுத்தில் சில வரிகள். அதில் கவனத்திற்குரியதும் குறியீடானதுமான ஓர் வரி.

இதோ என் வாழ்த்துக்கள். தங்களது சுத்தப்படுத்தப்பட்ட பாதையில் ஒரு காரைமுள்ளாக விழுந்து கிடக்க இவளுக்கு விருப்ப மில்லை, சற்றும்.’ அடியில் ஒரு ஓவியம்-ஒரு பாதை; நாலைந்து காரைமுட்கள்.
 

காரை முள்ளும் கட்டெறும்பும்.

படுக்கையறையும் பாதையும்.

 

காலில் தைத்த காரைமுள் தானே வழுக்கிக் குதித்தது. இதயத்தில் படிந்த கட்டெறும்போ? ஊர்ந்து வெளியே போகுமோ, அல்லது குத்தி விஷத்தைப் பாய்ச்சுமோ?

 

இருளில் புகைச்சுருள்களை விரித்துக்கொண்டு அவன் அப்படியே அமர்ந்திருந்தான். அச் சுருள்களுக்கு நடுவே அவனது மாயக்கவிதைகள் விளையாடின. இறுதியில் புகைச்சுருள்களுடன் அவையும் அசைந்து சிதைந்தன. சுருள் மட்டுமல்ல, அவற்றுக்கு உருவமேற்றிவிட்ட உதடுகளும், முகமும், மனிதனும், அவனமர்ந்திரு்கும் சாய்வு நாற்காலியும், அதைப் பிடித்துக்கொண்டு நிற்கும் பெண் மடந்தையும், அவ்வறையும் ஊர்ப்பகுதியுமெல்லாம் இல்லாமல் போயிற்று. எத்தனை பட்டென்ற மாற்றங்கள்!

அவனது உருவத்திற்குப் பதில் சாட்சாத் மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ் தோன்றினார். அவர் சற்று மிடுக்குடனிருந்தார். மிஸ்டர் ப்ரிக்ஸ் சிகரெட் குடிப்பதில்லை. உதட்டின் இடது ஓரத்தில் வழக்கத்தைவிட நீண்ட ஒரு பைப். தூய ரோமத்தால் நெய்த உடைகள். ஓவர்க் கோட். காஷ்மீர்த் தொப்பி. கழுத்தில் சுற்றிய மஃப்ளர். ஐந்து நாள் தாடிமயிர் அவ் வதனத்தை அலங்கிரிக்கிறது. இடம் ஸ்வீடன் நாட்டின் தலைநகர். அங்குள்ள அரண்மனைப்பூங்கா. பூந்தோட்டத்தில் ஏராளமான கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நாய்கள், எல்லோரும் பனியின்வசத்தில். சிறியதோர் சிலம்பின் சிணுக்கலுடன் பனியிதழ்கள் வீழ்கின்றன. காலம், 'ஒரு காலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்' என்ற அழியா நவீனத்திற்கு அவ் வருட நோபல் பரிசு. ஸ்வீடனின் மகாராஜாவிடமிருந்து கருணையுடன் பெற்றுக் கொண்ட சரித்திரப் பிரசித்தமான விழாவின் மறுநாள் மாலை, மிஸ்டர் ப்ரிக்ஸ் தனது விசிறிகளிடமிருந்து தப்புவதற்காகப் பூங்காவனத்தில் சற்றுச் சுற்றித் திரியலாமென வந்தார்.

அப்போது அவள் பின்னால் நெருங்கினாள்..

அவளுக்கு வேண்டியது இன்டர்வியூ. அவ்வளவுதான். அன்று முழுவதும் நிருபர்களின் வேட்டையாகவிருந்தது. ஹோட்டல் அறைகளும், சுற்றுப்பறமும் சந்தைக்கடை போலாயின. மலர்த்தட்டுக்கள், பூமாலைகள், பீர் சீசாக்களின் மூடிகள், விஸ்கி லேபில்கள், சிகரெட் நுனிகளும்,சாம்பலும், வாழ்த்துரைகளும், கவிதைகளும்; டெலி ஃபோன் அழைப்புக்கள், பதில்கள். கடவுளே, இது என்ன தொல்லை! மனிதனுக்குப் பரிசு கொடுத்துக் கொல்ல வேண்டுமென்றிருக்கிறதோ1 இதோ இப்போது இந்தப் பூந்தோட்டத்திலும் தப்புதலில்லை. வேட்டை நாய்களின் வாயிலிருந்து தப்புவதற்காக, வந்து சேர்ந்ததோ கண்ணியின் நடு மத்தியில், பிரபலமான இலக்கியக் கரத்தாவுக்கு எங்கும் நிம்மதியில்லை. மனிதர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவன் வேட்டையாடப்படுகிறான். வேட்டையென்றால் பேட்டி. ஈட்டிகளாவன கேள்விகள். எருமையாகப் பிறந்துவிட்டால் நுகத்தடி பூணுவதை எதிர்க்கக்கூடாது. இலக்கியக் கர்த்தாவானால் பேட்டிக்கு முகத்தைத் துடைத்துச் சுத்தமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். " தாங்கள் எழுதுகையில் கவிழ்ந்து படுத்திருப்பீர்களோ, அல்லது குறுகிக்கொண்டு ஒரு குந்தத்தின் மேல் அமர்ந்திருப்பீர்களோ?" "ஸார், 'க்ஷ்' என்ற எழுத்தை எழுதுகையில் அது படைப்பு முறையினால் மேன்மைபெற்று '' என்று ஆவதுண்டோ?" ஆனால் இலக்கியத்துக்குப் புறம்பான விஷயங்களைப் பேசுவதுதான் சரி.

