இன்னொருவன்

கதை:  பி.பத்மராஜன்

தொகுப்பு:  எம்.முகுந்தன்

மொழிபெயர்ப்பு : .இராஜாராம்

 

தன்னைப்போல ஒருவன் இச் சிறிய நகரத்தில் எங்கேயோ இருக்கிறான்; மன உளைச்சலுடன் ஜெ. புரிந்துகொண்டான். சரிவான இறக்கத்தில் மிதித்து இறங்கிவரும் சைக்கிள் ஆசாமி கஷ்டப்பட்டு பிரேக் பிடித்து ஜெ. யிடம் கேட்கிறான்: “’எம் தானே? எவ்வளவு நாளாச்சு பார்த்து!”

சிவந்த கண்களும், கொம்பு மீசையும், முகத்தில் வெட்டுக்காயங்களும் கொண்ட சைக்கிள்காரன்.

நான் எம். இல்லை.” ஜெ. பயந்து நடுங்கிக்கொண்டு சொன்னான். சைக்கிள் குப்புற ஓட்டத்தைத் தொடர்ந்தது. தியேட்டரில் பக்கத்து ஸீட்டில் இருந்தவன் லைட் எரிந்தபோது முதுகில் தட்டியவாறு கேட்டான்: “எங்கேயும் ஒன்னைப் பார்க்கிறேனே?”

நான் எம். இல்லை.” ஜெ. திடுக்கிட்டுச் சொன்னான்.

மயிரடர்ந்த கையை உயர்த்தி அவன் மன்னிப்புக் கேட்டபோதிலும் பிறகு ஜெ.யினால் உட்கார முடியவில்லை. மீண்டும் லைட் அணைந்தபோது எழுந்து போய்விட்டான்.

அப்படியானால் என்னைப்போலொருவன் இந்த டௌனில் வெகு காலமாக வசிக்கிறான். ஜெ. புரிந்துகொள்கிறான்.

ஜிம்னாஷியத்தின் முன்னாலுள்ள ரோட்டின்மீது, ஸ்டேடியத்தின் வளைவில் ஒளித்து நின்று, மரங்கள் இலைகளை நீட்டி நிழல் தந்தன.கைவேலைப் பொருட்கள் விற்கும் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து காரில் ஏற விருந்த மத்ய வயதுக்காரன் நாக்கைச் சொடக்கிச் சப்தமெழுப்பிக் கூப்பிட்டான். நீரில் கல் விழும் ஒலி, இதோ, மீண்டும் எம். தேவைப்

படுகிறான். அசைந்து ஜொலிக்கும் பான்ட்டும், சுருட்டுமாகப் பணக்காரன் பக்கத்தில் வந்தான். கோபத்துடன் கையை மடக்கிக் கொண்டு சொன்னான்: “சொன்னாச் சொன்னபடி செய்யணும்.” 

நான்...” ஜெ. சொல்லத் தயாரானான்.

"பணம் வாங்கிட்ட பிற்பாடு அதை எதற்காக வாங்கினதுங்கிறதை மறக்கக்கூடாது." அவனுடைய வாயிலிருந்து துர்நாற்றம் வீசியது.

"உங்களுக்கு..." ஜெ' யைச் சொல்லவிடாமல் பெருங்குரல் எழுந்தது.

"சுகேசினியைக் கொண்டு வரப்போகிறாயாம்! ஒண்ணு பணத்தைத் திரும்பித் தரணும். இல்லாட்டா இன்னைக்கு ராத்திரி.."

" நான் ஜெ. எம் அல்ல."

கோபத்துடன் நடக்கத் தொடங்குவதற்குள் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து கார் அவனைக் கடந்து போயிருந்தது.

எம். கெட்ட நடவடிக்கைகள் கொண்டவன். அது போதாதென்று எதிர்ப்படுபவர்களை மிரட்டிப் பணம் பண்ணுகிறவன் வேறு. ஜெ. முடிவுக்கு வந்தான்.

