இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப்பற்றி ஒரு குற்றச்சாட்டு

 

கதை:  ஸக்கரியா

தொகுப்பு:  எம்.முகுந்தன்

மொழிபெயர்ப்பு : .இராஜாராம்

 

ஸார்,

எத்தனையோ நூற்றாண்டுகள் பழையதான பெரிய ஸ்தாபனமாகும் இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரி. இந்த நிறுவனம் இன்று தகர்ந்துபோய்க் கொண்டிருக்கின்றது. இன்றைய நிலை தொடர்ந்தால் இது சீக்கிரமே அழியும். அதிகாரிகளுடையவும் பொது ஜனங்களுடையவும் உடனடி கவனத்திற்காக இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரி சம்பந்தமான சில விஷயங்களை நான் எடுத்து வைக்கிறேன்.

நான் லைப்ரரியின் ஒரு ஆயுள் மெம்பர். அதாவது நான் இறக்கும் வரை இந்த லைப்ரரியில் உறுப்பினனாயிருப்பேன். ஒரு நாள் நான் இறந்துபோவேன். ஆனால், இந்த லைப்ரரி இறந்து போகக் கூடாது. அது தொடரவேண்டும். இயேசுபுரம் லைப்ரரியில் பல ஆயுள் உறுப் பினர்கள் இருக்கிறார்கள். அவர்களிலொருவன் என்ற முறையில் நான் அவர்களையும் என்னையும் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்னையை முதலாவதாக எடுத்துக் கூறுகிறேன். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த லைப்ரரியின் எதிர்காலம் எனது வாழ்க்கைப் பிரச்னை. நான் இங்கே ஆயுட்கால உறுப்பினனாக ஆன நிமிடம் முதல் எனது ஆயுளுக்கும் இந்த லைப்ரரிக்கும் பிரிக்க முடியாத ஒரு உறவு உருவாக்கப்பட்டு விட்டிருக்கிறது. வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்த லைப்ரரி இல்லையென்றால் அதனோடு ஒரு தொப்புள் கொடியால் பிணைக்கப் பட்டதுபோல சம்பந்தமுள்ள நான் - மற்ற ஆயுட்கால அங்கத்தினர்களும் நிலைநிற்போம் என்பது என்ன நிச்சயம்? எனக்கு முடிந்த அளவு நாட்கள் அதிகம் வாழ்ந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. நாமெல்லாம் மரணத்திடம் பயப்படுகிறோம். இந்த லைப்ரரிக்கு நாசம் நேர்ந்தால் இதனுடைய ஆயுள் மெம்பர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்று நீங்கள் கருணையுடன் சிந்திக்கவேண்டுமென்று நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

இயேசுபுரம் லைப்ரரியின் சாதரண அங்கத்தினர்களுக்குப் பிரத்யேகமாக ஓர் விண்ணப்பமுண்டு. நீங்கள் பாதுகாப்புள்ளவர்கள். ஆனால், அதனால் நீங்கள் எங்களை மறக்கக் கூடாது. உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் லைப்ரரியிலிருந்து விடுபட உரிமையுண்டு. இன்னொரு மாதம்கூட அங்கத்தினராகச் சேர உரிமையுண்டு. ஆனால் நாங்கள் உரிமைகளற்றவர்கள். எங்கள் வாழ்க்கை இயேசுபுரம் லைப்ரரியின் வாழ்க்கையோடு ஒட்டிப் பிணைந்திருக்கிறது. இயேசுபுரம் லைப்ரரி நிலைத்திருக்கவேண்டியது எங்களுடைய முக்கியத் தேவை. சமீபத்தில் நான் ஆயுட்கால அங்கத்தினர்களின் கூட்டமொன்றைக் கூட்டியிருந்தேன். இக்கூட்டத்தில் லைப்ரரியோடு சம்பந்தமில்லாத பொது ஜனங்களும் லைப்ரரியின் சாதாரண உறுப்பினர்களும் பார்வையாளர்களாகப் பங்கெடுத்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இயேசுபுரம் லைப்ரரியின் இடர்மிகு எதிர்காலம் எங்கள் முகங்களில் எழுதி வைத்திருக்கும் பீதியையும், கடுந்துக்கத்தையும், குழப்பத்தையும் நீங்கள் பார்த்திருந்தால் வெறும் காருண்யத்தின்பேரிலாவது இந்த லைப்ரரி அழிய அனுமதிக்கப்படமாட்டாது.

ஆயுட்கால உறுப்பினர்களின் இந்தக் கூட்டத்தில் நடந்த சர்ச்சைகளில் ஒரு பகுதி எடுத்துக்கூறிய குறிபிட்ட விஷயம் உண்டு. இதை ஒரு பிரதான விஷயமாக நான் கருதுகிறேன். அதாவது, இந்த லைப்ரரி எக்காலமும் நிலைக்குமென்றால் ஆயுட்கால உறுபினர்களாகிய நாங்களும் இதனுடன் சேர்ந்து நிலைக்க மாட்டோமென்று சொல்ல முடியுமா? நம் லைப்ரரியின் உறுப்பினர்களில் வயதாலும் அறிவாலும் மூத்தவராகக் கருதப்படக்கூடிய ஒருவரே இந்த அபிப்ராயத்தை முன்னால் வைத்தார். உடலாலும் மனதாலும் ஆயத்தங்களுடன் ஆயுட்கால உறுப்பினர்களாகிய நாங்கள் முயன்றால், ஒருவேளை, இந்த லைப்ரரியுடன் சேர்ந்து நாங்களும் எக்காலமும் தொடரமாட்டோமென யார் கண்டார்கள்? இப்படியொரு தீர பரிசோதனை நடத்த நாங்கள் தயார். ஆனால் முதலில் லைப்ரரிதான் நிலைநிற்கவேண்டி யிருக்கிறது.