 

இவ் வனிதாமணி, முற்றியவிதை, என்னவெல்லாம் ஆயுதங்களுடன் வந்திருக்கிறாளோ! அவள் தனது காலடிச் சுவடுகளை மோப்பம் பிடித்து வந்திரு்கிறாள். அவளுக்கு வெறுப்புண்டாக்குவது மடத்தனம். 'லர் ஹுமானித்தெ' யுடையவோ, ' நியூயார்க் டைம்ஸ்'ஸினுடையவோ நிருபராயிருக்கலாம். லட்சக்கணக்கில் மக்கள் படிப்பர். "மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ் நோபல் பரிசு பெற்றவர். ரவீந்திரநாத் டாகூருக்குப் பிறகு........"

"யூ மீன் டகோர்?"

"!"

"ஃபன்னி ஓல்ட் மேன் , அஃப்கோர்ஸ்!"

முன்பக்கம் வீனஸின் சிலைகொண்ட மார்பிள் பெஞ்சில் மிஸ்டர் ப்ரிக்ஸ் ஊன்றியமர்ந்தார். அந்த வெண்ணெய்க்தற்சிலையின் தொடைகளுக்கு இத்தனை முனைப்பு அவசியமா? யாருடைய படைப்பு? தன்னிடம் பேட்டிக்காக வினயத்துடன் நெருங்கி வந்திருக்கும் ஒயிலாளும் மினிப் பாவாடைக்காரிதான். அவளுடைய தொடைகளுக்கு அத்தனை முனைப்பில்லை.

கேள்விகளையெல்லாம் அவள் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாள். தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதங்களையெல்லாம் முதலிலேயே சேகரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். அவள் வெறும் பத்திரிகை நிருபரல்லள். சாட்சாத் பத்திரிகை ஆசிரியையே. காலகட்டத்தின் வைரம் பாய்ந்த பிரச்னைகளே பேச்சின் கரு. மினிப்பாவாடை யணிந்த கால் முட்டியைக் குறுக்கி, மென்மை வாய்ந்த கண்கள் உலகத்தின் பெரும் விஷயங்களை எடுத்து அம்மானையாடக் காட்டும் ஆர்வத்தை நினைத்தபோது நகைச்சுவைக்கப்பாற்பட்ட மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸுக்குக் கூடச் சிரிப்பு வந்தது. ஆனால் அவர் சிரிப்பை ஒதுக்கி வைத்தார். கேலி செய்தல் கூடாது. அவள் சமர்ப்பித்த கேள்வி மாலையிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஒரு அறிவு ஜீவி அவள். அறிவு ஜீவிகளைக் காண்கையில் புருவத்தைச் சுளித்துக்கொள்ளுங்கள். ஆனால் பீறிட்டுச் சிரித்து விடாதீர்கள். நிர்வாணமான பற்கள் மூளையைப் பரிகாசம் பண்ணுகின்றன.

அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது: மிஸ் மரியா கொரோஸி,எடிட்டர், 'லா புர்க்ஸி'.

'லா புர்க்ஸி' ~ஒரு லிட்டில் மாகஸின். மொத்தமே அச்சாகும் பிரதிகள் நூற்றியெழுபத்தேழு. கல்லச்சில்தான் அச்சாகிறது. உலகத்தில் நூற்றைம்பது பெரிய மனிதர்கள். இக் காலாண்டு இதழை வாசிக்கின்றனர். இதைப் படிப்பவர்கள் அப்படிச் செய்வதினாலேயே பெரிய மனிதர்களாகிறார்கள். ஆர்தர் மில்லர் முதல் ஸோலக்கோவ் வரை இப் பரம்பரையில் உட்படுவர். ஸார்த்ரெ அனுப்பிய படைப்பு, வேண்டிய அளவு தத்துவார்த்தமாக இருக்கவில்லையென்ற காரணத்தால் 'லா புர்க்ஸி ' அதைப் பிரசுரிக்கவில்லை. ஒருமுறை மட்டும் காமுவின் படைப்பைச் சேர்த்தது. ஆசிரியருக்கான ஒரு சிறு கடிதம். அக் கடிதம் வெளிவந்த மாதத்தில்தான் காமுவுக்கு நோபல் பரிசு கிடைத்தது. நோபல் ப்ரைஸ் வாங்கியவர்களுக்கே இப் பிரசுரத்தில் எழுத அருகதையுண்டு. வாசகர்களைக்கூட ஆசிரியரே தேர்ந்தெடுக்கிறார். மிஸ்டர் ப்ரிக்ஸை 'இன்டர்வியூ' பண்ணும் 'லா புர்க்ஸியின்' பெருமைகள் இவையும், இன்னும் பலவும்.