அவனுக்குப் பிறழவில்லை.

என்னவானாலும் ஒருமுறை தன் உடலுள்ள, தனது இந்த முகத்தை ஒரு முறை காண வேண்டும்.

ஜெ. பாக்கெட்டில் கத்தியுடன் நடந்தான்.

முகங்களிலெல்லாம் பார்வையைப் பாயவிட்டான். நீளமான கண்கள். அவற்றிற்கு மேலே ரோமம் விதைத்த கோடுகள். வர்ணம் தீட்டியதும் தீட்டாததுமான துவாரங்கள். மேலும் கீழுமாக நாசித் துவாரங்களும், காதுகளும், நாற்றமடிக்கும் குகைகளிலிருந்து நாக்குகளும், எத்தனை கோடி ஆனால், தனது இன்னொரு சாயலைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் லாட்ஜில் ஆணியில் தொங்கும் உடைந்த கண்ணாடியில் ஒளிபட வேண்டும்.

மாலை மணி ஐந்து நாற்பது என்று ஜெ' யின் வாட்ச் அறிவிக்கிறது. அதன் அர்த்தம், கடந்துபோகும் வாட்சுக்களிலெல்லாம் நேரம் ஐந்து நாற்பத்தைந்துக்கும் ஐந்து முப்பத்தைந்துக்கும் நடுவில் என்பது. ஒவ்வொருத்தனும் அவனவன் வாட்சைச் சுற்றி அலைகிறான். பத்து இருபதுக்குப் பாலத்துக்குப் பக்கத்திலே நிற்கிறேன்; வருவாயா? ஒன்று முப்பதுக்குத் தெற்கிலிருந்து வரும் (மகளிர்) பஸ்ஸில் இரண்டாவது ஸீட்டில் கிழக்கு ஓரமாக சுந்தரி இருப்பாள். மூன்று பதினைந்திற்கு சொறிபிடித்த பையன் மாலைப்பதிப்பு விற்கக் கிளம்புவான். பூத்தில் பால் வாங்க வந்தவர்கள் கலையும்போது மணி மூன்றே முக்காலா யிருக்கும். அப்படியப்படி...... 

ஜெ'யின் வாட்சின் மேல் இன்னொரு வாட்ச் உராய்ந்தது. ஒருவனுடைய காலச் சக்கரம் மற்றவனுடையதின் மேல் உராய்ந்திருக்கிறது. ஜெ' க்கு அப்படித் தோன்றியது.

நிறைந்து வழியும் ராஜ வீதி. இடுப்பு வரை ஒரே அமைப்பும், இரண்டு கால்களுமுள்ள ஆண் பெண்கள் ஒரே சமயத்தில் இடதுகால். ஒரே சமயத்தில் வலதுகால் என்ற கிரமத்தில் நகர்த்தி சஞ்சரிக்கும் அந்தி.

நல்ல வேளை. வாட்சில் கீறல் விழவில்லை.

ஜெ. தலையை உயர்த்திப் பார்க்கும்போது; இது எம் தான். ஆணியில் தொங்காத கண்ணாடி.

எம் தானே?”

ஆமாம், ஜெ.”

எப்படித் தெரிஞ்சுது?”

பலரும் என்னைத் தப்பா நினைச்சதுண்டு.”

ஜெயின் பாக்கெட்டின் மேல் வேட்கை நிறைந்த ஒரு பார்வை வந்து விழுந்தது. பாக்கெட்டின் உள்ளே வெளிறிப் பழுப்பேறிப்போன பத்து பைசா பஸ் டிக்கட் ஒன்று தனியாக நடுவொடிந்து செத்துக் கிடந்தது.

என்ன செய்யறீங்க?” ஜெ. சும்மா குசலம் விசாரித்தான்.