ஆனால் என்னையொரு சுயநலமியாகவும், இந்த லைப்ரரியின் மற்ற ஆயுட்கால உறுப்பினர்களையெல்லாம் ஒரு சுயநலக் கூட்டத்தினராயும் நீங்கள் தயவுசெய்து கருத வேண்டாம். நாங்கள் உங்கள் எல்லாரையும் போல வாழ்க்கையின் நிச்சயமின்யைப்பற்றிப் பீதி கொண்ட மனிதர்களே. எங்களுக்குப் பிரத்யேகமான ஒரு காரணம் இருக்கிறது, அவ்வளவுதான். லைப்ரரி நிலைக்க வேண்டுமென்ற எங்கள் வேட்கை, சாப்பிடவும், வியாதி குணமாகவுமான உங்கள் விருப்பங்களைப்போலத்தான் என்று கருதுங்கள். இல்லையென்றாகவிருப்பதைப் பற்றி யம் யாருக்குத்தானில்லை? நீங்களும் எதனுடையவாவது ஆயுட்கால அங்கத் தினராக இருப்பீர்களானால் எங்களை அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் வாழ்க்கையின் ஆயுட்கால அங்கத்தினர்கள் மட்டுமேயல்லவோ. உங்கள் உறுப்பினர் நிலை முடிகிற நாள் எதிர்காலத்தில் தூர எங்கேயோ ஒளித்துவைக்கப்ட்டிருக்கிறது. உங்களுக்கு அதை சௌகர்யமாக மறந்துவிடலாம். ஆனால் எங்கள் விஷயம் அப்படியல்ல. டாக்டர் மரணத்தைக் குறித்துவிட்ட வியாதியஸ்தனைப்போல நாங்கள். நோயாளியின் வாழ்க்கையைப்போல இந்த லைப்ரரி அழிந்துகொண்டிருக்கிறது. இது அழிந்தால் எங்களுக்கு என்ன நேரும்? நோயாளிகளுக்கு மரணமாவது நிச்சயம். எங்களுக்கோ? ஒன்றும் தெரியாத இந்த நிலைதான் குரூரம். 

இயேசுபுரத்தின் பப்ளிக் லைப்ரரியின் அழிவு அதனுள் பலவிதங்களில் பாதைகளைத் திறந்து பிரவேசித்துவிட்டிருக்கிறது. புத்தகம் கொடுக்கிற பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். இவ்விடம் ஒரு பைத்தியம் பிடித்த பெரிய புத்தகக் குவியல். அலமாரிகளில் வைத்திருக்கும் புத்தகங்களுக்கிடையில் எவ்வித சம்பந்தமுமில்லை. எழுத்து வரிசையையோ, விஷயத்தையோ, ஏன் அளவையோ, நிறத்தையோ அனுசரித்துக்கூட இயேசுபுரம் லைப்ரரியில் புத்தகங்களுக்குள் யாதொரு உறவுமில்லை. ஒரு புத்தகத்திற்கும் மற்றொரு புத்தகத்திற்குமிடையிலுள்ளபந்தம், அவற்றை அந்தந்த ஸ்தானங்களில் வைக்கும் ப்யூனின் அந்தந்த நேரத்தில் தோன்றிய உணர்வற்ற நினைப்புக்களை மட்டுமே பொறுத்தது. ஆனாலும் பல தடவைகள் நான் ஒரே பொருளைச் சம்பந்தித்த, அல்லது ஒரே படைப்பாளியினுடைய, ஒன்றுமில்லா விட்டால் ஒரே பிரசுரகர்த்தர் பிரசுரித்த இரண்டு புத்தகங்களை அருகருகே பார்த்ததுண்டு. ஆமாம், ஆனால் இது நம் வாழ்க்கையில் காணப்படும் விதியின் எதிர்பாராத அற்புதங்களைப் போன்ற அற்புதங்கள் மட்டும்தான். ஏதோ ஒரு அலமாரியில் ஒரு தடவை சஞ்சயனின் ஒன்றாம், ஐந்தாம் வால்யூம்கள் அடுத்தடுத்து இருப்பதைக் காண நேரிட்டபோது உண்டான பெருமகிழ்ச்சியை நான் இன்றும் நினைவுகூர்கிறேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் ஷேக்ஸ்பியரின் இரு நாடகங்கள் அடுத் தடுத்து இருப்பதை நான் காண நேரிட்டது. ஒரு முறை இளைஞனாகிய ஒரு ப்யூன் ஒரே அளவும் ஒரே நிறமும் கொண்ட புத்தகங்களை ஒன்றாக அடுக்கி வைத்ததை நான் நினைவுகூர்கிறேன். அக்காலத்தில் ஷெல்ஃபுகளுக்கு ஏதோ ஓர் அழகு கை வந்திருந்தது. ஆனால், விரைவிலேயே, கொஞ்சம் கொஞ்சமாக, வேண்டும் என்றில்லாமல், அங்கத்தினர்களும் மற்ற ப்யூன்களுமாகச் சேர்ந்து இந்த அடுக்கை உடைத்தனர். தான் ஒருமுறை நிர்மாணித்த அழகைத் திருப்பிக் கொண்டு வர இளைஞனாகிய அந்த ப்யூன் திரும்பத் திரும்ப பலவித முயற்சிகளும் செய்தான். ஆனால் அவனுடைய வெற்றிகள் ஒவ்வொரு தடவையும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நீண்டிருந்ததில்லை. ஒரு நாள் அவன், ஏனென்று தெரியவில்லை, வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டான்.