ஒரு கையில் சீவிய பென்சிலும், மறு கையில் நோட் புத்தகமுமாக அவள் தன் முன்னால் நிற்கிறாள். அழகுமிகு ஓர் கம்பீர வனிதை. வீனஸ் சிலையின் பின்னணியில் அவளுக்குத் தெய்வீகமான அழகு உண்டாயிற்று. மிஸ்டர் ப்ரிக்ஸ் அவளை நோக்கியவாறிருந்தார். அப் பார்வையின் கவர்ச்சியாலோ அல்லது அதனுடைய ஊடுருவலாலோ என்னவோ அவள் புல்தரையில் தனக்கு நேராக முன்னால் இடம் பிடித்தாள். அவள் ஒரு புறக்கொடியின் நுனியைக் கிள்ளி முகத்தைச் சொறிந்துகொண்டபோது மிஸ்டர் ப்ரிக்ஸின் மனத்தில் கவர்ச்சி மிக்கதோர் இந்திய சினிமா நடிகையின் சித்திரம் பதிந்தபோதிலும் கணப்பொழுதில் அவ்வுபயோகமற்ற சித்திரம் அழிந்துபோயிற்று. அது நல்லதொரு சம்பவம். ஒரு மினி ஸ்கர்ட்டுக்காரி காலடியில் புல்தரையில் அமர்ந்திருப்பதும், நீங்கள் சற்று உயரத்தில் பெஞ்சில் உட்கார்ந் திருப்பதுமாக இருக்கையில், உங்கள் பருந்துக் கண்கள் பம்பரம்போல எந்தப் பக்கம் திரியுமென ஊகித்துக்கொள்ளுங்கள். இல்லாத பாவாடை நுனியால் அவள் பெண்மையின் வடிவுகளை இழுத்து மறைக்க முயற்சித்தாள். கடைசியில் அவள் தொடையின்மேல் நோட்புக்கை வைத்துக்கொண்டாள். ப்ரிக்ஸ் பொழிந்த பொன் மொழிகளைக் குறித்துக்கொண்டாள். அவள் மரியாதை கலந்த வணக்கங்களுடன் சமர்ப்பித்த கேள்விமாலையில் கண்ணையூன்றி, பைப்பை வாயிலிருந்து எடுக்காமல் புகையில் பொதிந்த வார்த்தைகளை அவர் வெளியே விட்டார்.

"இக் கவிதைகளில் பெரும்பாலானவையும் நான் இப்தால் சர்வகலா சாலையில் கூட்டிய அகில உலக இலக்கிய மாநாட்டின் தலைமையுரையில் சர்ச்சைப் பொருளாக்கியிருக்கிறேன். அதை நீங்கள் படித்தீர்களா?”

"படிக்கவில்லை. மேஜை இழுப்பறையில் வைத்திருக்கிறேன் என்றாள் "லா புர்க்ஸி பத்திரிகாசிரியை.

"அரிய சிந்தனைகள் மேஜை இழுப்பறையில் வைக்கப்படவேண்டியவையல்ல. இதயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவையே-மிஸ்டர் ப்ரிக்ஸ் தொடர்ந்தார். "இந்தப் பத்தாண்டில் பத்திரிகாசிரியர்களுக்குக் கருத்துக்கள் மூளையிலல்ல, அலமாரிகளிலாம். அவர்களை மட்டும் நான் குறை கூறவில்லை, வேதப் புத்தகம்கூடப் பாதிரியின் இருக்கைத் தலையணைக்கு உயரம் கூட்டும் உபாயமாக இருக்கும் காலகட்டத்தில்.”

 

அவள் சிரித்தாள்: அவரும் சிரித்தார். அவளது பற்கள் நீல நிறமானவை. சிகரெட் குடிப்பதனாலிருக்கலாம். வைட்டமின்-ஸி குறைவினாலுமிருக்கலாம். தனது பெட்டியிலிருக்கும் மாத்திரைகளைக் கொஞ்சம் எடுத்துக் கொடுத்தாலென்ன? வெள்ளைக்காரப் பெண்மணிக்கு ஏராளம் சத்துக் குறைவுகளுண்டு. அதையெல்லாம் சரிக்கட்டதான் ஏன் மெனக்கெட வேண்டும்! அதுவும் நோபல் பரிசு வாங்கிய ஓர் ஆசியன்.

"மிஸ்டர் ப்ரிக்ஸ், எனது ஏழாம் கேள்வியைக் கவனித்தீர்களா? ஸெக்ஸ், ஸொஸைட்டி இவற்றிற்கிடையிலுள்ள உறவைப்பற்றி, நவீன நாகரிகத்தின் விதியை நிர்ணயிக்கும் முடிவு அதுதானே?”

"இக் கேள்வியை அதனுடைய நிர்வாண உருவிலேயே சிந்திக்க வேண்டியுள்ளது.”

"நேக்கட்ஸ் வேட் மிஸ் மரியா கொரோஸி ஆமோதித்தாள்.