சும்மா நடக்குது எம். சிரித்தான். ரொம்ப நட்பைக் காட்டிக் கையைப் பிடித்துக் கொண்டான்.

வேலை?”

குறிப்பா அப்படியொண்ணுமில்லை எம் சொன்னான் மத்தவங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்து ஒருவிதமா நாளை ஓட்டிக்கிட்டிருக்கேன். ஸார் அது முன்னாலேயே தெரிஞ்சிருக்கு, ஸார் - ஜெ. (வெட்கம் கெட்ட நாய்).

ஜெ. பிரம்மச்சாரி. ஆனாலும் ஏகக் கஷ்டம். குறைந்த சம்பளக்காரன். சிறிய தொகைகளை மணியார்டர் செய்து அவற்றின் ரசீதுகளைச் சேகரித்துக் கூட்டிப்பார்த்து, வீட்டைத் தாங்குபவன் என்று மூச்சு முட்டப் பெருமைப்படும் சுபாவம் கொண்டவன். தன்னை அறிமுகப் படுத்திக்கொள்கையில் யாரிடமானாலும் இந்த விவரத்தைச் சொல்வான்.

தோ, பாரு, என் தோள்கள் ஒரு வீட்டைச் சுமக்கின்றன. தெரியலே?”

எம்.மிடமும் சுட்டிக் காட்டினான்.

 

எம். அவனை விட்டுவிட்டுப் போய்விட்டான்.

மறுபடியும் சந்திப்பதற்குள் எம். குபேரனாக மாறியிருப்பான். “இந்நாட்களில் வெற்றி இப்படிபட்டவர்களுக்குத் தான். கயமைக்கும், கெட்ட நடத்தைகளுக்கும் ஊதியம் கிடைக்கும் காலம்.)

 

ஞாயிற்றுக்கிழமை பகலில் பார்க்கில் அலைந்தான். தளர்ச்சியடைந்தபோது வேஷ்டியை அவிழ்த்து எறிந்தான். பூலில் இறங்கிக் கைகால்களை அடித்து நீந்தினான். மூக்கில் தண்ணீர் ஏறிற்று. காது அடைத்தது.

நீரினடியில் மூழ்கி மல்லாந்து மேலிருந்து கனன்று விழும் சூரியன்களைக் கண்டான். கண்ணிமை மயிர்மேல் குமிழிகள் பளபளப்பதைப் பார்த்து ரசித்தான்.

உடம்பைத் துவட்டினான். குளிர் காற்றேற்று, வாழ்க்கையும் குமிழிதானே என்ற நினைப்புடன் நடக்கையில் ஒரு குழந்தை ஓடிவந்து ஒரு கடிதத்தைக் கொடுத்தது.

"மஞ்சள் புத்தகங்களில் வர்ணித்த நாலு போஸ்களில் அடங்கிவிடும்

ஒருஇரவுதானோ காதல் என்பது?"

திரும்பிப் பார்க்கையில் குழந்தையைக் காணோம்.

பெண்ணின் எழுத்து: "புதிய டூத்பேஸ்ட்டின் சுவை போலத்தான் ஒவ்வொரு புதிய பெண்ணும் என்று நீங்கள் சொல்வதுண்டு. ஆனால் அதைச் செய்து காட்டிவிடுவீர்கள் என்று நான் ஒருபோதும் கருதியிருந்ததில்லை, துஷ்டன்."

எம்.துஷ்டன். கடிதத்தின்கீழே தான் சாவேன் என்று அவள் எழுதியிருந்தாள்.

"வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு ஸானிட்டோரியத்தின்

எதிரேயுள்ள பஸ் ஸ்டாப்பிற்கு வருவீர்களா?"