ஆனால் புத்தகப் பகுதியின் இக் குழம்பிய முறையைப்பற்றி வேறுவிதமாக சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய நோக்குநிலையிலும் சில எதிர்பாராத உண்மைகளுண்டு. காரணம் என்னவென்றால் இவர்களின் நோக்குநிலையில் இயேசுபுரம் லைப்ரரியின் ஒவ்வொரு அல மாரியும் ஒவ்வொரு உலகம். வெளியுலகின் எல்லா மாறுபாடுகளும் நிறைந்த காகிதம் - உடல் - உலகம். இது இயேசுபுரம் லைப்ரரியின் ஒரு சிறப்போ, குணமோ என எடுத்துக் காட்டலாம். வேறெந்த நூலகத்திலும் இப்படியொரு உலகப்பார்வை உங்களுக்குக் கிட்டியது என்று வராது. ஒரு அலமாரியின் ஏதாவதொரு புத்தகத்திற்காகத் தேடும் ஒருவன் தனது தேடலுக்கிடையில் என்னவெல்லாம் விஷயங்களுக்கும், அறிவுகளுக்கும், சாஸ்திரங்களுக்கும் எதிர்ப்படுகிறான்! தனக்குத் தெரிந்த விஷயத்திற்கு மேலும் விஷயங்களின் மகாசமுத்திரம் உண்டென்ற உணர்வை அவனுக்கு உண்டாக்கவாவது இந்த நிலைமை உதவுகிறது என்பதுதான் இந்தக்கூட்டத்தாருடைய வாதம். 'பூகோளவியல்' என்றெழுதி வைத்திருக்கும் அவமாரியில் நான் கண்டு பிடித்த புத்தகங்கள் கீழ்க்காணும் எல்லா விஷயங்களையும் பற்றியவை. வாழ்க்கைச் சரித்திரம், பயணக் கட்டுரை, பிராணியியல், இலக்கிய விமரிசனம், கணிதம், தத்துவவியல், இசை, சமுதாயவியல், சாமுத்திரிகா சாஸ்திரம், சிறுகதை, விவரணத் தாவர நூல், நகைச்சுவை, பல் மருத்துவம், பாலியல் அறிவு, நடனப்பயிற்சிகள், போர்த் தத்துவம், சரித்திரம், தெய்வ சாஸ்திரம், சுயசரிதை, ஆட்சிமுறைப் பாடங்கள், கிரிக்கெட், மாஜிக், வாழ்க்கை வெற்றி, மருத்துவம், நாடகம், இயற்கை வைத்தியம், மனத்தத்துவம், ஸர்க்கஸ், துப்பாக்கி சுடல், எஸ்க்கார்ட்டாலஜி என்ற இவ்விஷயங்கள் பூகோளவியலின் அலமாரியில் ஒன்றாக இருக்கின்றன. பூகோளவியல் மாத்திரம் இல்லை.

மேற்கூறிய ஒரு விசேஷப் பார்வையோடு பார்க்கையில் இந்தக் குழப்பத்தில் நன்மையும் காணலாம். என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள எனக்குத் தயக்கமில்லை. ஆனால் ஒருவனுக்கு ஒரு லைப்ரரியில் செலவழிக்கக் கிடைக்கு்ம் நேரம் எவ்வளவு சுருக்கமானது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். தனக்குக் கிடைத்திருக்கும் அற்ப நேரத்தில் ஒரேயொரு புத்தகத்திற்காக, தொடர்பில்லாத ஆயிரம் புத்தகங்களைத் தேடி, சம்பந்தமில்லாத ஆயிரம் புத்தகங்களுடையவும் விஷயங்களுடையவும் இடையில் அலையவேண்டி வருவதில் ஒரு குரூரம் இல்லையா? தனக்குக் கிடைத்திருக்கும் அற்ப நேரத்திற்குள் தனக்கு முக்கியமாகத் தேவையானதாகவும், தாம் குறிப்பாக விரும்பியதாகவும் ஒரு புத்தகதை எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்பதுதானே அவர்களுடைய ஒரே ஒரு குறிக்கோள்? நமக்கு வியர்த்தமான இந்த விசாரிப்பில் நஷ்டமாகும் நேரத்தின் பரப்பை வைத்துப் பார்த்தால், அலமாரியில் மற்ற விஷயங்கள் எல்லாவற்றையும்கூட நம் பார்வைக்கு வைக்கும் உலக அறிவு மிகவும் முக்கியமற்றது என்பதே என் அபிப்பிராயம். கடைசியில், தேடலுக்கெல்லாம் பிறகு நமக்கு அவசியமான புத்தகம் இவைகளுக்கிடையிலிருந்து கிடைக்காவிடில், ஒரு வேளை அதற்கு முன்பே லைப்ரரியின் நேரம் ஆகிவிட்டால் பரிச்சயமற்ற இவற்றையெல்லாம் பார்க்க முடிந்ததினால் மட்டும் நமக்கென்ன? உண்மையில், பல அங்கத்தினர்களும் இப்போது குறிப்பிட்ட எதையும் தேடுவதை நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அலமாரிகளுக்கு நடுவில் இருபுறமும் கண்ணையோட்டிக்கொண்டு அலைந்து நடக்க மட்டுமே செய்கிறார்கள். எதிர்பாராத அற்புதத்தால் எதையாவது கண்டு பிடிக்காமலிருக்க மாட்டோம் என்ற ஆசையுடன். ஆனால் இத்ற்கு மிக அதிகமான நம்பிக்கையும், நல்ல எதிர்பார்ப்பும் வேண்டியிருக்கின்றன. இவை நம்மில் எத்தனை பேர்களுக்குண்டு?