"வாழ்வின் சத்தும் ஸெளந்தர்யமும் ஸெக்ஸ்தான். படைப்பெனும் செயல் ஸெக்ஸ் மட்டும்தான். மற்றெல்லாப் படைப்பு முறைகளும் ஸெக்ஸின் உப-விளைவுகளே. மாற்று வகைகள் என்றும் கூறலாம். மேலைநாட்டவர்கள் மேலெழுந்தவாரியான சிந்தனையாளர்கள். அவர்களுக்கு கலையைப் பொறுத்த அப்பாலைக் கற்பனைகள் கிடையா. இப்போதிங்கே அவ்வளவுதான். எக்ஸ்டென்ஷியாலிஸம். அந்த வழியில் சில விசாரணைகள் ஆரம்பித்தது. ஆனால் இலட்சியத்தை அடையாமல் தோற்றது. வெளிப்படையாகச் சொல்வதினால் உங்களுக்கு அதிருப்தி உண்டாவதில்லையே? உங்களுக்கு ஆண் பெண்ணினுடைய ஸெக்ஸின் பரந்த சாத்தியக் கூறுகள் புரியவில்லை. உதாரணத்திற்கு ஸார்த்ரெயையும் மதாம்புவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள்தானே எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் திருச்சபையில் மேட்ரனும் மதர் ஸுப்பிரியரும். அவர்கள் புண்ணியவான்களின் வேஷமிட்டு ஆட மட்டுமே செய்கின்றனர். புதிய வாசக வித்தைகள் செய்கின்றனர். அடிப்படையாக, நொடித்தலுக்குள் வழுக்கித் தாவும் மேற்கத்திய பூர்ஷ்வாக்களின் பழைய மொராலிட்டியில்தான் இவர்களும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மார்க்ஸிஸ்ட் கொள்கையில் அதை முக்கியெடுத் திருக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஒரு வேறுபாடு. அவர்கள் புரட்சிக்காரர்களில்லை. துடைத்துப் பளபளபாக்கிய அலங்கோல நம்பிக்கைகளின் மொத்த வியாபாரிகள். நான் சொல்வது புரிகிறதா?”

"ஆமாம் மான்ஸிக்ஞேர்.”

"மீசை முளைக்காத பிள்ளைகளுடையவும் முலை வளராத சிறுமிகளுடையவும் ஃபிலாஸபியே எக்ஸிஸ்லென்ஷியாலிஸம். வளர்பருவத்தின் ஏறு மாறான நடத்தைகள் சிலருக்கு வயதான காலத்தில் சாகஸங்களாகிவிடும். ஸெமிட்டிக் வர்த்தகத்திற்கு அசல் ஆசியனைப்போல வளர முடியவில்லை. அவ் வர்க்கத்தின் தர்மக் கட்டுகளே மேற்கத்திய நாகரிகத்தையும் வாழ்க்கை முறையையும் கட்டி உயர்த்தியிருக்கின்றன. மேற்கத்தியரின் அறிவு விலாசம் அவர்களுடைய கண்டுபிடிப்புக்களிலேயே, மேலே என்னவென்றறியாத நிலையின் வசமாகிவிட்டது.

ஸெக்ஸின் சிம்பல் பாம்பு என்பதை அவர்கள் அறிந்தனர். இதோடு ஸர்ப்ப விரோதிகளுமானார்கள். இக்காலத்தில் ஆட்டம்-பாம் தயாரித்து விற்றுவிட்டு அதைத் தடைசெய்ய வேண்டுமென்று அறை கூவல் விடுவதைப் போல. சில காலமாக அவர்கள் பார்வையும் கிழக்கு நோக்கித்தான்.”

அப்படியென்றால்?”

"பழைய ஆதாமைப் போலவும் ஏவாளைப் போலவும் மேலைநாட்டு நாகரிகத்தின் கனவுலகிலிருந்து தாமே விலகிக்கொண்ட யுவதிகளும் வாலிபர்களும் கூட்டம் கூட்டமாக்க் கல்கத்தாவிலும், தில்லியிலும், கேரளக்கரையிலும் சுற்றியலைகிறார்களென்பது உங்களுக்குத் தெரியுமா? பழமையின் களங்கமின்மைக்குத் திரும்புவதல்ல அவர்களது வெறி. ஸெக்ஸைச் சுற்றி ஸெமிட்டிக் மதக்கோட்பாடுகள் பொதிந்து வைத்த கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். 'கூடாது!' என்ற பெரியதோர் போர்டை முன்னால் வைத்துக்கொண்டு யாரால் வாழ முடியும்! பாம்பு சைத்தானல்ல, படைப்பாளி. கடவுளின் விரோதியல்ல, உதவியாளன். இந்து தெய்வங்களைப் பாருங்கள். விஷ்ணு ஸர்ப்ப சயனி. சிவனின் மார்பில் மாலையே பாம்பு. புத்தனுக்குக் குடை விரித்தது நாகம்தான். பாம்பின்றிக் கடவுள்களால் படைக்க முடியாது.