ஜெ. வியாழக்கிழமை லீவு எடுத்தான். குறிப்பிட்ட இடத்துக்குப் போனான். உட்புறமாகச் சுருங்கிய பின்பாகமும், கசங்கிய சீட்டுபோன்ற மார்பு மட்டுமே மிஞ்சியிருந்த இனிய வயதுக்காரியான ஒரு பெண் பிரேதம் குறிப்பிட்ட நேரத்தில் ஸானிட்டோரியத்திலிருந்து குதித்து விழுந்தது.

"உங்களோடு ஓரிடத்திற்கு வந்தால் (ஹோட்டலுக்கானாலும், எந்த நரகத்திற்கானாலும்) உங்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன். கூட்டாளி போலிருக்கிறது. நல்ல பணம் கிடைத்திருக்கும், இல்லையை?" அவள் அழுதாள். " உங்களை நம்பினதால் நான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன். என் வாழ்க்கையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருக்கிறீர்கள். இப்போது இதோ

கடைசியில் இப்படியும்."

 

"நான் எம்.அல்ல." ஜெ.முணுமுணுத்தான்.

ரோட்டின் குறுக்குக் காற்றில் ஓராத்மா கரைவதைக் கண்டான்.

நடுவில் ஒருமுறை, கடந்து சென்ற ஒரு காரின் முன் ஸீட்டில் தனது பிரதிச் சாயலை தரிசித்தான். பிறகு பல வாகனங்களிலும், ஒருபோதும் சிரிக்காத தான் பீறிட்டுச் சிரித்துக்கொண்டு விரைவதைக் கண்டான். ஒரு மத்யானத்தில் ஏர்-போர்ட்டிற்குப் போகும் பஸ்ஸிலமர்ந்து கெட்டிக்காரனான தான் ஏமாளியான தன்னைப் பார்த்துக் கைவீசினான்.

ஜெ. தனக்குள் மனச் சோர்வுற்றான்.

அவன் கோவிலுக்குப் போனான். எம்'மின் உருவத்தை மட்டும் தந்து விட்டு ஏன் அவனுடைய அதிருஷ்டங்களை.யும் தனக்குத் தரவில்லை என்று தெய்வத்திடம் கடுமையாகக் கேட்டான்.

பிறகு என்ன கிடைத்தது?

ராணுவத்தினரின் கான்டீனிலிருந்து ரம் வாங்கித் தருகிறேனென்று சொல்லித் துட்டு வாங்கிக்கொண்டு ஒளிந்து திரிகிறாயல்லவா?

நான் ஜெ.

கடன் வாங்கினால் திருப்பித் தரணும். விசாரித்துக்கொண்டு வருகையில் தெரியாததைப்போல நடித்தால் கொன்னு தொலைச்சுப்புடுவேன். ராஸ்கல்.

நான் ஜெ'யாக்கும், மிஸ்டர்.

உங்களுடைய பிளட்டின் ரிஸல்ட் கிடைத்தது. பாஸிட்டிவ். ஏதானாலும் சீக்கிரம் செய்துகொள்ளணும்.

நான் ஜெ., எம் அல்ல.

அக்கா செத்துப்போவேனென்று சொல்லச் சொல்லி அனுப்பினாள்.

நான் எம். இல்லை குழந்தே. ஜெ'யாக்கும்.

இனிமேல் இதை மூடிக் கட்டிக்கொண்டு நடக்க முடியாது. இப்போதே சிநேகிதிகள் எல்லோருக்கும் சந்தேகமாக இருக்கிறது. ஒரு மாசம் கூட ஆனால்..

நான் ஜெ. இக் கடிதம் எனக்குள்ளதல்ல.

அன்று சொன்ன தங்கம்.

ஐயோ, நான் ஜெ. நான் ஜெ'யாக்கும்.