மிகவும் குறுகிய நமது காலம் இவ்விதமாகப் பொருளற்றும் பலனற்றும் தேடலில் செலவாவது இயேசுபுரம் நூலகத்தினுடைய அழிவின் ஒரு போக்காகும். தேடல் தவிர்க்க முடியாதுதான். ஆனால் தேடுபவர்களுக்கு உதவுவதற்காக நிர்மாணித்திருக்கும் பொருட்களின் பெயர்கள் எழுதிய வழிகாட்டிகள் பாசாங்கு. ஆனால் அவற்றை நம்பித் தேடுபவனின் நிலை என்னவாகும்? 

வேதனைக்குரிய மற்றொரு விஷயம் இந் நூல் நிலையம் மிக அதிகமான புத்தகங்களை நம்மிடமிருந்து ஒளித்து வைக்கிறதென்பது. அலமாரிகளில் கலைந்த குவியல்களுக்கிடையில் நடத்தும் வழி தவறானாலும் நிரந்தரமான தேடல்களில் நாம் தேடுவது என்றாவது கிடைக்காமலிராது என்ற நினைப்பு நிம்மதியைக் கொடுக்கும். இப்படியொரு சாத்தியக் கூறுதான் வாழ்க்கை தரும் ஆசை. ஆனால் இந்த ஆசைக்கும் இனிமேல் இயேசுபுரம் லைப்ரரியில் இடமில்லை. காரணம் என்னவென்றால் யாரு மறியாமல் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் புத்தகப் பகுதியிலிருந்து மறைந்துகொண்டிருக்கின்றன. அவை ஒருமுறை அலமாரியிலிருந்து வெளியே போய்விட்டால் பிறகு திரும்பி வருவதேயில்லை.வேறு ஆயிரமாயிரம் புத்தகங்களோ என்றால் அலமாரியில் நுழைவதேயில்லை. பழைய புத்தகங்கள் மறைகின்றன. அலமாரிகளில் ஒருபோதும் நுழை யாதவை புதிய புத்தகங்கள். இப்படி இரண்டு விதத்திலும் நூல் நிலையத்தின் இந்தச் சிதைவு, உள்ளது இல்லையென்றாகிறது. புதியது நுழைவதேயில்லை. லைப்ரரியின் உறுப்பினர்களும் இப்படி இரண்டு விதத்திலும் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்கிறார்கள். கடந்த காலத்தில் சேகரித்ததும், நிகழ்காலத்தில் புதிதாக நிறுவியதும் அவர்களுக்கு ஒரே சமயத்தில் நஷ்டமாகின்றன. எதிர்காலம் இந்த நிலைமையின் ஒரு மறுநிகழ்வே யென்றால் அவர்களுடைய உறுப்பு நிலைக்கு என்ன பொருள்? மிக ஏராளமான அங்கத்தினர்கள் இக் காரணத்தால் தங்களது உறுப்புநிலை விடு பட்டுப்போக அனுமதித்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது கடந்த காலமும் நிகழ்காலமுமற்ற இந்த நிச்சயமின்மையிலிருந்து தங்களது தேடல் பலனற்றுப்போகலாமென்ற குரூரமான அறிவிலிருந்து விடுபட்ட வர்கள். ஆனால் நாங்கள்? ஆயுட்கால உறுப்பினர்களாகிய நாங்களோ? நாங்கள் இக்கோணல் சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கிறோம். இதனுடைய கோணலை நிமிர்த்த முடியாவிட்டால் எங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும். இதனுடைய சுழற்சி நின்றாலோ? இது ஒரு வேடிக்கையல்ல, ஸார்.