ஆசியாவின் ஜனப் பெருக்கத்தையும் ஐரோப்பாவின் மக்கள் தொகைக் குறைவையும் இப் பின்னணியிலேயே மதிப்பிட வேண்டும். நாங்கள் காட்டுமிராண்டிகள் என்பதால் குழந்தைகளைப் பெற்றுப் போடுகிறோம் என்றுதானே நீங்கள் பிரசாரம் செய்கிறீர்கள்? நீங்கள் நாகரிகமானவர்களாகையால் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்கிறீர்கள் போலிருக்கிறது. இந்தக் கட்டுக்கதையை இளம் தலை முறை நம்புவதில்லை. உயிர்ச்சக்தி அறுபடுவதா நாகரிகம்? இருபாற் பண்போ அதனுடைய அடையாளக்கொடி? மேலைநாட்டு நாகரிகம் இயந்திரங்களின் வைப்பாட்டியாக மாறியிருக்கிறது. இயந்திரங்களோடு சல்லாபம். அதுதான் உங்கள் ஆனந்தம். பாட்டுக்கேட்க ரேடியோ, படம் பார்க்க டெலிவிஷன்; பயணம் செய்யக் கார், விமானம். கணக்குப்போடக் கம்ப்யூட்டர்; பிண எரிப்புக்கும் மின்சார இயந்திரங்கள். மேலைநாட்டார் வாழ்க்கைக்காக அடைந்துள்ளவை நியாயத்திற்குட்பட்டவையல்ல. நீங்கள் பரிணாமத்தின் பிடியிலிருந்து விழுந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கிடையில்தான் இயலாமைகளின் ஆட்டி வைத்தலுடன் உங்கள் மதங்கள். புதிய மதமாக வளர்ந்துவிட்ட மனத்தத்துவம். இவையெல்லாம் ஸெக்ஸிற்குப் பர்தா அணிவித்திருக்கின்றன. 

உணர்ச்சி ஒளியல்ல, உணர்ச்சி வெட்டுதலே நேருகிறது. மதமும் மனத்தத்துவமும் உங்களுடைய மேம்பாட்டைத் தகர்க்கின்றன. யூரோப்பியன் ஒரு பொய் மனிதன். அவனுடைய சத்தை என்றோ அவன் தலை முழுகிவிட்டிருக்கிறான். நீங்கள் செயற்கையில் பாது காப்பைக் காண்கிறீர்கள். பொய்ப்பல், பொய் மயிர், பொய் மார்பு, பொய் நிறம், பொய் மணம். பொய்ப் பிட்டம். இதோ இப்போது பொய் இதயமும்பொய் மனிதன். இளைஞர்கள் இச் சிதைவிலிருந்து தப்ப ஆவேசப்படுகிறார்கள். அவர்கள் கிழக்கைச் சரணடைகிறார்கள். வெளிச்சம் எப்போதும் உதித்தது கிழக்கில்தான்; அஸ்தமித்தது மேற்கில். புதிய பிறப்பின், வேதத்தின், வாழ்க்கை முறையின், கடவுளினுடைய ஊற்றைத் தேடி ஊர்சுற்றிகளைப்போலத் தாமே பாய்ந்து விழுந்தவர்களும், மேலைநாடுகளின் மதமெனும் கபடங்களை எதிர்ப்பவர்களும் புதிய ஒன்றினுக்காகத் தாகமுற்றவர்களுமான இளைஞர்கள், தடையற்ற ஒரு பாலியல் அறிவிற்காக ஏங்குகுறார்கள். பாலியல் தரிசனமென்றால் வாழ்க்கையின் உயிர்த்தெழல், வீர்யத்தின் புரட்சி. மேலைச் சிந்தனையாளர்கள் புரட்சியின் ஈமச் சடங்குகளுக்குத் தயாராகும் அவசரத்திலிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஒன்றையே எதிர்பார்க்கலாம். குளிர்ந்த சாவு!!”

வாழ்க்கை மறுபடியும் உயிர்த்தெழுவ தெங்கேயென்று தயவு செய்து விவரித்தால், எங்களுக்கு அருள் செய்வதாகும்.” மரியா கொஞ்சி மொழிந்தாள். ப்ரிக்ஸின் பரந்த அறிவின் போதை அவளுடைய தலையில் ஏற ஆரம்பித்திருந்தது. அவள் தானும் கண்டு கொள்ளும் விஷயங்களை வெளியிடும் உற்சாகத்தில் மீண்டும் கூறினாள்:

"இந்தியாவில் ஆவதுதான் சாத்தியம்.”

"இந்தியாவில்தான்.” ப்ரிக்ஸ் நிலைநாட்டினார்! "உங்களுக்குத் தெரியுமா? இந்திய நாட்டில், கேரளாவென்றொரு மாநிலமுண்டு. சிறிய பிரதேசம், நிறைய மனிதர்கள். புதிய தரிசனத்தின் ஆரம்பம் அங்கே யிருந்துதானிருக்கும்.”