தன்னைத் தோற்கடித்து இன்னொருவன் பணக்காரனாகியிருப்பான். கார் வாங்கியிருப்பான். ரோட்டரி கிளப்பிலெல்லாம் பிரசங்கம் செய்வதும், ஹோட்டல் அறைகளில் வாந்தியெடுப்பதும், காலேஜ் மாணவிகளுக்குப் பண் உதவி செய்வதும், தொளசொளத்த ஆடைகள் உடுத்துவதும், யாரிடத்திலும் வினயமாகப் பேசுவதுமாக இவையெல்லாம் செய்துகொண்டிருப்பான்.

ஜெ'க்குப் பொறாமை உண்டாயிற்று.

அவன் தெரிந்தவர்களைப் பார்த்தால்கூடக் குனிந்து நடந்துபோகும் ஒரு மரமண்டையாக மாறினான்.

ஒருவனுக்கு ஒரு பட்டணத்தில் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும்

வசிக்கலாம்.

பத்து வருடங்கள் தொடர்ந்து வசித்தபின் ஒருவன் அவ்விடத்தில் ஒரு சரித்திரப் பொருளாக மாறிவிடுகிறான். அவ்வளழுதான். அதெப்படி? ஒருவனின் வெளித் தோடுகளைக் கரையான் கொண்டு போகிறது. ஒருவனின் கம் மூக்கு, எல்லாவற்றையும் மூடி சிலந்தி வலை பின்னுகின்றன. வரும்போது வாங்கி. பான்ட்டுகள் மட்டும் அன்றும் நிலைத் திருக்கின்றன. கிழிந்து தைக்கப்பட்டவை. "நீங்கள் சொன்னது சரிதான்." காஃபி ஹௌஸின் முன்னால் படிந்து சேர்ந்து கொண்டிருந்த, புதிதாகப் பெற்று வளர்ந்த கிருமிகள், ஜெ. கடந்து செல்கையில் இரகசியம்பேசின." "தினைந்து வருடத்திற்கு முந்தைய ஃபாஷன்--"

சரித்திர வஸ்துவின் தலைசீவலும், கை மடக்கி வைக்கும் முறையும், ஷூக்களும் முதலிய ஃபாஷனின் மாற்றங்களைக் குறித்து ஆராய்ச்சி நடத்தும் மாணவர்கள் கவனமாகப் படித்தனர். அவற்றைப்பற்றிய விரிவான குறிப்புகள் எடுத்தார்கள். மீண்டும் ஒரு தடவை, இரண்டாம் முறையாக எம்'மை எதிர்கொள்ளவேண்டி வந்தது. இப்போதைய தன் முகத்தின் பிரதிச்சாயல், காலம் ஒரே மாதிரிதான் எல்லோருக்கும் நகருகிறது எந்று தோன்றுகிறது. ஐந்து நிமிட வித்யாசம்கூட முகச்சுருக்கங்களில் காண்பதற்கில்லை. இருவரும் இப்போது ஒரே போல.

எம். பெரிய பணக்காரனாயிருப்பான். ஜெ.மனதிற்குள் முடிவு செய்தான்.

எம். பக்கத்தில் வந்தான். " ரொம்ப நாளைச்சே, பார்த்து."

"நூத்துக்கு நூறு சரி."

குதிரைச் சாணம் அரைந்து சேர்ந்த ரோட்டில், நடந்து போகிறவர்களின் கபம் உலர்ந்து, குமிழ் குவிந்திருந்தது. வாழ்க்கை! எம். அதன் மேல் துப்பினான். இரத்தம் கலந்த சிறு துர்நாற்றம் கொண்ட துப்பல் ரோட்டை நனைத்தது. உடையாத குமிழுக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுத்தது.

"மாரியேஜ் எல்லாம் ஆயிடுத்தா?"

"எங்கே! கடமைகள் எல்லாம் தீர்ந்து ஒரு மாத்திரையாவது வாழமுடியுமோ என்ற சந்தேகம். அதிருக்கட்டும். வாழ்க்கை எப்படி?"

 

"கஷ்டம்."

கோடீஸ்வரனாகலியா?" ஜெ .எதிர்பார்ப்புடன் விசாரித்தான்.