பழைய புத்தகங்கள் மறைந்துபோவது எப்படி யென்பதை நான் கண்டு பிடித்துவிட்டேன். ஒரு அங்கத்தினர் வாசித்து முடித்துப் புத்தகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தால் உடனே அது கௌன்டருக்குக் கீழேயுள்ள ஒரு குவியலில் சேர்க்கப்பட்டுவிடுகிறது. இங்கே ஒரு பெரிய கோபுரத்தின் ஒரு பகுதியாக அது பல நாட்களில் மாறுகிறது. கடைசியில் கௌன்டரின் மட்டத்திற்கு மேலே தலைதூக்குகிற, தொட்டால் இடிந்து விழுந்துவிடும்போன்ற பல கோபுரங்கள், அந்தச் சிறிய அரைமதி வடிவத்தில் நிறைந்துவிடும்போது அவற்றைக் கட்டுக் கட்டாகப் பிரித்து ஆஃபீஸின் உள்ளேயுள்ள ஒரு விசாலமான அறைக்கு அவற்றை மாற்றுகிறார்கள். இம் மாற்றம் தற்காலிமானது என்பது போலத்தான். அதாவது அவற்றை அங்கிருந்து சௌகர்யமாகத் தரம் பிரித்துத் திரும்ப ஷெல்ஃப்களில் அடுக்குவதே இப்படிக் கொண்டு போவதின் ஆரம்பகால உத்தேசம். ஆனால் இந்த எண்ணம் எத்தனையோ வருஷங்களாக மறைந்துபோய் விட்டது. எதற்காகத் திரும்பி வந்த புத்தகங்களை அந்த அறைக்குள் கொண்டு போகிறார்கள் என்று கேட்டால், இன்று யாருக்கும் தெரியாது. கொண்டு போவது என்கிற வழக்கம் மட்டும் தொடர்கிறது. இவ்வறையின் தரையில் கடந்த அநேக வருடங்களாக அவை சேர்த்து வைக்கப் பட்டிருக்கின்றன. பூதாகாரமான இக் குவியல்கள் ஒன்றன் பின் ஒன்றாக, தரையிலிருந்து விட்டம் வரை உயரமாக அறையைப் பூரணமாக ஆக்கிர மித்துக் கீழடக்கியிருக்கின்றன. அறையுள் நுழைய இனி இடமில்லை. வாசல் பாதிதான் திறக்க முடியும். அதனால், சம்பந்தப்பட்ட ப்யூன் முதலில் புத்தகங்களை வாசலுக்கு வெளியில் கொண்டுவந்து வைக்கிறான். பிறகு அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பாதி திறந்த வாசல் வழியாகக் கைநீட்டி இரு பக்கங்களிலும் மேலுமாக எறிகிறான். அவை என்றென்றைக்குமாக மறைகின்றன.

சீக்கிரமே, இவ்வறையின் வாசலைச் சற்றும் திறக்கமுடியாமல் போகும் என்பது நிச்சயம். அதனால்தான் போலிருக்கிறது - இதன் பக்கத்திலுள்ள இன்னொரு அறை - கார்டு இன்டெக்ஸின் காலியான ஸ்டாண்டுகள் நிறைந்த ஒரு அறை காலியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. லைப்ரரியின் புத்தகங்கள் முழுவதும் இவ்வறைகளுக்குள் மறைய எத்தனை வருடங்கள் வேண்டியிருக்கும் என்று ஆயுட்கால அங்கத்தினர்களாகிய நாங்கள் கணக்குப் போடுவதுண்டு - துடிக்கும் நெஞ்சங்களுடன். ஒரு நாள் இந்த இரண்டாம் அறையின் வாசலும் திறக்க முடியாமல் அடைந்துபோகும். ஆனாலும் எங்களுக்குப் பல ஆசைகளும் உண்டு. லைப்ரரியின் ரெஃப்ரன்ஸ் பகுதியும் அதனுள்ளிருக்கும் இரு இருண்ட அறைகளும் தான் எங்களுடைய முக்யமான வாழ்வாதாரங்கள்(இன்று வரை அப்படி) பிறகு, லைப்ரரியின் உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். புத்தகங்கள் முழுவதும் லைப்ரரியிலிருந்து மறைந்து போனாலும், அரசாங்கத்தின் சம்பள ரிஜிஸ்டரிலிருந்து இந்த லைப்ரரியின் பெயர் அழிந்து போக அவர்கள் அனுமதிப்பார்களா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. பழைய உத்தியோகஸ்தர்கள் பென்ஷன் வாங்கிவிட்டாலும் புதியவர்களை இந்தவெற்று அலமாரிகளின் மேற்பார்வைக்காக வரச் செய்வதுதான் வழி. இந்த நிறுவனத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டது எவ்வளவு நல்லதாயிற்று என்று இப்போது தோன்றுகிறது. எங்களுக்கு இன்னுமொரு ஆசையும் உண்டு. ஞாபக சக்தி குறைந்தவர்களான அங்கத்தினர்களின் கைவசத்தில் திருப்பிக் கொடுக்க மறந்திருக்கும், அல்லது அவர்கள் மனப்பூர்வமாகத் திருப்பிக் கொடுக்காமலிருக்கும் புத்தகங்கள்தான் எங்கள் ஆசை. இப் புத்தகங்களின் திரும்பி வருதல் ஒரு சாத்தியாக இருப்பது வரை லைப்ரரி இல்லாமல் போகாது என்பதே எங்கள் வாதம். எங்கள் விருப்பம். இதை யார் தீர்மானிப்பது? எங்களுக்குத் தெரியாது. நாங்கள் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அப்படி விரும்புகிறோம், அவ்வளவுதான்.

எங்களில் புரட்சி மனப்பான்மையுள்ள சிலர் அக் கூட்டத்தில் ஒரு விஷயம் சொன்னார்கள். புத்தக அலமாரிகள் முழுவதும் காலியாக அதிக நாள் ஆகாது என்ற நிலை வந்தால் உடனே ஆயுட்கால உறுப்பினர்கள் எவ்விதத்திலாவது இயன்ற அளவு புத்தகங்களை அவரவர் வீடுகளுக்குக் கொண்டுபோய்விட வேண்டுமென்பது அவர்கள் அபிப்பிராயம். லைப்ரரி முழுவதும் இல்லாமல் ஆகிவிடுவதைத் தடுக்கும் ஒரு மார்கமாகவே அவர்கள் இந்த யோசனையைக் கூறினார்கள். புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்காத அங்கத்தினர்கள் இருக்கக்கூடுமென்ற நிச்சயமற்ற ஆசையைவிட நாமே ஒரு நடவடிக்கை எடுத்துவிடுவது நல்லது என்று அவர்கள் வாதித்தனர். ஆனால் இது ஒரு அதர்மமான செயலென்று நானுட்பட எல்லோரும் அன்று கருதினோம். ஆனால், உள்ளூர நான் இன்றும் ஆலோசிக்கிறேன். வாழ்வுப் பிரச்னைக்கு முன்னால் எதுதான் தர்மமும் அதர்மமும்? காரணம் என்னவென்றால் இந்த லைப்ரரியில் இனி அதிகம் புத்தகங்களொன்றும் மிச்சமில்லை. முதலில் மனிதன் வேண்டாமோ? அப்புறம்தானே ஸார், தர்மமும் அதர்மமும்.