"சுவையானது இம் முடிவு.” நீலநிறமான பற்களை அவள் வெளிக் காட்டினாள். அப்போது அவள் தனது நாடான ஃப்ரான்சைப்பற்றி யோசித்தாள். எப்படிப்பட்ட சிதைவு! எவ்வளவு கீழான நிலைமையில் அங்குள்ள சிந்தனையாளர்களும் இலக்கியக் கர்த்தாக்களும்! ப்ரிக்ஸ் ப்ரான்ஸில் பிறந்திருந்தால்! மகத்தானவோர் மூன்றாம் புரட்சியின் தீர்க்கதரிசியாகிவிட்டிருப்பார். அவளுக்கு இத் தவிட்டுநிறக்காரனிடம் எல்லையற்ற அன்பு பிறந்தது. அவள் ப்ரிக்ஸினருகில் பெஞ்சில் வந்து அமர்ந்தாள். "யூ ஆர் ஜீனியஸ்!” சற்று நேரம் அவர்கள் முகத்தை முகம் பார்த்தவாறிருந்தனர். ஒரு வெறும் மகிழ்ச்சி.

"கேரளத்தைப் பற்றி?” அவள் விசாரித்தாள்.               

"மிகப் பழங்காலத்திலிருந்து மலபாரிகள் நாகாராதனை செய்பவர்கள். சரித்திர காலத்திற்கும் முன்பிருந்தே, அங்குள்ள கிராமங்களில் பாம்புச் சோலைகளுண்டு. அக்கே நாக சித்திரங்கள், பந்தலித்து ந்ற்கும் பரந்த மரங்கள். பாம்பு விக்கிரகங்கள். பாம்புத் தோப்பு ஸர்ப்ப மண்டபமே கோயில். பாம்புகள் ஓவியக் கற்களினடியின் சுருண்டுகிடந்து உறங்குகின்றன; சில சமயம் ஓவியக் கல்லின்மேல் வாலையூன்றி நின்று பட்த்தை யுயர்த்தி நடனமாடுகின்றன. கரிமூக்கன்கள், பொன்புள்ளியுள்ளவை, பறப்பவை, தலையில் மாணிக்க மணியை அணிபவை ஆகிய பலவகை ஸர்ப்பங்கள். நாங்கள் ஸர்ப்ப விழாக்கள் கொண்டாடுகிறோம். எங்களது அழகியரான கன்னியர் பாம்புத் துள்ளலின் தாளத்தில் அலைகளைப் போல நடனமாடுகின்றனர். தலைமயிரை விரித்துப் போட்டு, முனைத்த முலைகள் துள்ள, வியர்வையாம் முல்லை மொட்டுக்களை உதிர்த்து, மழை முகில்களைப் போல. அசைந்தாடுவதில் துள்ளித்தளர்ந்த தளிர் மேனியரான மலையாள மங்கைகளின் மனமும் உடலும் சோர்வுறுகின்றன. கலவிக்குப் பிறகுபோல அரியதோர் லாவகம். செயலுணுர்வான ஸெக்ஸின் நாட்டிய வெளிப்பாடு அது. வாழ்க்கையுடன் வருக, விளையாடுக என்ற அழைப்பு. மரியா கொரோஸி, நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படித்ததில்லையா?”

"உண்டு. ஆனால் பல பகுதிகளும் மறந்துபோயிற்று."

"எனக்கு நினைவிருக்கிறது. மறதியும் மேலை நாட்டவரின் ஒரு நீங்கா நோய். உங்களது சரித்திர உணர்வை இன்று பூரணமாகக் காயம் பீடித்திருக்கிறது. ஆதாமிற்கும் ஏவாளுக்கும் பாலுணர்வு உண்டானது பாம்புடன் தொடர்பு உண்டான பிறகே. ஏவாள் பாம்பை ஆராதித்துத் தோற்றுவித்தாள். கடவுள் கொடுக்கத் தயங்கியது அவளுக்குப் பாம்பிடமிருந்து கிடைத்தது. அவள்தான் முதல் பாம்புக் குதியாட்டத்தை ஆரம்பித்தவள். பாம்பு எழுச்சியடைந்தபோது அவளுள் காமம் கலந்தது. அதை அவள் ஆதாமினுள்ளும் புகுத்தினாள். அந் நிமிடம் முதல் அவர்களுக்கு வெட்கம் என்ற உணர்வு உண்டாயிற்று. காமத்தின் அடிநுனியே நாணம். அது காமத்தை மறைப்பதில்லை. மகிழ்ச்சிகரமான தாக்குகிறது. படைப்புச் சக்தியின் மெல்லிய ஏடே வெட்கம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். காமதேவனாகிய பாம்பை வெறுப்பதும், ஆனாலும் அவன் உபதேசித்த காம விளையாட்டைத் தொடர்வதும்- இவற்றினிடையிலுள்ளஉள்ள தர்ம சங்கடமே மேலைநாட்டு வாழ்க்கையை அலங்கோலப்படுத்துகிறது. பல நூற்றண்டுகளாக உங்கள் மனதில் இந்த முரண்பாடு இறுகிப்போயிருக்கிறது. உங்களுடைய மனத் தத்துவம் முழுவதும் இப் பின்னணியில்தான் வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் எப்போதாவது பிறவி உறுப்பைப் ற்றிச் சிந்தித்ததுண்டா, ஒரு பலவீனமானநிமிடத்திலாவது?"

