சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரித் தமிழ்த்துறை சார்பாகத் தமிழ் இலக்கிய மன்றத் துவக்கவிழா 09.07.2018

ங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரித் தமிழ்த்துறை சார்பாகத் தமிழ் இலக்கிய மன்றத் துவக்கவிழா 09.07.2018 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் அவர்கள், அம்மா, அன்பு, ஆசான், அறிவு என்பது போல தமிழும் மூன்றெழுத்து நமது சிறப்பு விருந்தினர் பழனியும் மூன்றெழுத்துக்காரரர் அவர் கூறும் கருத்துக்களும் முத்தானவை என்று முன்னிலை உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி முதல்வர் அவர்களும் தமிழ்த்துறைத் தலைவரும் நினைவுப்பரிசும் பொன்னாடையும் அளித்துச் சிறப்புச் செய்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய் டிவி புகழ் முனைவர் பழனி அவர்கள், பெற்றோருக்கு நாம் அனைவரும் என்றும் உண்மையாக இருக்க வேண்டும், வாழ்க்கையில் தோல்வியை எண்ணிச் சோர்ந்து விடக்கூடாது, விடா முயற்சியே நமக்கு வெற்றியைத் தேடித் தரும். தோல்விகள் எல்லாம் அனுபவங்களாகும் என்றும், தமிழ் மொழியைப் பயில்பவர்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும் என்றும், வழிகாட்டுவது வாழ்க்கை அல்ல வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கை என்றும் நமக்கான வெற்றிக் கதவை யாரும் அடைத்து வைக்கமுடியாது அது திறக்கும் வரை தட்டிக் கொண்டேயிருங்கள் என்றார். வழிகாட்டுவது வாழ்க்கையல்ல வாழ்ந்து காட்டுவது தான் வாழ்க்கை என்றார். தண்ணீரைக் கூட சல்லடையால் அல்லலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால் பெறுமையாக இருந்தால். வாழ்க்கையில் ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டும். தாயைப் போற்ற வேண்டும். தாய் மொழியை காப்பாற்ற வேண்டும். என பல்வகையான கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறி மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் சிறப்புற உரை நிகழ்த்தினார். விழாவில் கடந்த ஆண்டு தமிழப்பாடத்தில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. விழாவில் சங்கரா கல்லூரி இளம் மேலாண்மைத்துறை மாணவி செல்வி தீபா நன்றியுரை நவின்றார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

படம்:

சிறப்பு விருந்தினர் முனைவர் கே.பழனி அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் எச். பாலகிருஷ்ணன் சிறப்பு செய்த போது எடுத்த படம். அருகில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா உள்ளார்.