புதிய புத்தகங்களுக்கு நேர்வது என்னவென்பதையும் குறிப்பிடுகிறேன். அவற்றின் தவிட்டுநிறக் காகிதத்தில் பொதிந்த கட்டுக்களை அவிழ்ப்பதேயில்லை. வருடந்தோறும் அவை தரைமட்டத்திற்குக் கீழே இடங்கொண்ட ரெஃபரன்ஸ் பகுதியை யடுத்துள்ள ஓர் அறையில் குன்றாகச் சேர்கின்றன. நானொரு பழமைவாதி. எனக்கு இன்றைய சிந்தனை, எழுத்து இவற்றின் போக்குகள் புரிவதில்லை. இருந்த போதிலும் நானொருமுறை, அவ்விருட்டறைக்குள் நுழைந்து அவற்றில் ஒன்றிரண்டு கட்டுக்களை அவிழ்த்து எனது சாவிக்கொத்தில் இணைத் துள்ள பென் - டார்ச்சின் உதவியோடு அவற்றில் கண்ணோட்டினேன். இத்தனை நிறைய புது சிருஷ்டிகள் - புதிய உருவங்களும், சிந்தனைகளும், உணர்ச்சிகளும், அழகுகளும் எவ்வளவுதான் பரிச்சயமற்றவையானாலும் - ஒரு இருட்டறையில் கட்டிக்கிடப்பது என்னை வருத்தியது. மற்றொரு விதத்தில் இக் காட்சி எனக்கு ரகசியமான, ஒருவேளை மிகவும் சுயநலமான ஒரு திருப்தியையும் கொடுத்தது. காரணம், இக் கட்டவிழ்க்காத புத்தகங்கள் இங்கே இருக்கம் காலம் வரை லைப்ரரிக்கு ஒரு எதிர்கால முண்டு. மேலேயுள்ள அலமாரிகள் காலியாகி லைப்ரரி பூட்டப்படும் ஒரு நிமிடம் வந்தால் எனக்கு அவர்களைக் கீழே அழைத்துக்கொண்டு வந்து இக் கட்டுக்கலைப் பெருமையுடனும், ஆனந்தத்துடனும் சுட்டிக் காட்டலாம். ஆயுட்கால உறுப்பினர்களாகிய எங்களது ஒரு இரகசிய சொத்தாகும் இவ்வறை.