"சிலங்களில்."

"அப்போதெல்லாம் என்னதோன்றியது?"

"அதை எப்படிச் சொல்வது?"

 

"சொல்லவெட்கமென்றால் வேண்டாம். ட்டாயமில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலில் பிறவி உறுப்பு இருக்கவில்லை. இந்தச் ரித்திரஉண்மை உங்களுக்குத் தெரியுமா?"

"ம்ஹூம். இம் முடிவின் அடித்தம் எது?" அவள் அறிந்துகொள்ளும் உற்சாகம் மிக்களாகக் காணப்பட்டாள்.

"பிறவி யுறுப்புக்கள் வுளின் ரிசல்ல‌. பாம்பினுடையவை. ஆணிலும் பெண்ணிலும் பாம்பின் அம்சம் இருக்கிறது. அதொன்று ட்டுமே ஒருவரை ஆணோ பெண்ணோ ஆக்குகிறது. ஹோவாவாவுள் து அடிமைகளைப் பாம்பு பாதித்துவிட்டபோது, செயலிழந்து அடிமைகளிடம் கோபத்தோடு ந்துகொண்டார். ஆனாலும் வுள் யாநிதிதான் - ளைப்புற்றாலும் சினமுற்றாலும் - து டைப்பை ருத்துகிறபோதிலும் அவர் ருணையும் காட்டுகிறார். ஆதிகாலத்திலும் அப்படியே. முதல் அறுவைசிகிச்சை த்தியது வுள் என்பது தெரியுமல்லவா. ஆதாம் என்றன் உறங்கிக்கிடந்தபோது அவனது விலாவெலும்பை யெடுத்து ஏவாளைப் டைத்தார். கடவுள் மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை செய்தார். ஈடன் தோட்டத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் விரட்டியடிப்பதற்கு முதல் நாள் இரவு.”

"இது பழைய ஏற்பாட்டில் இல்லை"

"இப்போது இல்லை. அந்நாளில் இருந்தது. சநாதனிகள் அவ்வரிகளை வெட்டியெறிந்துவிட்டனர். அவர்கள் வேதப்புத்தகத்தையும் திருத்தினார்கள்! கடவுளின் திருமறையைக்கூட. அவர்களல்லவோ பாம்பின் பரம விரோதிகள். எப்போதும் பாம்பைச் சுட்டிக்காட்டி மனிதன் பாவம் செய்தானென்று நினைவுபடுத்துபவர்கள். கடவுள் ஆதி பாம்பைக் கொன்றார். அதைத் துண்டாக வெட்டினார். ஒரு துண்டை யெடுத்து ஆதாமின் தொடைகளுக்கு நடுவில் தைத்து வைத்தார். இரு பக்கங்களிலும் இரு பாம்பு முட்டைகளையும்."

"ரியலி?" மரியா துள்ளிக் குதித்தாள்.

"நிச்சயமாக, பிறகு தயாநிதியான தெய்வம் ஏவாளின் வயிற்றைக் கிழித்தார்."

"! உறி வாஸ் க்ரூயல்!" அவளுக்கு வேதனை உண்டயிற்று.

"ஒரு கூட்டைத் தைத்து வைத்தார். அதற்கொரு பாதுகாப்பான மூடியும். நீங்கள் பாம்பின் நண்பர்களாகையால் எக்காலமும் பாம்பு பூஜை செய்து வம்சம் பெருக்கி வாழ்வீர்களாக என்று இருவருடைய காதிலும் ஓதினார்."

"விஷம்தான் படைப்புச்சக்தி. ஆடவன் தன்னுள் சொறியும் விஷத்தைப் பரப்பி, படைப்புச் செயலுக்குத் தயாராகிறான். அந்த விஷத்தை யேற்று படைப்புச் செயலில் பங்காளியாவற்காகப் பெண். இதுதான் ஆதி பாவம். னிதனைப் பொறுத்தரையிலும் த்தானபேறு. ஸெக்சும் பாம்பும் ஒன்றுதான். பாமபை வெறுப்பர்கள் புணர்ச்சி விரோதிகளும் இயற்கையை எதிர்ப்பவர்களுமாகஇருப்பர். வுளின் உறவினர்களாகஆவற்காகக் ச்சைகட்டுபர்கள் பிரம்மர்யம் அனுஷ்டிக்க வேண்டுமென்றநியதியின் பொருள் இதுதான். ஒவ்வொரு பாம்புக் குட்டியும் அதனுடையகூட்டைச் சேரவேடகை கொள்கிறது. ஒவ்வொரு பாம்புக் கூடும் அதனுடையவிஷத்தை ஏற்கவும். இணை சேர்ந்து பிடித்துப் ர்ந்து ஆடி காமத்தை அவர்கள் ஒரு லையாக மாற்றுகின்றர்.

"அக் கூட்டத்தில் நானும் நீங்களும்."

