நிழற்படம் இல்லை

மாதவையா.ஆ:

பெயர்: ஆ.மாதவையா
பிறந்த இடம்: பெருங்குளம், திருநெல்வேலி
                          
(16.08.1872 –      22.10.1925)

 

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • முத்து மீனாட்சி – 1903
  • பத்மாவதி சரித்திரம் - 1898 – பகுதி 1, 1899 – பகுதி 2, 1924 – பகுதி 3
  • விஜயமார்த்தாண்டம் - 1903
  • Thillai Govindan -  1903
  • Satyananda - 1909
  • The Story of Ramanyana - 1914
  • Clarinda  - 1915
  • Lieutenant Panju  -1915
  • Markandeya -  1922
  • Nanda - 1923
  • Manimekalai - 1923

சிறுகதைகள்:

  • Kusika's short stories  - இரண்டு பாகங்கள் - 1916 , 1923-24
  • குசிகர் குட்டி கதைகள் - ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை 
    -
     1924

நாடகங்கள்:

  • உதயலன் -  ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தின் தமிழாக்கம - 1903
  • திருமலை சேதுபதி - 1910
  • மணிமேகலை துறவு - 1918
  • ராஜமார்த்தாண்டம்  - 1919
  • பேரிஸ்டர் பஞ்சநாதன் - 1924

கவிதைகள்:

  • Poems - 20 Poems - 1903
  • Dox vs Dox poems - 1903
  • பொது தர்ம சங்கீத மஞ்சரி -  1914
  • The Ballad of the penniless bride - 1915
  • புதுமாதிரி கல்யாணப் பாட்டு - 1923
  • இந்திய தேசிய கீதங்கள் - 1925

கட்டுரைகள்:

  • Thillai Govindan's Miscellany - 1907
  • ஆசார சீர்திருத்தம் -1916
  • சித்தார்த்தன்  -  1918
  • பால வினோத கதைகள் - 1923
  • பால ராமாயணம் - 1924
  • குறள் நானூறு -1924
  • Dalavai Mudaliar  - 1924
  • தளவாய் முதலியார் குடும்ப வரலாறு - 1924
  • தக்ஷிண சரித்திர வீரர்கள் -  1925

இவர் பற்றி:

  • தமிழின் முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர். எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நன்கு பரிச்சயம் மிக்கவர். இவர் விவேக சிந்தாமணி என்ற பத்திரிகையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத் தொடங்கினார். இது 1903 இல் முத்து மீனாட்சி என்ற பெயருடன் நாவலாக வெளியானது. 1914 இல் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் பங்கு பற்றி முதல்பரிசு பெற்றார். இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. அ.மாதவையா தனது 53 ஆம் வயதில் மாரடைப்பால் மரணமானார்.


Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).