உண்மையில் ரெஃபரன்ஸ் பகுதியுடன் இணைந்துள்ள இவ்வறை ஒரு பெரிய அறையாகும். ரெஃபரன்ஸ் பகுதியின் ஆஃபீஸ் என்றே இதன் பெயர். ஆனால், வருடக்கணக்காக அதில் குவிந்திருக்கும் புத்தகக் கட்டுகளும், இருட்டுமாகச் சேர்ந்து அதை ஒரு சிறிய அறைபோலத் தோற்றுவிக்கின்றன. கடந்துபோன எத்தனையோ வருடங்களின் புதுமையே இந்த இருட்டறையில் தூசிபடிந்து ஒளிந்து கிடக்கிறது என்று பலமுறை நான் அதன் முன்நின்று சிந்தித்ததுண்டு. இருள் மூடி வைத்திருக்கும் இப் புதுமை என்றாவது ஒருநாள் எங்களுடைய வாழ்வின் மங்கும் திரியை மீன்டும் பளீரீடும் சுடராக ஆக்குமென்ற சிந்தையும் என் மனதுள் அப்போது கடந்து போகும். வாசலில் நின்று சற்று நேரம் உள்ளே பார்த்தால்தான் உள்ளேயுள்ளஇருட்டோடு கண்கள் பழகும். அப்போது இருளின் எல்லைக்குள் துரடிவானபுத்தக் கட்டுக்களின் சுவரும், அவற்றிற்கும் வாசலுக்கும் இடையிலுள்ள இடுங்கிய இடத்தில் ஒரு மேஜையையும், ஒரு நாற்காலியையும், அந் நாற்காலியில் ஒரு மனித உருவத்தையும் காணலாம். இவ்வுருவம்தான் ரெஃபன்ஸ் குதியின் கிளார்க். ஒரு முறை னியாக‌, இங்குள்ளநூற்றுக் க்கானதூண்களுக்கிடையில் அலைந்துகொண்டிருக்கையில், முதன் முதலாகஇந்தஇரசியமானஅறையால் ப்பட்டு, இதனுள்ளே, அந்தகாரத்தினூடே என் பென் - டார்ச்சை அடித்து நோக்கியபோது, நான் எப்படிப் றித் திடுக்கிட்டேன் என்பதை இன்றும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அம் மேஜைக்குப் பின்னால் நாற்காலியில் என்னையும் தாண்டி தூர நோக்கியிருந்த‌, ற்றஉருவத்தை என் கண்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. தனக்குப் பின்புறத்தில், திறக்கப்படாத புதுமைகளின், கட்டவிழ்க்கப்படாத வீனங்களின் ஒரு குவியலோடு ரெஃபரன்ஸ் பகுதியென்ற அந்த விசாலமான ங்கிய வெறுமைக்கு இருளில் காவலிருந்தஅவனை நான் ற்றும் எதிர்பார்க்கவில்லை. க்கு முன்னால் வாசலில் காணப்பட்டநூற்றுக்கக்கானதூண்களுடனோ, அவற்றுக்கிடையில் காலியானமேஜை,நாற்காலிகளுடனோ, ங்கலாகத் காணப்பட்டஅலமாரிகளுடனோ க்குப் பின்புறம் இருளர்ந்தபுத்தக் குவியல்களோடோ அவனுக்கு எந்தஒரு ம்பந்தமும் உள்ளதாகத் தோன்றவில்லை.ஆனால், ஒரு ஆயுட்காலஉறுப்பினனாகியஎனது வேதனைக்கும், வெறுமையுணர்ச்சிக்கும், நிச்ச மின்மைக்கும் னில் நானொரு ஆசுவாசம் ண்டேன். ஆயுட்காலஅங்கத்தினர்ககியஎங்களது பாதுகாப்பிற்காகக் குடியர்த்தி யிருக்கும் ஒரு க்தியைப்போலஅவன் எனக்குக் காணப்பட்டான். அந்தங்கியசாம்ராஜ்யத்தில், ஒருபோதும் வெளியே போகாதரெஃபன்ஸ் புத்தங்களும், இருட்டில் புத்தக் ட்டுகளுமாகியநிதிகளை எங்களுக்காகக் காத்துப் த்திரப்படுத்தியிருந்தஒரு காவல்பூதம். நான் அவனுடன் பேசவில்லை. அவனுடன் பேசி, அந்தஇரசியஅறையின் நிசப்தத்திற்கு ஊறு விளைத்தால் என்னக்குமோ என்றலை,பேச நெருங்கும்போதெல்லாம் என்னை சிந்தனை ப்படுத்தியது. அதுமட்டுமல்ல‌, அவனிடமிருந்து திலாகஏதாவது ப்தம் எழுமென நான் ருதவுமில்லை. நான் அவனைப் பார்த்து அதிகநாட்களாகவில்லை. எத்தனை எதிர்பாராமல் அது நேர்ந்ததெனநான் சொல்லி விட்டேனல்லவா.

ரெஃபன்ஸ் குதியின் நிலைமை அப்படி ஏராளமான தூண்கள் நிறைந்த ஒரு சுரங்க உலகமே ரெஃபரன்ஸ் பகுதி. இரண்டு ஓரங்களிலும் ஒவ்வொரு பல்புகள் மங்கலாக எரிந்து இந்தச் சுரங்கத்தை ஒளியால் இருட்டடிக்கின்றன. இம் மங்கிய வெளிச் சத்தில் தூண்களின் கரு நிழல்களுக்கிடையில் இங்குமங்குமாக நிறுத்தப் பட்டிருக்கும் தனியான அலமாரிகளில் சில கனமான புத்தகங்களின் இருண்டு பிரிக்கப்பட்ட உருவங்கள் காணப்படுகின்றன. இங்கு ஐந்து மாதம் தொடர்ச்சியாக ரெஃபரன்ஸ் நடத்திய எனது ஒரு நண்பர் பிறகு ஆறுமாதம் ஒரு கண் மருத்துவ விடுதியில் கழித்தார். அவருடைய ஒரு கண்ணுக்குப் பூரணமான பார்வை இப்போது மில்லை. ஐந்து மாதம் தொடர்ந்து இங்கு வந்துகொண்டிருந்தஅவருக்கு ரெஃபரன்ஸ் பகுதி கிளார்க் என்றொரு ஆளைப்பற்றி இன்றும் தெரியுமெனத் தோன்றவில்லை. ரெஃப்ரன்ஸ் பகுதியையே நிறையப் பேர்கள் பார்த்திருக்கிறார்களென்று சொல்ல முடியாது. துணிவான மனங்கொண்ட சிலரே இங்கே அபூர்வ சந்தர்ப்பங்களிலாவது இறங்கி வருவதுண்டு. நான் பலமுறை தைர்யத்தைத் திரட்டிக்கொண்டு இத் தூண்களின் சலனமற்ற உருவங்களுக்கிடையே நடந்ததுண்டு. எனது மங்கிய நிழல், தூண்களோடு நிசப்தத்தைக் கட்டிப் பிடிப்பதும், எனது காலோசை ஒரு மூச்சைப் போல அம் மங்கிய இருளில் உயர்வதுமாக இருந்ததுண்டு. அவ்வமாரிகளின் கருத்த உருவங்களைத் தொடவும் பரிசோதிக்கவும் நான் முயற்சித்ததுண்டு. இவற்றைப் பரிசோதித்ததில் ஏராளமானவையும் அகராதிகளாகக் காணப்பட்டன. சிறியதும் பெரியதுமான அகராதிகள். அவற்றைத் தவிர ஒரு பெரிய உடற்கூறு நூல் இருந்தது. மற்றொன்று சித்திரங்கள் அடங்கிய ஒரு பெரியபைபிள். இன்னும் இரு வால்யூம்களில் ஹாவ்லாக் எல்லிஸின் 'ஸைக்காலஜி ஆஃப் ஸெக்ஸ்'. அங்குமிங்குமாகக் கண்ட மற்ற சில புத்தகங்களையும் நான் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்தேன். (எல்லாம் என் பென் - டார்ச்சின் உதவியோடுதான்.) இப் புத்தகங்களெல்லாமே பிசாசுக் கதைகளாயிருந்தன.