"ஆமாம். பாம்பின் அம்ங்கள் ம்மிலுமுண்டு. டைப்பு பூர்வமானஅம்சம். ம்சம்பரையை நிலை நிறுத்தும் விஷம். உயிச்சத்து."

எதற்கோ அவள் உள்ளங்கையை உயர்த்தினாள். மிஸ்டர். எஸ் ப்ரிக்ஸ் சொன்னார்: "உள்ளங்கையின் உருவம் நாகத்தின் லையுடையது. ம் விரித்தாடும் பாம்பின் தலையுடையது. பாருங்கள், ஆணும் பெண்ணும் கைகோர்த்துப் பிடித்து நடனமாடுகையில் அவர்கள் பாம்புகளாக நடிக்கிறார்கள்."

ப்ரிக்ஸ் அவளுடைய கையை எட்டிப் பிடித்தார்.

"அவள் விலக்கவில்லை. அவர் எழுந்தார். அவளும். அவளது இரு உள்ளங்கைகளும் அவரது உள்ளங்கைகளில் அடங்கின. ப்ரிக்ஸ் பாடினார். ஆடு பாம்பே, மெய்யும் மனமும் குளிர்ந்தாடு பாம்பே! அவளுடைய பாட்டு அவருக்குப் புரியவில்லை. அது ஃப்ரெஞ்ச் மொழி. ஸெக்சின் மொழியல்ல.

மெதுவாக அவ்விரு உருவங்களும் மறைந்தன. ஸ்டாக்ஹோமின் நந்தவனமும், வீனஸின் சிலையும், பனிமூடிய ஒளியும். வீட்டு அறை. அறைக்குள் இரு பாம்புகள். ஆண் பாம்பு படர்ந்து வீர்யத்துடன் ஆடுகிறது. பெண் பாம்பு பதுங்கிக் கிடக்கிறது. ஆண் பாம்பு மெல்ல அவளுடைய தலையில் முத்தமிட்டது. அப்போது அவளும் தீநாக்குப் போலப் புடைத்துத் தெரித்தெழுந்து படமெடுத்தாடத் தொடங்கினாள். ஆடுகின்ற ஆண் பாம்பும் பெண் பாம்பும் சுற்றிப் பிணைந்தன.

இறுதியில், காவி ஒளிர்ந்த நிலத்தில், சூர்யகாந்திப் பூக்கள் கரிந்து பீடித்த அதே இடத்தில், கதிரவனின் ஒளியேற்று, அசையாமல் பளபளத்துக் கிடந்தது இரு தலைகள் கொண்ட ஒரே ஸர்ப்பம்!

 

கதாசிரியர் அறிமுகம்:

 

எம். கோவிந்தன். 

பிறப்பு 1919-ல். வாழ்க்கைக் கஷ்டத்தினால் மேற்படிப்பு படிக்க இயலாமற் போயிற்று. சென்னையில் சிறியதோர் வேலையிலிருந்து கொண்டு ஏராளமாக வாசித்தார். எம். என். ராயின் விசிறியும் ராடிக்கல் ஹ்யூமானிஸ்டுமாக மாறினார். ராயுடைய நெருக்கம் சிந்தனாபூர்வமான சாத்யதைகளை வளர்த்தியது. கேரளம் என்ற மாகாணம் உருவானதும் திருவனந்தபுரத்தில் அரசாங்க வேலையில் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் அரசாங்கத்துடன் உண்டான கருத்து வேற்றுமையால் வேலையை ராஜினாமா செய்தார். கேரளம் நெடுக மக்களாட்சிப் பற்றாளர்களைக் கூட்டியும், ’ஸமீக்ஷா என்ற மாதப் பத்திரிகைளை நடத்தியும் தனது சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தினார்.இதற்குள் இந்தியாவின் அறிவு ஜீவிகளுக்கு நடுவே விரும்பத்தக்க ஓரிடம் கிடைத்துவிட்டிருந்தது. அடிப்படையான சிந்தனாசக்தி கொண்ட அவர் மலையாள மொழியில் வேதாந்தமும், படைப்பு பூர்வமான மட்டங்களில் கனத்த ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் கவிதைகள் எழுதுகிறார். ஒரு கதாசிரியன் என்பதைவிட ஒரு சிந்தனையாளரும் கவிஞருமாவார். ஒரு எழுத்தாளரும் டாக்டருமான பத்மாவதி இவரது மனைவி.

 

நூல்கள் - ஞானஸ்தானம், மேனகா (கவிதைத் தொகுப்புக்கள்), அரசியின் நாய் (கதைத் தொகுப்பு), நீ மனிதனைக் கொல்லாதே (நாடகம்), தொடக்கம், சற்றுச் சிந்தித்தாலென்ன? அறிவின் பலன்கள், மன்பதை மதிப்புக்கள், கம்யூனிஸத்திலிருந்து முன்னே, சைத்தானும் மனிதனும், உயில், பஷீரின் அருமை மூஷிகன், கவிதைகள் நெருக்கங்கள் (பிரபந்தங்கள்).

 

முகவரி - 77-பி ஹாரிஸ் ரோடு, மௌன்ட் ரோடு, சென்னை - 2

-----------