"யாரு?"

"நான் நினைச்சது......."

"குழந்தே." எம். மூச்சிறைத்தான். அவனது பாக்கெட்டின் அடி பாகம் கிழிந்திருந்தது. கண்களில் சிலந்தி வலைகள் காணப் பட்டன. அவற்றில் எட்டுக்கால் பூச்சிகளின் குஞ்சுகளைக் கண்டான். பீளை நிறைந்திருந்தது. இடையிடையே கொழுத்த ஜலம் தலை நீட்டி நரைக்கத் தொடங்கியிருந்த மீசையின் மேல நக்கியது.

ஜெ' க்கு பயம் தோன்றியது. அது புரிந்தபோது எம். கேட்டான்.

"இருபத்தைஞ்சு பைசா வேண்டியிருக்கே!"

பயம் மாறி அனுதாபமாயிற்று.

மொத்தமே இருபத்தொன்பது பைசாவை எம்.முக்குக் கொடுத்தான்.

"நான் நினைச்சது." ஜெ. சொன்னான்.

"உங்களுக்கு நல்ல வருமானம் இருந்ததென்று."

"தப்பான ஊகங்கள். நம்மையெல்லாம் காப்பாற்றுபவர்கள் பொது ங்கல்லவா, ஜெ? பிறகு எப்படி."

"ழைய தொழிலெல்லாம் ----"

"நிறுத்திட்டேனாங்கரியா? அவை இப்போது வாழ்க்கையாக்கும். வாழ்மூச்சு."

எம். ன்றி கூறினான். பத்தொன்பது பைசா கொடுத்தற்காக‌. பிற்பாடு நடந்தான். க்கையில், பொடிந்துபோனண்களில் சிலந்திக் குஞ்சுகள் ஓடி விளையாடின‌. சியும் ட்டினியும் முன்போலவே நிர்வாணமாகம் தொடரும் ண்கள்.

"உன்னைப்போல் ஒருவன்." ஜெ. உள்ளுக்குள் சிரத்தையுடன் அழைத்துச் சொன்னான்.

"பிரம்மச்சாரியும், த்துப் தினைந்து இன்க்ரிமென்டுகள் வாங்கியர்ன்மெண்ட் உத்தியோகஸ்தனும் ஆன உன்னைப்போலஇதோ ஒருவன்." நான்கு ண்களிலும் ஒரே விதமானசிலந்திகள்.

இரு மூக்குகளிலும் ஒரே அளவு கொழுப்பானஊற்று.

 

வாழ்க்கையில் முதன் முதலாக ஜெ' ய்க்கு ஒரு வெறியை அடக்கமுடியாமலாயிற்று.

யாரிடமாவது இதைச் சொல்லவேண்டும்.

 

கதாசிரியர் அறிமுகம்:

 

பி. பத்மராஜன்

1945-ல் ஆலப்புழையில் பிறந்தார். கெமிஸ்ட்ரி கிராஜிவேட். 1665 முதல் ஆகாசவாணி திருவனந்தபுரம் நிலையத்தில் அறிவிப்பாளராக வேலை பார்க்கிறார். கடந்த ஏழு வருடங்களாக வழக்கமாகக் கதைகள் எழுதி வருகிறார். இதயத்தைத் துளைத்து ஏறும் தன்மையது அவருடைய நடை.

நூல்கள் - புதிர், மற்றவர்களின் வேனல், இன்னொருவன், புகைக் கண்ணாடி, ஒன்று இரண்டு மூன்று (கதைத் தொகுப்புக்கள்); நட்சத்திரங்களே காவல், பருவ மாற்றங்களின் பரிசு, இதோ இங்கு வரை; வாடகைக்கு ஒரு இதயம் (நாவல்கள்.)

முகவரி: C/O ஆகாசவாணி, திருவனந்தபுரம், கேரளா.

----------