ஒருமுறை, ஒரு புத்தகத்தில் ஒரு பிசாசு,ஆளற்றஒரு பாதையில் நடந்துபோகும் ஒருவனின் பின்னால் சப்தமின்றிச் செல்லும் பயங்கரச் சித்திரத்தைப் பார்த்தபிறகு, நான் எப்படி அந்த அரையிருளிலிருந்து விறைத்தும், சோர்வுற்றும், பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டும் படிகளேறி மேலே வந்து சேர்ந்தேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் இக்கும்பலில் நான் கண்டு பிடித்த இன்னொரு புத்தகம் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் 'கமென்ட்ரீஸ் ஆன் லிவிங்'கின் இரண்டாம் பாகம். அன்று எனக்கு என்னைத் தவிர இன்னுமொரு ஆள் அந்தச் சுரங்கத்துள் ஏகாந்தமாக இருக்கிறார், இருளில் மறைந்து இருக்கிறார் என்பதொன்றும் தெரியாமலிருந்தது. எப்படியானாலும் ஆயுட்காலஅங்கத்தினர்களானஎங்களுக்கு இந்தரெஃப்ரன்ஸ் குதியிடமும் அதனுடைய பாதுகாப்பாளனிடமும் பெரியபாசம் உண்டாவது இயற்கையே. ஏனென்றால், முன்பு குறிப்பிட்டதுபோலஇங்கேதான் இழந்து போகாதமாடி அறைகளுக்குள் எறியப்படாதபுத்தங்கள்; இங்கேதான் இன்னும் அவிழ்க்கப்பவேண்டியபுத்தக் ட்டுக்கள்.

ஆனால் ஸார், இன்று என் அற்பமானவிருப்பத்திற்கும் பேராசை யோடு திரட்டிக் கொண்டமாதானத்திற்கும் டுமையானஒரு காயம் ஏற்பட்டிருக்கிறது. நான் அவப்பட்டு இந்தக் குற்றச்சாட்டை, இந்தவிண்ணப்பதை எழுதுகிறேன். இனிமேல் என்னால் காத்திருக்கமுடியாது. ரெஃபன்ஸ் குதியினுடையஅழிவும் ஆரம்பித்துவிட்டதென்று நான் ப்படுகிறேன். இன்று காலை நான் ரெஃபன்ஸ் குதிக்குள் நுழைந்து போய்க்கொண்டிருந்தேன். அங்கே, ஏதோ ஒரு தாங்கமுடியாதநாற்றம் வியிருப்பதாகஎனக்குத் தோன்றியது. இதன் காரத்தைத் தேடுவனிடையில் அந்தஆஃபீஸ் அறைக்குள் நீட்டியஎன் பென் - டார்ச்சின் வெளிச்சத்தில் ரெஃபன்ஸ் குதி கிளார்க் தூக்குமாட்டிக்கொண்டு இறந்து தொங்குவதையே நான் ண்டேன். அவன் தூக்குமாட்டிச் செத்திருக்கிறான். அவன் இப்படித் தொங்கத் தொடங்கி மூன்று நாட்களாவது ஆகியிருக்கவேண்டும். இதன் பொருள் என்ன‌? இனிமேல் என்னக்கப்போகிறது? ரெஃபன்ஸ் குதியின் பாரத்தைத் தாங்கஇனி யாராவது ருவார்களா? அங்குள்ளபுத்தங்களும் ஒவ்வொன்றாகஇனி வெளியே செல்லா தென்று என்னநிச்சம்? நான் உடனேயே ஆயுட்காலஅங்கத்தினர்களின் ஒரு அசாதாரக் கூட்டத்தைக் கூட்டுகிறேன். அநேகம் டிக்கைகளைப் ற்றி அவமாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. அவற்றின் ஒரு பாகம் ட்டுமே நான் உங்கள் முன் வைக்கும் இந்தஎளிமையானகுற்றச்சாட்டு. வுளே இனி என்னக்கும்?

கதாசிரியர் அறிமுகம்:

 

ஸக்கரியா

பால் ஸக்கரியாவின் எழுதுபெயர். 1945-ல் மத்ய திருவிதாங்கூரில் பிறந்தார். எம்.. பாஸான பின் கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்தார். ஒரு வருடம் ரூபி டயர் வொர்க்ஸின் கோயம்பத்தூர் கிளை மானேஜராகவும் வேலை பார்த்தார். இப்போது டில்லியில் ஒரு அமெரிக்கன் புத்தகப் பிரசுரக் கம்பெனியில் வேலை பார்க்கிறார். வெகு இளம் வயதிலேயே இலக்கியப் படைப்பை ஆரம்பித்த ஸக்கரியா, இன்றைய பத்திரிக்கைகளில் நிறைய எழுதி வருகிறார். இரண்டு கதைத் தொகுப்புக்களைப் பிரசுரித்திருக்கிறார்.

முகவரி - ஸி - 31, ஸௌத் எக்ஸ்டென்ஷன், பார்ட்-ஒன், நியூ டெல்லி - 49

--------